Monday, September 3, 2018

கருணாநிதி குடும்பம் நொடித்திருந்த நிலையில் 1971ல் உதவிய MGR

 கருணாநிதி  குடும்பம் நொடித்திருந்த நிலையில் 1971ல் உதவிய  சினிமாத் தொழிலில் சுய தயாரிப்பில் கருணாநிதி, முரசொலி மாறன் பல படங்களை எடுத்து தங்கள் வீடு வரை அடமானத்தில் இருந்த போது உம், ஜெயலலிதாவும் - நடித்து கொடுத்த படமே

  


  

16-1-1971.. கலைவாணர் அரங்கம்...

எங்கள் தங்கம் என்ற ப்ளாக் பஸ்டர் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா..

மைக் பிடித்த நபர் மாறன்..

எங்கள் குடும்பம் தயாரித்த படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவியது.. முரசொலி பத்திரிகையிலும் பெருத்த நட்டம்.. சொத்துகள் அனைத்தும் அடமானத்தில்.. எங்களால் வட்டி கூட கட்ட முடியாத நிலை..

என்ன செய்வது என்றே தெரியாத நிலையில் புரட்சி நடிகர் அவர்களும், கலைச் செல்வி அவர்களும் பெரிய மனதோடு இந்தப் படம் நடித்துக் கொடுக்க இசைந்தார்கள்.. அது மட்டுமின்றி, ஒரு பைசா கூட சம்பளமே வேண்டாமென கூறி விட்டார்கள்..

இன்று எங்கள் குடும்பம் அனைத்து கடன்களையும் இந்தப் படம் மூலம் அடைத்து மானம், மரியாதையோடு இருக்க காரணம் அவர்கள் இருவரும் தான்.. கோபாலபுரம் வீடு அவர்கள் இல்லையெனில் இந்நேரம் கைவிட்டுப் போயிருக்கும்...



நானும், எங்கள் குடும்பமும் ஆயுள் உள்ளவரை அவர்களை மறக்கக் கூடாது.. etc...

அடுத்து பேசிய கருணாநிதி மேலே உள்ளவற்றை டிட்டோ..

கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் என்பார்கள்.. புரட்சி நடிகருக்கோ கொடுத்து, கொடுத்து உடலே சிவந்து விட்டது.. அதனால் தான் அவர் குடியிருக்கும் இடமே செங்கை மாவட்டம் ஆகி விட்டது..
உண்மையைச் சொன்னால் எனது வீடு அவர்களுக்குத் தான் சொந்தமானது...

இவை அனைத்தும் அடுத்த நாள் 17-1-1971 முரசொலியில் தலைப்புச் செய்தியாக வந்தது...

குமரிக் கண்டம் கட்டுக் கதை- அறிவியல் தமிழ் காணொளி

அமெரிக்காவின் ட்யுக்ஸ் பல்கலைக் கழகட்த்தின் வரலாற்று பேராசிரியர் சுமதி ராமசாமி நூல் 

குமரிக் கண்டம் முழுவதும் கட்டுக் கதை, அறிவியல் பூர்வமான காணொளி

 குமரிக் கண்டம் தமிழில் சங்க இலக்கியத்திலோ, சிலப்பதிகாரத்திலோ குமரிக் கண்டம் பற்றி எங்குமே இல்லை, இவை வலிந்து திணிக்கப்பட்ட கருத்து.
இதை இந்தியரைப் பிரிக்க - மதமாற்றத்திற்கு பயன்படுத்த தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியினால் பல்வேறு புலவர்கள் மூலம் பரப்பப் பட்டது. 
தமிழரைப் பிரிக்க முழுதும் நச்சுக் கருத்தையே மொழியியல் எனச் செய்த தேவநேயன் பாவாணர் தான் பெரிதும் பரப்பியது, அவருடைய தரமற்ற ஆய்வுகள் அழிய மீண்டும் சர்ச் மா.சோ.விக்டர் என்பவர் பெயரில் 100க்கும் அதிகமான புத்தகம் வெளியிட்டுள்ளது.

 Scientific Thamizhans பெயரில் வந்துள்ள தமிழ் காணொளி