திருக்குறளும் இந்திரன் முதலியோர் -வள்ளுவம் பேரறிஞர் கி.வா.ஜகந்நாதன்
தேவர்கள் வாழும் உலகம் வானுலகம். அவர் களுக்குத் தலைவன் இந்திரன். இந்திரன் துய்க்கும் இன்பம் மிகப் பெரியது. இந்திர போகம், இந்திர திருவம் என்று வழங்குவதிலிருந்து அவனுடைய வாழ்க்கையின் சிறப்பை உணரலாம். அவனேத் திரு வள்ளுவர் இரண்டு இடங்களில் குறிக்கிருர். நீத்தார் பெருமையைச் சொல்ல வந்த அவர், வானுளோருக்குத் தலைவனும் பேராற்றலுடையவனுமான இந்திரனே தவமுடையோரின் முன் தோல்வியுறுவான் என்று சொல்லுகிருர்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி. - (25)
'புலன்களில் செல்கின்ற அவா. ஐந்தினையும் அடக்கினனது வலிக்கு, அகன்ற வானத்து உள்ளார் இறைவனகிய இந்திரனே அமையும் சான்று’ என்று பரிமேலழகர் உரை கூறி, தான் ஐந்து அவியாது சாபம் எய்தி கின்று, அவித்தானது ஆற்றல் உணர்த்தினைதலின், இந்திரனே சாலும் கரி என்ருர்’ என்று விளக்கினர். அகலிகையை விரும்பிக் கோதம முனிவரால் சாபம் பெற்ற வரலாற்றை தினந்தே இந்த விளக்கத்தைப் பரிமேலழகர் எழுதினரென்று தோற்று கிறது. - இந்திரைேடு தொடர்புடைய புராணக் கதையையே. திருவள்ளுவர் உளம் கொண்டு இந்தக் குறளே அமைத்திருக்கிருர். அவர் உள்ளத்திற் கொண்ட கதையில் ஐந்தவித்தான் ஒருவனும் இந்திரனும் தவத்தின் ஆற்றலே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியும் இருத்தல் வேண்டும். நீத்தார் பெருமை தோன்றச் செய்து தன் சிறுமையைப் புலப்படுத்தியதனுல்தான் இந்திரனேக் கரியாக்கினர்.
இந்தக் குறளின் உரையில் காளிங்கர் என்னும் உரையாசிரியர், தன் பதம் கருதித் தவம் செய்யும் நீத்தார் மாட்டுத் திலோத்தமை முதலிய தெய்வ மகளிரை விடுத்து, மற்று அத் தவம் அழித்து, தவம் அழியாமை நிலைகிற்கையாலும், தனது பதம் விரும்பாமை யாலும் தானே சான்ருய் அமையும் என்று கூறுகிரு.ர். இந்திரன் தவம் அழியாமல் நிற்பவன் என்றும், தன் பதம் விரும்பாதவன் என்றும் அவர் கூறுகிருர். திலோத்தமை முதலியவர்களால் தவம் குலைவாரினும் இந்திரன் தவம் உடையவனென்பது அவர் கொள்கை போலும்! அந்தத் திலோத்தமை முதலியோரால் பலகாலும் இன்பம் துய்க்கும் இந்திரன் ஐந்தவித்தானுக இருப்பது எப்படிப் பொருந்தும்?

மணக்குடவர், இந்திரன் சான்று என்றது, இவ்வுல கின்கண் மிகத் தவம் செய்வார் உளரானல், அவன் தன் பதம் இழக்கின்ருகை நடுங்குமாதலான், இது தேவரினும் வலியன் என்றவாறு’ என்று எழுதினர். மணிமேகலையில், ஆபுத்திரன் பலருக்கும் சோறு அளித்துப் பசிப்பிணி மருத்துவகை விளங்கிய பொழுது, அவனுடைய அறச் செயலால் பாண்டு கம்பலம் நடுங்குவதைக் கண்டு அஞ்சிய இந்திரன் அவனிடம் வந்து அவனுக்கு ஆசை காட்டியதாக ஒரு வரலாறு வருகிறது. தவம் செய்பவர் களுடைய கிலே கண்டு இந்திரன் தன் பதத்தை இழக்க நேருமோ என்று அஞ்சி அவர் தவத்துக்கு ஊறு விளக்கப் புகுந்ததாகப் பல கதைகள் புராணங்களில் வருகின்றன. இவற்றை எண்ணியே மணக்குடவர் உரை விரித்தார் என்பது தெளிவு.
இந்திரன் ஐந்து அவியாமல், தவம் மிக்கவரினும் ஆற்றல் குறைந்தவன் என்ற கருத்தை உடையவர் திருவள்ளுவர் என்பதில் தடை ஏதும் இல்லை.
இந்திரனே, அகல் விசும்புளார் கோமான்’ என்று அறிந்து இந்திரன் என்ற பெயரையும் இக்குறளில் சொல்கிறரர். தேவர்களுக்கு அவன் அரசன் என்பதையும் இதனுல் உணர்கிருேம்.
இந்திரனேப் பற்றிய செய்தி வரும் மற்ருெரு குறளில் அவனே வேந்தன் என்ற பெயரால் குறிக்கிருர்,
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும். - (889)

'காத்தற்கு அருமையான உயர்ந்த விரதங்களே உடையார் வெகுள்வாராயின், அவர் ஆற்றலான் இந்திர னும் தன் பதம் இழந்து கெடும்’ என்பது பரிமேலழகர் உரை. நகுடன் என்பான் இந்திரன் பதம் பெற்றுச் செல் கின்ற காலத்துப் பெற்ற களிப்பு மிகுதியான் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய, அதனல் சாபம் எய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதை உட்கொண்டு இவ்வாறு கூறினர்' என்று மேலும் விளக்கினர் அவ்வுரை யாசிரியர். . .
இங்கும் தவத்தில்ை சிறப்பு அடைந்தவர்களின் பெருமையையும், இந்திரனுடைய ஆற்றற் குறைவையும் இக் குறள் எடுத்துக் காட்டுகிறது. பரிமேலழகர் கூறிய கதையையே எண்ணித் திருவள்ளுவர் இதை அமைத்தார் என்று சொல்ல இயலாது. ஆனாலும் ஏந்திய கொள்கை யார் சீறியதனுல் இந்திரன் தன் பதவியை இழந்த வரலாறு ஒன்றை எண்ணியே அவர் இந்தக் குறளேப் பாடியிருக்க வேண்டும். -
வேந்தனும் என்ற உம்மை இந்திரன் பேராற்றல் உடையவன் என்பதைக் குறிக்க நின்றது. எவ்வளவு பெரிய ஆற்றலே உடையவனாக இருந்தாலும் தவ முனிவர் ஆற்றலுக்கு முன் அவன் ஆற்றல் குறைவுபடும் என்ற கருத்தை வற்புறுத்தவே இவ்வாறு சொன்னர்.
வேந்தன் என்பது இந்திரனுடைய பெயர்.
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்’ (அகத்திணை, 5) என்பது தொல்காப்பியம். -
இந்தக் குறளால் வேந்தனகிய இந்திரன் பேரரசன் என்பதும், ஆயினும் தவத்தினர் ஆற்றலுக்கு எதிரே அவன் ஆற்றல் தாழ்வுறும் என்பதும் புலனுயின.

ஓரிடத்தில் திருவள்ளுவர் காமனே கினைப்பூட்டுகிரு.ர். மக்களுடைய உள்ளத்தில் காம உணர்ச்சியை ஊட்டும் தேவன் அவன். காமத்துப் பாலில் தனிப்படர் மிகுதி என்ற அதிகாரத்தின் ஒரு குறளில் அவனைப் பற்றிய செய்தி வருகிறது.
பருவரலும் பைதலும் காணுன்கொல் காமன்
ஒருவர்கண் நின்ருெழுகு வான்.
இது தோழியை நோக்கித் தலேவி கூறியது. தலைவ னுடைய பிரிவினுல் துன்புற்ற தலைவி சொல்கிருள்; என் காதலருடைய பிரிவினல் நான் துன்புறுகிறேன். அவர் துன்புறுவதில்லே போலும்! என்னிடம் காமத்தை உண் டாக்கி இந்தத் துன்பத்தைத் தருபவன் காமன். அவன் என் காதலர்பாலும் இத்தகைய துன்பத்தை உண் டாக்காமல் பட்சபாதத்துடன் இருக்கிருன். அவருக்கும் துன்பம் உண்டானல் என்னேப் பிரிந்திருப்பதை விட்டு வந்து சேர்வார். அப்படி வாராமையில்ை காமன் எனக்கு மட்டும் இந்த வருத்தத்தை உண்டாக்குகிருன் என்று தோன்றுகிறது. கடவுளாக உள்ள காமன் இப்படி ஒரு பட்சமாக நின்று ஒழுகுவது முறையாகுமா? அப்படித் தான் செய்வதனால் எனக்கு உண்டான துன்பத்தையும் வருத்தத்தையும் காணமாட்டானே? கண்டால் கருணை பிறக்குமே!’ என்ற எண்ணத்தோடு இவ்வாறு கூறு கிருள் தலைவி.
'காமன் ஒருவரிடத்தே நின்று போர் செய்கிருன்; அவன் எனக்கு உண்டான துன்பத்தையும் வருத்தத்தையும் காணுனே? என்பது பாட்டின் பொருள்.
விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறு பட்டான்; இனி யான் உய்யுமாறு என்ன என்பதாம்’ என்று பரிமேலழகரும், நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணுனே? காண்பாயிைன், நம்மை வருத்தானே, தெய்வமாகலான்’ என்று மணக் குடவரும் எழுதியுள்ளார்.
காமன் தெய்வம் என்பதும், நடுகிலேயும் கருணையும் உடைமை தெய்வத்தின் இயல்பு என்பதும் இந்தக் குறளால் உய்த்துணரப் பெறுகின்றன. காமன் ஒருவர் கண் நின்று ஒழுகுவான்’ என்று பொதுவாகச் சொன்னலும், அவன் ஒழுகுதலாவது, தனக்குத் துன்பம் உண்டாகும்படி செயல் செய்வதே என்பது, பருவரலும் பைதலும் காணுன்கொல் என்பதல்ை தெளிவாகும்.
அறத்தைத் தெய்வமாகக் கொள்வது ஒரு மரபு. அறக் கடவுள், தர்மதேவதை என்று சொல்வார்கள். திருக்குறளில் அறக் கடவுள் சில இடங்களில் காட்சி தருகிறது. அன்பு இல்லாதவர்களே அறக்கடவுள் ஒறுக்கிறது; கோபம் இன்றிக் கற்று அடங்கியவனுக்கு நலம் செய்ய அவன் செல்லும் வழியில் அவன் வரும் செவ்வி பார்த்து நிற்கிறது; பிறனுக்குக் கேடு சூழ்பவனுக்குக் கேடு பயக்கிறது.
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதன அறம். (77)
'எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து வருத்துவதைப்போல, அன்பு இல்லாத உயிரை அறக் கடவுள் வருத்தும் என்பது பொருள். எலும்பு இல்லாத புழுவை வெயில் தனியே கொடுமை செய்து வருத்துவதில்லை. எல்லா இடங்களிலும் வீசுவதுபோல நடுநிலையில் நின்று அது வீசுகிறது. ஆயினும் தன்னுடைய வலியின்மையால் புழு அதனைத் தாங்காமல் மாய்கிறது. அவ்வாறே அறக்கடவுள் நடு கிலேயில் நின்று தன் ஆணேயைச் செலுத்துகிறது. அன்பு இல்லாத உயிர்கள் அவ்வாணமுன் கிற்கமாட்டாமல் ஒழிகின்றன.
அன்பு உள்ளாரை அறம் காய்வது இல்லை என்ற பொருளும் இதல்ை பெறப்படுகிறது. -
கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. (130).
அறக் கடவுள் யாரிடம் சேரலாம் என்று ஏங்கி நிற்கிறதாம். எவன் சினத்தை அடக்கினவனே, எவன் நன்கு கற்று அடக்கத்திற் சிறந்து நிற்கிருனே அவன் வருகிருன் என்று தெரிந்து, அவன் வரும் வழியில் காலம் பார்த்து நிற்குமாம்.
இப்பெற்றியான அறம் தானே சென்று அடையும் என்பதாம் என்று பரிமேலழகர் இக்குறளின் கருத்தை உரைப்பார். -
தியாருக்குத் தீங்கு விளையக் காரணமாகும் அறக் கடவுள், நல்லாருக்கு நன்மை செய்யும் என்ற உண்மையை இந்த இரண்டு குறள்களாலும் தெரிந்து கொள்ளலாம்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க; குழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. (204)
தீவினை அச்சம் என்னும் அதிகாரத்தில் வருவது இக் குறள். ஒருவன் பிறனுக்குக் கேடு உண்டாக்கும் காரியத்தை மறந்தாவது எண்ணக் கூடாது; அப்படி எண்ணினால் அவனுக்குத் தீங்கு உண்டாக்கும் காரியத்தை அறக்கடவுள் எண்ணும்' என்பது இதன் பொருள். . . .
பிறனுக்குத் தீங்கு புரிய எண்ணுவதே அறத்திற்கு மாறுபாடானது. அவ்வாறு எண்ணுபவனுக்கு அறக் கடவுளின் தண்டனே கிடைக்கும் என்று இந்தக் குறளால் கூறினர். .
அறக் கடவுள் நடுகிலேயில் நிற்பது என்பதும், நன்மை செய்வார்க்கு நன்மை தந்து, திமை செய்வார்க்குத் தீமை விளையக் காரணமாவதென்பதும் இவற்ருல் புலணு கின்றன. . -

No comments:
Post a Comment