திருவள்ளுவர் கடவுளே இறைவன், இறை என்று, கூறுகின்ருர், இறை என்பதற்குத் தங்குதல் என்று பொருள். எங்கும் நிறைந்திருப்பது கடவுளின் தன்மை யாதலின் இறை என்றும் இறைவனென்றும் வழங்கு வார்கள். -
'அகர உயிர்போல் அறிவாகி எங்கும்
நிகரில் இறைகிற்கும் நிறைந்து’’ என்ற சாத்திரப் பாடல் இந்தக் கருத்தைத் தெளி வாக்குகிறது.
இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (குறள், 5) பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார் இறைவன் அடிசேரா தார் (குறள், 10)
என்னும் இரண்டிடங்களில் இறைவன் என்று சொல்கிருர் வள்ளுவர். இவை கடவுள் வாழ்த்தில் வருவன. பின்னே பொருட்பாலில்,
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறைஎன்று வைக்கப் படும் (குறள், 386) என்பதில் இறை என்று கடவுளேக் கூறுகிருர்.
கடவுள் வாழ்த்தில் இறைவனேக் குறிக்கும் தொடர் களால் அவனுடைய இயல்புகள் புலனுகின்றன. உலகுக்கு ஆதியாக நிற்பவன், துTய அறிவை யுடையவன், கினேக்கும் அடியவர்களுடைய உள்ளக் கமலத்தில் செல்பவன், விருப்பு வெறுப்பு இல்லாதவன், தனக்கு ஒப்பு இல்லாதவன், அறத்தை நடத்துகிறவன், அழகிய தண்மையை உடையவன், எட்டுக் குணங்களே உடையவன், அவனுடைய புகழே உண்மையான புகழ், அவனே எண்ணி வாழும் நெறியே பொய் தீர்ந்த மெய்யான வழி என்ற செய்திகளே அவற்றைக்கொண்டு உணரலாம். - -
கடவுள் வாழ்த்தின் முதல் இரண்டு செய்யுட் களும் கல்வியின் தொடக்கத்தையும் முடிவையும் சுட்டிக் காட்டுகின்றன. முதல் குறளில், கல்வி கற்பவன் எடுத்தவுடன் எந்த எழுத்தைத் தெரிந்து கொள்வானுே, அதையே உவமை யாக்கிக் கடவுளின் முதன்மையை எடுத்துரைத்தார். கல்வியில் எந்த நிலையில் கின்ருலும் அகரத்தைத் தெரிந்துகொண்டே பின்பு மற்றவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். அகரத்தை மட்டும் தெரிந்து கொண்டவன்கூட அறியும் உவமை இது.
கல்வியின் தொடக்கத்தை உவமை வாயிலாக முதல் குறளில் அமைத்தவர், அடுத்த குறளில் கல்வியின் முடிவைச் சுட்டுகிருர்.
கற்றதல்ை ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்ருள் தொழாஅர் எனின்?
கற்று முடித்துவிட்டோம் என்ருல் அதற்குரிய பயனே அடைய வேண்டும். இறைவன் திருவடியைத் தொழும் அன்பு உண்டாவதே கல்விக்குப் பயன் என்கிறர். பின்னே, கல்வி என்னும் அதிகாரத்தில் கற்பதல்ை அறிவு ஊறும் என்று சொல்கிரு.ர்.
தொட்டனத் தூறும் மணற்கேணி, மாந்தர்க்குக் கற்றனைத் துாறும் அறிவு. (396)
படிக்கப் படிக்க அறிவு ஊறி வருமாம். நன்ருகப் படித்தவனுக்கு அறிவு முழுமையாக ஊறும். கற்றதற்குப் பயன் அறிவு பெறுதலானல், அந்த அறிவுக்குப் பயன் இறைவனைத் தொழுதல். கற்றவன் அறிவுடையவ னதலால் அவன் அறிவுடையவர்களிடம் மதிப்பு வைத்து ஒழுகுவான். எல்லா அறிஞர்களும் சிற்றறிவுடையவர் களே; இறைவன் ஒருவனே முற்றறிவுடையவன்; சர்வஞ்ஞன். கல்வியினல் அறிவு பெற்ற மனிதன், அறிவுமயமாக உள்ள ஒருவனுடைய பெருமையை உணர்ந்து தொழுவதுதான் முறை. கற்று அறிவு பெற்றவல்ை தொழுவதற்குரியவன் என்ற பொருத்தத் தைக் காட்ட, வாலறிவன் என்ற பெயரைச் சொன்னர்.
அறிவு இரண்டு வகைப்படும்; நூலறிவு என்றும் வாலறிவு என்றும் அவற்றைக் கூறுவர். இவற்றைப் பரோட்ச ஞானம், அபரோட்ச ஞானம் என்றும், அபர ஞானம், பரஞானம் என்றும் கூறுவதுண்டு. நூலறிவு முற்றுப் பெற்ருலும் மெய்யுணர்வு பெருவிடின் பயன் இல்லை. - .
இப்போதெல்லாம் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறவர்கள் ஒரு சான்றிதழ் வாங்குகிருர்கள். அதை, உயர்நிலைப் பள்ளியை விடும் சான்றிதழ் (Secondary School Leaving Certificate) as orgy சொல்வார்கள். பள்ளிக்கூடத்தில் கல்வியை நிறைவேற்றி அதனை விடும் கிலேயில் இருப்பவன் மாணவன். ஆனல் பள்ளிக்கூடத்தை விடுவதை விடக் கல்லூரியில் நுழைவதுதான் சிறப்பானது. ஆதலால் கல்லூரிப் LJüįį'L]ëëjiflu | AE6@ o_görLit?” (Eligibility for College Course) என்று கேட்கிருர்கள். உயர்நிலைப் பள்ளிப் படிப்பு நிறைவுற்றதற்குப் பயன் கல்லூரி நுழிைவு.
அவ்வாறே நூலறிவு பெற்றதன் பயன் வாலறிவு பெறும் துறையில் அடி எடுத்து வைத்தல். அந்தக் கல்லூரியின் தலைவன் வாலறிவனுகிய இறைவன். அவனே அடிவணங்கி அவ்வுலகில் புகவேண்டும். நூலறிவு மட்டும் பெற்றவர்கள் சிறந்த பயனைப் பெற்றவர்கள் ஆகமாட்டார்கள்.
'நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக’
என்பது காரைக்கால் அம்ம்ையார் திருவாக்கு. நூலறிவு மட்டும் பேசித் திரிபவர்கள் இறையருளின்ப உலகத்தில் நுழைய இயலாது. இறைவனேப் பணிந்து அவ்வுலகில் புகவேண்டும். ஆதலின் கற்ற அளவிலே எல்லாம் வந்துவிட்டதாக எண்ணுமல், கல்வியின் முடிவிலே வாலறிவு தொடங்குகிறது என்று உணரவேண்டும்.
வாலறிவாகிய மெய்யுணர்வு பெற்றவன், இறைவன் அடி தொழுது பிறவி யென்னும் துன்பத்தினின்றும் விடுதலே பெறுவான். அதுவே வீடு. கற்றவர் அறிவு' பெற்று இறைவன் அடி தொழுவர்; அடிதொழுவார் பிறவிப் பெருங்கடல் நீந்துவார். பிறவித் துன்பம் கடவுளேப் பணிந்து வாழ்தலால் நீங்கும் என்பதை இந்த அதிகாரத்தின் இறுதிக் குறளில் வைத்தார். -
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடிசேரா தார். (10)
இறைவன் அடி சேர்ந்தவர் பிறவியென்னும் கடலே நீந்துவர்; சேராதவர் அதில் ஆழ்வர்.
மனிதனுகப் பிறந்தவனுக்கும் விலங்குக்கும் வேறு பாடு கல்வியினல் வருவது. கல்வி இல்லாதவன் மனித உருவத் தோற்றம் பெற்றிருந்தாலும் அவன் விலங்குக்கு ஒப்பானவனே. -
விலங்கொடு மக்கள் அனையர், இலங்குநூல் கற்ருரோ டேனை யவர் - (410)
என்பதில் இக்கருத்தைக் காணலாம். மனிதனே மனித னக்கும் கல்வி, அறிவை விரிவாக்குகிறது. அறிவு விரிந்தவன் இறைவன் திருவடியைத் தொழுது பொய்தீர் ஒழுக்க நெறி நின்று பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்கிருன். கல்வியிலே தொடங்கும் முயற்சி இறுதிப் பயனகிய பிறவாமையிலே முடியும். அதல்ைதான், .
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுபவர்
மற்றீண்டு வாரா நெறி . (356)
என்று மெய்யுணர்தல்” என்னும் அதிகாரத்தில் கூறினர்.

இவற்றையெல்லாம் நினேந்தே இரண்டாவது குறளில், 'வாலறிவன் நற்ருள் தொழாஅர் எனின் என்பதிலுள்ள நற்ருள் என்பதன் பொருளே விரிக்க வந்த பரிமேலழகர், பிறவிப் பிணிக்கு மருந்தாகலின் நற்ருள் என்ருர் என்று எழுதினர். - -
இறைவனுக்கு அன்பர் ஆகும் நெறியில் செல்வதே கல்வியின் பயன் என்று இந்நாட்டினர் கொண்டனர். இந்தக் கருத்தை இறைவன் அருள்பெற்று உயர்ந்த பெரியவர்களும் சொல்லியிருக்கின்றனர், "பெற்றிகொள் பிறைநுத
லீர் உமைப் பேணுதல் கற்றறி வோர்கள்தம் கடனே'
(தேவாரம். திருநெல்வெண்ணெய்.) என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடினர். நம்மாழ்வாரோ,
'கண்டும் தெளிந்தும் கற்ருர்
கண்ணற் காளன்றி பாவரோ' - (திருவாய்மொழி, 7. 5; 7)
என்று அருளினர்.
சேக்கிழார், பொய்யடிமையில்லாத புலவர் என்ற தொகையடியார்களின் இயல்பை ஒரு பாட்டில் தெளிவாக எடுத்துரைக்கிருர், பொய்தீர் ஒழுக்க நெறியில் கிற்கும் அவர்கள், செவ்விய நூல் பலவற்றையும் ஆய்ந்தறிந்து பெற்ற மெய்யுணர்வின் பயன் இதுதானென்று சிவ பெருமானுடைய மலரடிக்கே ஆளானர்களாம்.
"செய்யுள்கிகழ் சொற்றெளிவும்
செவ்வியநூல் பலநோக்கும்
மெய்யுணர்வின் பயன்.இதுவே
எனத்துணிந்து விளங்கிஒளிர்
மையணியும் கண்டத்தான்
மலரடிக்கே ஆளாளுர்
பொய்யடிமை இல்லாத
புலவரெனப் புகழ்மிக்கார்’
- (பெரிய புராணம்) என்பது அவர் கூறும் பாட்டு.
கல்வியின் தொடக்கமாகிய அகரத்தை உவமையாக்கி
ಛಹಿ குறளைத் தொடங்கிய வள்ளுவர் அடுத்த குறளில் கல்வி முடிவையும் சொல்லிவிட்டார். இந்த இரண்டு குறட்பாக்களேயும் படித்தாலே கல்வியின் முதலும் முடிவும் தெரிந்துவிடும். பள்ளிக்கூடத்துக்குள் புகும் பையனுக்குச் சொல்லும் முதலுபதேசத்தைப் போல முதற் குறளும், பட்டமெல்லாம் பெற்று வெளிவரும் மாணவனுக்குச் சொல்லும் பட்டமளிப்பு விழாச் சொற் பொழிவைப் போல இரண்டாவது குறளும் இருக்கின்றன.

அடுத்தபடி இறைவன் திருவடிப்பற்றை உடையவர்கள் என்றும் மாருத பேரின்ப கிலேயை அடைவார்கள் என்பதைச் சொல்லுகிருர். அப்படிச் சொல்லும்போது இறைவனே மலர்மிசை ஏகினன்' என்ற தொடரால் குறிக்கிருர், மலர்மிசை ஏகினன் என்பது அருகக் கடவுளேக் குறிப்பவர்கள் சொல்லும் தொடர். இதைப் பரிமேலழகரே, இதனைப் பூமேல் நடந்தான் என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர்' என்று குறித்திருக்கிருர், பொதுவான நூலைச் சொல்ல வந்த திருவள்ளுவர் ஒரு கடவுளேக் குறிப்பிட்டுச் சொன்னர் என்று கொள்வது பொருத்தம் அன்று. 'ஆயின், அவர் அருகக் கடவுளுக்கே பெரும்பாலும் கூறும் இத் தொடரை ஆளாமல் பொதுவகையில் உள்ள தொடர்களைச் சொல்லலாமே!’ என்ற கேள்வி எழலாம்.
திருவள்ளுவர் எல்லாச் சமயத்துக்கும் பொதுவான நூலே இயற்றினர் என்பது உண்மை. ஆனல் அவர் பிறப்பினல் ஏதேனும் ஒரு சமயத்தைச் சார்ந்தவராகவே இருந்திருக்க வேண்டும். பொதுவான நூல் செய்தாலும் பழக்கத்தினால் தம்முடைய வகையினர் பெருக வழங்கும் சொற்களை ஆளும் கிலே வந்துவிடும். திருவாதிரை யன்று நடராசப் பெருமான் திருவீதியில் எழுந்தருளு கிருர். அதை ஒரு வைணவக் குடும்பத்துப் பையன் பார்த்து, தன் நண்பனுகிய சைவப்பிள்ளேக்குச் சொல்லும் போது, 'உங்கள் பெருமாள் எழுந்தருளுகிருர்’ என்று சொல்வான். உங்கள் என்ற சொல்லால் வேறுபடுத்தி குலும், அவன் வழக்கமாகச் சொல்லும் பெருமாள் என்னும் சொல் அவனே அறியாமலே பேச்சிடையே வந்துவிடுகிறது. அந்த முறையில், திருவள்ளுவர் பிறப்பால் சைனராக இருப்பதனலோ, சைனர்களிடையே மிகுதியாகப் பழகியதனுலோ இந்தத் தொடரைப் பயன் படுத்தினர் என்று தோன்றுகிறது. ஆயினும், அதற்கு எல்லாச் சமயத்துக் கடவுளருக்கும் ஏற்ற வகையில் பொருள் கொள்வதே பொருத்தமாகும். அதனுல்தான், அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் கினைந்த வடிவோடு விரைந்து சேறலின் ஏகினன் என இறந்த காலத்தால் கூறினர்' என்று பரிமேலழகர் விசேட உரையில் எழுதினர்.
இதயகமலத்தில் எழுந்தருள்பவன் இறைவன் என்பது எல்லாச் சமயத்தினருக்கும் உடம்பாடான கருத்து. 'மலர்மிசை எழுதரு பொருள்' (சிவபுரம், 5) என்றும், 'ஞானம், புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்' (திருவீழி மிழலை, 6) என்றும் சம்பந்தர் பாடுகிருர்.
இவ்வாறு உள்ளக் கமலத்துறையும் இறைவனைத் தியானித்துத் திருவடி பற்றினவர்கள், நிலமிசை நீடுவாழ்வார்’ என்பார் வள்ளுவர்.
மலர்மிசை ஏகினன் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
இந்த உலகத்தில் நெடுநாள் வாழ்வார் என்று பொருள் கொள்ளும்படி இருக்கிறது. அது. ஆயினும், 'நிலத்தின் மேலுள்ள உலகம் என்று நிலமிசை என்பதற்குப் பொருள் கொண்டார் பரிமேலழகர்; 'எல்லா உலகிற்கும் மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்’ என்று எழுதுகிருர். இவ்வுலகில் கெடிது வாழ்வதென்பது இயற்கை அன்று. - -
நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு (336)
என்று வள்ளுவரே கூறியிருக்கிருர். ஆதலால் நிலமிசை என்பதற்கு எல்லா உலகிற்கும் மேலானது என்று பொருள் கொள்வதே பொருத்தம். வரன் என்னும் வைப்பு’ (24) என்றும், வானேர்க்குயர்ந்த உலகம்’ (346) என்றும் வீட்டைக் குறிப்பது வள்ளுவர் வழக்கம். அவற்றை நோக்கியே இங்கும் வீடு என்று பொருள் உரைத்தார் உரையாசிரியர்.
- இரண்டாவது குறளில் கற்றதற்குப் பயன் இறைவன் அடிதொழுதல் என்று சொன்னவர், அதற்குப் பின் மூன்ருவது குறளில் அடி தொழுதலுக்குப் பயன் இன்ன தென்று சொல்கிருர்; அடிசேர்ந்தார் நிலங்களுக்கு மிசையான இடத்தில் நீடுவாழ்வார்’ என்ருர். நீடுவாழ்தல் என்பது வீட்டுலகில்தான் நிகழ முடியும். மற்ற எந்த உலகமானலும் வாழ்க்கை தொடர்ந்து கிகழாது.
இந்தக் குறளேத் திருவுள்ளத்தில் வைத்துப் பாடினது போல ஒரு திருப்பாட்டைத் திருஞான சம்பந்தர் அருளியிருக்கிருர். சிவபுரம் என்னும் திருத் தலத்துத் தேவாரம் அது.

"புவம்வளி கனல்புனல் புவிகலே
உரைமறை திரிகுணம் அமர்நெறி திவம்மலி தருசுரர் முதலியர்
திகழ்தரும் உயிரவை யவைதம் பவம்மலி தொழிலது கினேவொடு
பதுமகன் மலரது மருவிய சிவனது சிவபுரம் கினேயவர்
செழுநில னினில்கிலே பெறுவரே'
என்பது அப்பாடல்.
'வான், காற்று, தீ, பூமியாகிய பஞ்ச பூதங்களின் நிலே, பல கலைகள், பலவற்றைச் சொல்லும் வேதம், மூன்று குணம் அமைந்த வழி, ஒளியுடைய தேவர் முதலியோரும் வேறு வகை உயிருமாகத் தாம் தோன்றும் பிறப்பாகிய தொழில் ஆகிய இவற்றின் கினேவோடு, இந்தத் துன்பத்தினின்றும் நீங்கும் பொருட்டு இதய கமலமலரில் பொருந்திய சிவபெருமானுடைய சிவபுரத்தைத் தியானிப்பவர், இன்பச் செழுமையை யுடையதாகிய வீட்டுலகத்தில் கிலேயாக இருக்கப்பெறுவர் என்ற பொருளுடையது இப்பாடல். மலர்மிசை ஏகினன்' என்று வள்ளுவர் கூறியதுபோல, பதுமகன் மலரது மருவிய சிவன்’ என்ருர். அவர், நிலமிசை என்றதை, 'செழுகிலன்' என்ருர் நீடுவாழ்வார்’ என்பதை விளக்குவதுபோல, கிலே பெறுவரே என்று முடித்தார்.

இறைவனுடைய திருவடிப்பற்றை உடையவர் ஏனே நிலங்களில் பிறந்து இறந்து வாழும் வாழ்க்கை மாறி, உயர்ந்த நிலம் என்று சொல்லப் பெறும் வீட்டுலக வாழ்வைப் பெறுவர் என்பதையே திருவள்ளுவரும் சொன்னர்; ஞானசம்பந்தரும் சொன்னர். இரண்டு இடங்களிலும் பொருள் முற்றும் ஒத்து நிற்கிறது; சொற்களிலும் ஒரளவு பொதுமை காண்கிருேம்.
ஆகவே இறைவனுடைய திருவடியைத் தொழுவதற்கு முடிந்த முடிபான பயன் பிறப்பை அறுத்து வீடு பெறுதல் என்பது வள்ளுவர் கருத்து என்பதை இதுகாறும் கூறிய வற்ருல் உணரலாம்.
No comments:
Post a Comment