Tuesday, June 19, 2018

திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் காலம்

திருக்குறள் ஒன்றே முக்கால் அடியில் உலகக் கருத்துகளை உள்ளடக்கிய அருமையான நூல் இது. தமிழில் உள்ள அறநூல்களுள் தலை சிறந்ததும் திருக்குறளாகும். ஈரடி வெண்பா, குறள் வெண்பா எனப்படும். அவ்வெண்பாவால் ஆன நூலும் ஆகுபெயராகக் குறள் என்று பெயர் பெற்றது. அதன் சிறப்பு நோக்கித் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருக்குறள் என்று வழங்கி வருகின்றோம்.


சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு என்னும் பெயர் பெற்றன. இவை மொத்தம் பதினெட்டு நூல்களாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுவது திருக்குறள். இந்த நூலை இயற்றியவர் திருவள்ளுவர். 

திருக்குறள் மிகவும் எளிமையான நடை, இயற்றப்பட்டு 1250 ஆண்டுகள் பின்பும் இன்றைக்கும் படிப்போர் புரிந்து கொள்ளும் எளிமை.  அதற்கு முந்தைய சங்க இலக்கியம் போல கடுமையான நடை, புரியாத பல சொற்கள் என்று இல்லாமல் குறள் வெண்பாவில் இயற்றப் பட்டது குறள். திருவள்ளுவர்  காலம் தற்போது காலம் 7 - 8ம் நுற்றாண்டு என்பதில் நடுநிலையாளர்களுள் ஒரு கருத்து ஒற்றுமை வருகிறது.

திருவள்ளுவர் காலம் பற்றிய ஆய்வு முடிவுகள் நடுநிலையாய் செய்த ஜி.யு.போப் 10ம் நூற்றாண்டு என்பதாய், பேரறிஞர் வையாபுரி பிள்ளை, இவர்  வள்ளுவர் காலம் குறித்ததை, 600ஐ ஒட்டி என்றார்.

திருக்குறளில் உள்ள பல சங்கப்பாடல் தொடர்களை தலைகீழாய் குறளை சங்கப் புலவர்கள் பயன்படுத்தியதாய் கூறித் திரிந்த வள்ளுவரால் பாழ்செய்யும் பல்குழு (குறள் 735) எனும் பிரிவினைவாத சக்திகள் அவரை கடுமையாய் விமர்சித்தனர். 

தற்போது பன்னாட்டு பல்கலைக் கழக நெறியில் ஆய்வுகள் திருவள்ளுவர் காலம் பொ.ஆ.800ஐ ஒட்டி என கருத்தொற்றுமை உள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக் கழக பேராசிரியர்  டேவிட் ஷுல்மன் பாண்டியர் - பல்லவர் காலம் இன்னும் பின் தள்ளும்படி குறிப்பு காட்டி உள்ளார்.

திருவள்ளுவர் காலத்தை மிகவும் பின் தள்ளியோரின் தரவுகள் என்ன? அவை நடுநிலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட நேர்மையான காரணங்கள் என்ன
1.முச்சங்கம் இருந்தது என்ற தொனமக் கதை நம்பிக்கை.
மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தது எனும் ஒரு தொன்மக் கதை  மூன்று கடற்கோள்கள் இறையனார் களவியல் ஆசிரியர் உரையில் புனைந்துள்ளதை இன்று அறிவு சார் ஆய்வுலகம் முழுமையாய் நிராகரித்துவிட்டது. சங்கம் என்ற சொல்லே தமிழ் சொல் இல்லை, புலவர் பட்டியல் எல்லாமே கற்பனைகள் என தூக்கி எறிந்து பல காலம் ஆகிவிட்டது.
சங்ககால மன்னர் காலநிலை  வரலாறு-   வி.பி.புருஷோத்தம்;   
அணிந்துரை- சிலம்பொலி செல்லப்பன். இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.   பாராட்டுரை- பேராசிரியர். சாலை- இளந்திரையன்.
நூலின் ஆய்வின் விஸ்தீரணம் கண்டு இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்- இந்நூலிற்கு தமிழக அரசு சார்பாக வேளியீடு மான்யம் பெற்று தந்தார்.
53.png
தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களை கி.ப். எட்டாம் நூற்றாண்டில் படித்த நீலகண்டன் என்பவரால் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதையாகும். பாண்டியர்கள் தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் வாழ்ந்ததாகவோ சங்கப் பாடல்கள் கூறவில்லை.
முச்சங்கக் கதையை நம்பி, சங்ககாலத்தைக் கணிக்க முயல்வது, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும். -பக்கம்30 
8ம் நூற்றாண்டில் வரையப்பட்ட இறையனார் அகப்பொருள் உரை- என்னும் நூலில் ஒரே ஒரு பாடல் மட்டும் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதை. இதில் முதல்- இடைச் சங்கப் புலவர்கள் என உரையில் கூறப்பட்ட புலவர்கள் பெயர்கள் பெரும்பாலும் பாட்டுத்தொகை ஆசிரியர்கள் பெயரே உள்ளது. 
இடைச் சங்கம், கடைச் சங்கம், முதல் சங்கம்- இவை எல்லாம் வெறும் ஆரவார புராணம். ஆதாரமில்லாதது.
2. தொல்கப்பியம் பற்றிய பின்னோக்கிய காலம் குறித்தல் -முச்சங்க கதைகளின் தாக்கம்.
தொல்காப்பியத்தில் உள்ள சொல், சொல் தொடரி போன்றவை ஆய்வில், காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் என அறிஞர்கள் ஏற்கின்ற்னர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா  பல்கலைக் கழக பேராசிரியர் ஜ்யார்ஜ் ஹார்ட் தன் நூலில் தெளிவாய் சொல்வது  -தொல்காப்பியர் தமிழ் இலக்கணம் அமைக்க சமஸ்கிருத இலக்கணத்தின் பல கூறுகளை எடுத்து பயன் படுத்தி உள்ளதைக் காட்டியும், முன்னால் பேராசிரியர் கமில் செவிலிபில் ஆய்வைக் காட்டியும் , காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் எனக் கூறுவார்.
இன்றைய நிலையில் தொல்காப்பியர் காலம் பொ.ஆ. 7ம்  நூற்றாண்டு என்பதில் பெரும் கருத்தொற்றுமை உள்ளது
3.வள்ளுவர் சங்க காலப் புலவர் எனும் நம்பிக்கை.

பத்துப் பாட்டு எட்டுத் தொகை நூல்களுள் உள்ள தொடர், பாட்டு கருத்துக்கள் குறளிலும் உள்ளதைக் கொண்டு - திருக்குறளை முன் தள்ளியனர். இத்தோடு முசங்கக் கதை, கீழுள்ள கதைகள் அவற்றிற்கு உதவின
 திருவள்ளுவமாலையில் உள்ள பாடல்களில் திருக்குறளின் ஒவ்வொரு பாலின் உள்ளும் உள்ள இயல்களில் எத்தனை அதிகாரங்கள் என்பதை கூறும் வகையில் பல பாடல்கள் உள்ளன.
4.திருவள்ளுவர் பற்றி உள்ள திருவள்ளுவமாலை மற்றும் கபிலர் அகவலில் உள்ள புனைக் கதைகள்

திருக்குறள் எழுதப் பட்ட பின் வரையப்பட்ட முதல் உரை மணக்குடவர் எனும் சமணர் உரை, ஆனல் இவர் உரையில் உள்ள இயல்களினும் உள்ள அதிகார அமைப்பினோடு திருவள்ளுவமாலை பாடல்கள் பொருந்த வில்லை, ஆனால் 13ம் நூற்றாண்டின் பரிமேலழகர் பிரித்துள்ளதோடு பொருந்துகிறது. எனவே நிச்சயமாய் இவை அவற்றிற்கு பிற்பட்டவை

வள்ளுவர் பற்றிய கதைகளில் பல கிறிஸ்துவப் பாதிரிகள் திணித்தவை எனப் பல ஆய்வுகள் கூறுவதையும் அறிஞர் காட்டி உள்ளனர். 
5. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை தெளிவாய் திருக்குறளை குறிப்பிடுவதால் 

சிலப்பதிகாரக் கதையின் சேரன், செங்குட்டுவன் போன்ற அரசர்கள் சங்க காலத்தவர், அதாவது பொ.மு.300 - பொ.ஆ.300 இடையிலானவர், ஆனால் சங்கப் பாடல்கள் பொ.ஆ.6ம் நூற்றாண்டின் முற்பாதி வரை வரையப்பட்டவை. சிலப்பதிகாரமோ கதை மாந்தர்களை சங்க காலத்தினராகக் காட்டினும் அதில் உள்ள செய்திகள், நகர வாழ்வு இவை பிற்காலத்தது, அறிஞர்படி 9ம் அல்லது 12ம் நூற்றாண்டு எனக் குறிக்கின்றனர், தொல்லியலும் கண்ணகி கோவிலின் தொன்மை 9ம் நூற்றாண்டு பின் என்பதால் தெளிவாய் சிலப்பதிகாரம் 9ம் நூற்றாண்டு  இறுதிக்கு முன் வாராது.


 திருவள்ளுவர் காலம் பன்னாட்டு பல்கலைக் கழக முறை ஆய்வுகள் 8ம் நூற்றாண்டு எனக் குறிக்க காரணம் பெருமளவில் மொழியும் திருக்குறள் நடையும் தான்.

 திருக்குறளின் மொழி நடை

சங்க இலக்கியத்தின் பாடல்கள் பெரும்பாலும் இன்றைக்கு புரியா மொழி நடை, ஆசிர்யப்பாவில் அமைந்தது.

திருக்குறளோ வெண்பா, அதிலும் குறள் வேண்பா, சொற்கள் வளர்ச்சியுற்று எளிதில் புரியும் நடை.
 திருக்குறளின் மொழியியல் வழியில் இலக்கண திறனாய்வு நூல்கள் மிகவும் குறைவு. 

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் ஈ.சுந்தரமூர்தி அவர்களின்  குறளின் நடையியல் மற்றும், முனைவர் மோகனராசுவின்  -"திருவள்ளுவர் நடைநலைம்". இரணடுமே திருக்குறள் பேராசிரியர் அகத்தியலிங்கம் அவர்கள் நூலும் உண்டு.



இவை நமக்கு தெளிவாய் காட்டுவது, திருக்குறள் பாட்டுத் தொகை நூல்களுக்குப் பிறகான தொல்காஅபியத்திலிருந்து பிற்காலத்தது.

திருவள்ளுவர் காலம் என்ற பெயரிலேயே ஒரு கட்டுரை பேராசிரியர்.கஸ்தூரி ராஜா அவர்கள்   நூலில் ஒரு கட்டுரையும், முனைவர் மோகனராசுவின் வளர்ச்சி வரலாறு - பகுதி௨ நூலின் பெரும் பகுதியும் 

Thursday, June 14, 2018

தொல்காப்பியர் காலம்

தொல்காப்பியம் தமிழின் மிக முக்கியமான இலக்கண நூல். இதன் மொழி நடை இது சங்க இலக்கியம் எனும் பத்துப் பாட்டு எட்டுத் தொகை நூல்களுக்கு பிற்பட்டது என மொழியியல் தெளிவாய் காட்டுகிறது.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய பாதிரி கால்டுவெல்  பொ.ஆ.-8ம் 13ம் நூற்றாண்டு இடையே என்றார்
அன்றைய  தரவுகளின் அடிப்படையில் பன்னாட்டு  பல்கலைக்கழக ஆய்வுமுறைகள்படி ஆய்வாளர்கள் கூறியது
P.Tசீனிவாசையங்கர் : பொ.ஆ. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்தவர் History of Tamils P. 70

தெ.பொ.மீ: பொ.ஆ. 2-நூற்றாண்டை ஒட்டிய சங்க நூல்களுக்கு முற்பட்டவர் - சமணத் தமிழ் இலக்கிய வரலாறு பக்-28

பெரிடேல் கீத் : பொ.ஆ. 4-நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் தமிழ்ச்சுடர் மணிகள் பக்-39

எஸ். வையாபுரிப்பிள்ளை : பொ.ஆ.அல்லது 5 நூற்றாண்டில் வாழ்ந்தவர் தமிழ்ச்சுடர் மணி பக்-39
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி : பொ.ஆ. 5-ம் நூற்றாண்டு
கே.எஸ் சிவராஜபிள்ளை : பொ.ஆ.6-ம் நூற்றாண்டு 
முச்சங்க தொன்மக் கதை

மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தது எனும் ஒரு தொன்மக் கதை  மூன்று கடற்கோள்கள் இறையனார் களவியல் ஆசிரியர் உரையில் புனைந்துள்ளதை இன்று அறிவு சார் ஆய்வுலகம் முழுமையாய் நிராகரித்துவிட்டது. சங்கம் என்ற சொல்லே தமிழ் சொல் இல்லை, புலவர் பட்டியல் எல்லாமே கற்பனைகள் என தூக்கி எறிந்து பல காலம் ஆகிவிட்டது.

சங்ககால மன்னர் காலநிலை  வரலாறு-   வி.பி.புருஷோத்தம்;   
அணிந்துரை- சிலம்பொலி செல்லப்பன். இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.   பாராட்டுரை- பேராசிரியர். சாலை- இளந்திரையன்.
நூலின் ஆய்வின் விஸ்தீரணம் கண்டு இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்- இந்நூலிற்கு தமிழக அரசு சார்பாக வேளியீடு மான்யம் பெற்று தந்தார்.

தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களை கி.ப். எட்டாம் நூற்றாண்டில் படித்த நீலகண்டன் என்பவரால் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதையாகும். பாண்டியர்கள் தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் வாழ்ந்ததாகவோ சங்கப் பாடல்கள் கூறவில்லை.
முச்சங்கக் கதையை நம்பி, சங்ககாலத்தைக் கணிக்க முயல்வது, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும். -பக்கம் -30
8ம் நூற்றாண்டில் வரையப்பட்ட இறையனார் அகப்பொருள் உரை- என்னும் நூலில் ஒரே ஒரு பாடல் மட்டும் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதை. இதில் முதல்- இடைச் சங்கப் புலவர்கள் என உரையில் கூறப்பட்ட புலவர்கள் பெயர்கள் பெரும்பாலும் பாட்டுத்தொகை ஆசிரியர்கள் பெயரே உள்ளது. 

இடைச் சங்கம், கடைச் சங்கம், முதல் சங்கம்- இவை எல்லாம் வெறும் ஆரவார புராணம். ஆதாரமில்லாதது.
பன்னாட்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் ஏற்பது என்ன
தொல்காப்பியத்தில் உள்ள சொல், சொல் தொடரி போன்றவை ஆய்வில், காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் என அறிஞர்கள் ஏற்கின்ற்னர்.

ஜப்பானின் ஒசாக்கா பன்னாட்டு புத்த மத பல்கலைக் கழக இந்தியவியல் பேராசிரியரும், திருக்குறளை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்த டகனொபுடகஹஷி   இன்றைய வடிவு 5- 6ம் நூற்றாண்டினது

 பென்சில்வேனியா பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் V.S.ராஜம்   பொ.ஆ. 5- நூற்றாண்டிற்கு   சற்று முந்தையது
ஹாலந்து  லெய்டன் இந்தியவியல் பேராசிரியரும் ஹெர்மன் டிய்கென்   பொ.ஆ.9ம் நூற்றாண்டினது 
19ம்  ஏ.சி.பர்னெல் பொ.ஆ. 19ம் நூற்றாண்டின் இந்தியவியல் ஆய்வாளர் 8ம் நூற்றாண்டினது முன்பாய் இருக்க இயலாது
  அமெரிக்காவின் கலிபோர்னியா  பல்கலைக் கழக பேராசிரியர் ஜ்யார்ஜ் ஹார்ட் தன் நூலில் தெளிவாய் சொல்வது  -தொல்காப்பியர் தமிழ் இலக்கணம் அமைக்க சமஸ்கிருத இலக்கணத்தின் பல கூறுகளை எடுத்து பயன் படுத்தி உள்ளதைக் காட்டியும், முன்னால் பேராசிரியர் கமில் செவிலிபில் ஆய்வைக் காட்டியும் , காப்பியர் சங்க இலக்கியத்திற்கு பல நூற்றாண்டு பின்னானவர் எனக் கூறுவார்.
தொல்காப்பியம் சொல் இலக்கணம் மட்டும் இல்லை, எழுத்து இலக்கணமும் சொல்கிறது. அதாவது
 உயிர் எழுத்து 12 அ - ஔ ;  மற்றும்
 மெய் எழுத்து 18 க் - ன்
இவற்றின் கலப்பே உயிர்மெய் எழுத்து
கல்வெட்டுகளில் 30 எழுத்துகளும் தனி உரு பெறுவது 5ம் பொ.ஆ. 5ம் நூற்றாண்டில் தான். அதாவது  தமிழில்  "ற" "ன" போன்றவை இரண்டு, ஆனால் வடமொழியில் ஒன்று தான்.
உதாரணமாக ராகம் என எழுத்கையில் எழுதும் போது அறம் என எழுதும் போதும்  மாறு படும் ஆனால் 5ம் நூற்றாண்டிற்கு முந்தைய கல்வெட்டுகளில் இரண்டு ஒரே உரு தான், மொழி இடையில் வந்தால் படிப்பவர் மாற்றி  மாற்றி படித்து பொருள் சொல்கின்றனர். 
புள்ளி மயங்கியல்
புள்ளி வைத்து எழுதுதல், பின் புள்ளி மயங்கியல் என மெய் எழுத்து சேறும் முறை பற்றியும் தொல்காப்பியத்தில் இலக்கணம் உள்ளது
தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி - அதாவது பிராமியில் தொடங்கி அது வட்டெழுத்தாய் மாற்றம் பெற்றதினை தமிழ் எனப் படித்து வெளிப் படுத்திய பேராசிரியர் கே.வி.ராமன், ஐராவதம் மகாதேவன் போன்றோர் தெளிவாய் தொல்காப்பிய எழுத்து இலக்கணத்தோடு அதை ஒப்பிட்டு அதன் அடிப்படையில் தான் தொல்காப்பியம் இயற்றப் பட்ட காலம் குறிக்க வேண்டும் எனத் தெளிவாய் கூறுகின்றனர். அதன்படி தொல்காப்பியம் 7ம் நூற்றாண்டிலானாது.


  தொல்காப்பியர் காலம் - தமிழ் கல்வெட்டுகள் எழுத்துக்களின் பரிமாண வளர்ச்சியின்படி வடமொழி எழுத்துக்களை பயன்படுத்த தொடங்கி தமிழ் முழுமையாய் 30 எழுத்துக்களும் தனித் தனி உரு பெற்றது 4ம் நூற்றாண்டு இறுதியில் தான், அதன் பின்னர் புள்ளி மயங்கியல் போன்றவைகளை விளக்கும் தொல்காப்பிய சூத்திரங்கள் உருவாகும் காலம் 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் என தற்போது பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்கிறது.

தொல்காப்பியம் தமிழ் மெய் எழுத்து வரிசையில் கடைசியில் ளா, ற, ஜ்ன உள்ளது - இவை வட மொழியில் இல்லாதவை, இது தெளிவாய் தமிழ் எழுத்துருக்கள் வடமொழி உருவிடம் கடன் வாங்கியது என்பதையும், நிருபித்தன என பேராசிரியர் இன்னாசி தன் எழுத்தியல் நூலில் விளக்கி உள்ளார்