சங்க கால மதுரை- கீழடியா?
தமிழ் களஞ்சியம்
Friday, December 19, 2025
Saturday, December 13, 2025
தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூர் நடுகல்,
கணபாத்ய நெறியை பின்பற்றிய வீரன்
கணபதியைத் தங்களின் முதன்மை தெய்வமாக வழிபட்ட ஒரு சமயப் பிரிவினர் கணபாத்தியர் எனப்பட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. இவர்களை குறிப்பிடும் அறிஞர்கள் பெரும்பாலும் 8-9ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கரவிஜயம் என்ற நூலை ஆதாரமாகக் கொள்கிறார்கள். அந்த நூல், ஆத்வைத வேதாந்தத்தை முன்வைத்த ஆதிசங்கரருக்கும், பல சமயப் பிரிவுகளின் தலைவர்களுக்கும் இடையே நடந்த விவாதங்களை விவரிக்கிறது.
அதில், கணபாத்தியர்கள் ஆத்வைதத்தை எதிர்த்ததாகவும், அவர்களுக்குள் ஆறு பிரிவுகள் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
அவை:
உச்சிஷ்ட கணபதி
ஹேரம்ப கணபதி
ஹரித்ரா கணபதி
மகாகணபதி
சம்தான (Sāntāna) கணபதி
நவநீத (Navanīta) கணபதி
ஸ்வர்ண (Svarṇa) கணபதி
ஒவ்வொரு பிரிவும் கணபதியை வேறுபட்ட பெயர், உருவம், மந்திரம் மூலம் வழிபட்டனர். அந்தந்த பிரிவினரின் உடலில் (கைகளிலும் நெற்றியிலும்) தங்கள் சமயச் சின்னங்களைப் பதித்துக் கொண்டிருந்தனர்.
படத்தில் காணப்படும் நடுகல், தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரில் உள்ளது. இதனை முனைவர் தவசிமுத்து மாறன் பதிவில் கண்டேன். முற்கால பாண்டியர் கால நடுகல்லான இது, கணபாத்தியத்தை பின்பற்றிய நடுகல்லாக தெரிகிறது. வீரனின் தலைக்கு மேல் குடை காட்டப்பட்டுள்ளது, ஆகவே இவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். அவரின் மேலே வலது ஓரத்தில் கணபதியின் உருவம் பொறிக்கப்பட்டதால், இவர் கணபாத்தியத்தை பின்பற்றியவர் என புரிந்து கொள்ளலாம். கங்கர், ஹொய்சாளர் நடுகற்களில் லிங்கத்தினை இவ்விடத்தில் காட்டுவர். இறந்த வீரன் சிவலோகப்பதவி அடைந்தார் என குறிப்பாக அந்நடுகல் உணர்த்தும். அதனைப்போல் இவ்வீரரும் கணபாத்தியத்தை பின்பற்றியவராகலாம். இதேபோன்ற நடுகல் வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை
Subscribe to:
Comments (Atom)