Tuesday, December 24, 2024

இயேசுவின் தந்தை ரோமன் வீரன் ஜூலியஸ் அப்டெஸ் பேந்தர் -1ம் நூற்றாண்டின் கல்லறை- விபரங்கள்.

ரோமன் வீரன் ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர்- தான் ஏசுவின் உண்மையான தந்தை என்பது 2ம் நூற்றாண்டின் ரோமன் ஆசிரியர் செல்சஸ் எழுத்துக்கள் தெளிவாகக் கூறுகின்றன. 
யூதர்கள் பழைய ஏற்பாட்டு நடைமுறையில் எழுதும் புனித தால்மூதிலும் கூறப் பட்டுள்ளது.
http://en.wikipedia.org/wiki/Tiberius_Iulius_Abdes_Pantera
ஏசுவின் உண்மையான தந்தை திபெரியுஸ் ஜூலியஸ் அப்டெஸ் பேந்தர் உண்மையான கல்லறை 19ம் நூற்றண்டில் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ஏசுவின் உண்மையான தந்தை ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் இஸ்ரேலில் பணி புரியும் போது மேரியுடனான தொடர்பில் மேரி கர்ப்பமாக பிறந்த குழந்தையே ஏசு. ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் பணிக் காலம் முடிந்து ஓய்வுக்குப் பின் ஐரோப்பா திரும்ப அங்கு மரணத்திற்குப் பின் புதைக்கப் பட்ட அவர் கல்லறை. ஜெர்மெனியின் பிங்கர்பர்க் எனும் ஊரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த் பேந்தர் முதல் நூற்றாண்டில் இஸ்ரேலில் பணிபுரிந்த ரோமன் வீராருடையது என பல புகழ் பெற்ற பைபிளியல் புதபொருள் அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்
Tiberius Pantera's tombstone in Bad Kreuznach  
The Roman tombstones in Bingerbrück, Germany, as illustrated when published. Tiberius Iulius Abdes Pantera's is on the left
http://rationalwiki.org/wiki/Pantera
http://www.jjraymond.com/religion/panterafatherofjesus.html
In the 2nd century, Celsus, a pagan anti-Christian Greek philosopher wrote that Jesus's father was a Roman soldier named Panthera. The views of Celsus drew responses from Origen who considered it a fabricated story.
  • Native of Sidon;
  • Died age 62 sometime during the middle of the first century CE in Germany;
  • Served in the legions for 40 years;
  • Former slave who received Roman citizenship from Caesar Tiberius;
  • Gravestone states he served in the "first cohort of archers". The name of the legion and cohort are not identified in Prof. Tabor's book. Wikipedia gives the cohort as Cohors I Sagittariorum.
  • "[T]his particular cohort of archers had come to Dalmatia (Croatia) in the year A.D. 6 from Palestine and was moved to the Rhine/Nahe river area in A.D. 9." ibid at page 6
 நம் இந்த வலைப்பூவில் சில விபரங்கள் சுவிசேஷங்களே  ஏசுவின் உண்மையான தந்தை திபெரியுஸ் ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர்  என்பதை நிருபிப்பதைக் காணாலாம்.

The “Jesus son of Panthera” Traditions
In the 2nd century, Celsus, a pagan anti-Christian Greek philosopher wrote that Jesus's father was a Roman soldier named Panthera. The views of Celsus drew responses from Origen who considered it a fabricated story.
  • Native of Sidon;
  • Died age 62 sometime during the middle of the first century CE in Germany;
  • Served in the legions for 40 years;
  • Former slave who received Roman citizenship from Caesar Tiberius;
  • Gravestone states he served in the "first cohort of archers". The name of the legion and cohort are not identified in Prof. Tabor's book. Wikipedia gives the cohort as Cohors I Sagittariorum.
  • "[T]his particular cohort of archers had come to Dalmatia (Croatia) in the year A.D. 6 from Palestine and was moved to the Rhine/Nahe river area in A.D. 9." ibid at page 6
 நம் இந்த வலைப்பூவில் சில விபரங்கள் சுவிசேஷங்களே  ஏசுவின் உண்மையான தந்தை திபெரியுஸ் ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர்  என்பதை நிருபிப்பதைக் காணாலாம்.
(Witherington on Tabor’s Jesus Dynasty)     Examining the Pantera tombstone in the Römerhalle Museum in Bad Kreuznach, Germany
 யோவான்8: 41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச்செயல்படுகிறீர்கள் ' 
என்றார்அவர்கள், ' நாங்கள்   பரத்தைமையால் பிறந்தவர்கள்   அல்லஎங்களுக்கு ஒரே தந்தை  உண்டு;
யோவான்8:41 நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள்என்றார்அதற்கு
 அவர்கள்நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல;  ஒரே  பிதா   எங்களுக்கு உண்டு.


இந்த வசனம் இயேசுவின் தாய் முறையாகப் பெறவில்லை

Prof: A.C.Bouquet-Cambridge Professor of History and comparitive Religions in his book -"Comparitive Religion"

"It is now plain from the analysis of the documents that even during his life-time  there was never a point when it could be said with certainity that the  Gospel was purely announcement made by Jesus, and not also announcement  about Jesus."- page 233.
The development of a malicious Jewish report that Jesus was the illegitimate  son of Mary and a Roman Soldier appears about at the same time.... there may  be covert reference to it in the fourth gospel (8:41) which is a debate about A.D.100.   page- 237

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாறு மற்றும் மதங்கள் பேராசிரியர் பௌக்கட்   சொல்கிறார்.

நற்செய்தி என்பது கிறிஸ்துவ பைபிள்படியே  இயேசுவின் இயக்கத்தின்போது ஒரு சமயத்தில் கூட இயேசு அறிவித்தது  என்றோஏன் நற்செய்திஎன்பது ஏசுவைக்குறித்தான அறிவிப்பு எனக் கொள்ளவோ வழி இல்லை.
யூதர்களிடம் மேரி ஒரு ரோம வீரனிடம் முறையற்று பெற்ற மகன் என்னும் குறிப்புகள் அதே சமயத்தில் தோன்றினஇவற்றின்  எதிரொலி நாம் 100 வாக்கில்   வரையப்பட்ட  யோவான்8: 41 காண்கிறோம் என்கிறார் பேராசிரியர் பௌக்கட்.

நாம் மேலும் ஆராய்ந்தால்மேரி ஓர் இருளில் ரோம் வீரனால்கற்பழிக்கப்பட
 கர்ப்பமானாள். இருட்டில் அதை செய்தது ரோம் வீரன்பெயர்  பேந்தர் என பழைய ஏற்பாடு பாரம்பரியப்படி  யூதர்களால்எழுதப்படும்  "புனித தாலுமூது"  தெரிவிக்கின்றது.

இவ்விவரங்களோடு மத்தேயுவை ஆராய்ந்தால்
 மத்தேயு 1:18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய  நிகழ்ச்சிகள்:
அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
 அவர்கள் கூடி  வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது.   அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்
19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர்அவர் மரியாவை இகழ்ச்சிக்கு 
உள்ளாக்க விரும்பாமல்  மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
(18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜனநத்தின் விவரமாவதுஅவருடைய 
தாயாராகிய  மரியாள்யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடி
 வருமுன்னே,அவள்  பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள்  என்று 
காணப்பட்டது.
19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்துஅவளை அவமானப்படுத்த 
மனதில்லாமல்,  இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.)
25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடுகூடி
வாழவில்லை.  யோசேப்பு அம்மகனுக்கு  இயேசு என்று பெயரிட்டார்

 மரியாவின் கர்ப்பத்தை அறிந்த ஜோசப் மணநிச்சய முறிவுக்கு முயன்றார்,
 ஆனால் லேவியர் சட்டப்படி மேரி கல்லால் அடித்துகொல்ல்ப்பட்டிருக்க
 வேண்டும்எனவே சிறு பெண் வாழ்வின் துயரம்என ஏற்ற நல்லவர்எனத் 
 தெரிகிறதுமேலும் மத்தேயு பட்டியலில்நான்கு பெண்கள்   பெயர் வருகிறது.
 மத்தேயு 1:3  மாமனார்  யூதாவுக்கும்  மருமகள் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் 
 பெரேட்சும்  செராகும்
 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு;
  போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது
 ஈசாயின் மகன் தாவீது அரசர்தாவீதுக்கு உரியாவின் 
 மனைவியிடம்பிறந்த மகன் சாலமோன்.
 மாமனார் யூதா தன் மருமகள் தாமார் செக்ஸ் உறவு.
 இராகாபு முதலில் ஒரு விபச்சாரி
 போவாசுரூத் திருமணத்திற்கு முன்பே  செக்ஸ் உறவில் இணைந்தது/
தாவீது அரசந் தன் வீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் குளிக்கையில்   பார்த்து செக்ஸ் உறவு கொண்டுபின் வீரன் உரியாவைக் கொலை செய்துஉரியா மனைவியிடம் பெற்ற மகன் சாலமோன் ஞானி.

இப்படி நான்கு பெண்கள் பெயரை மத்தேயு சேர்த்தது மேரியின் துயரமான  முறை கர்ப்பமேமுன்பு இது போன்றவை கர்த்தரால் ஏற்கப்பட்டது எனக்
காட்டவே- 
http://www.mediafire.com/view/?55l5zp0j38vejdu 
http://www.mediafire.com/view/?qxnan7df13rv74o 
http://www.mediafire.com/view/?20y0925a1kkbnyy 
http://www.mediafire.com/view/?cszfo1f711ptink 

Monday, December 23, 2024

பழந்தமிழ் நூல்களில் திருமால் வழிபாடு

 பக்தி  இலக்கியத்தைப் பற்றி அறிந்து கொள்ள அதற்கு முன் தோன்றிய இலக்கியப் பதிவுகளை அறிதல் அவசியம். அது போலப் பக்தி இலக்கியத்தின் செழுமையை உணர்ந்து கொள்ள, பக்தி இலக்கியத்திற்குப் பின் வந்த இலக்கியங்களைப்  பற்றி  அறிவதும்  இன்றியமையாதது. ஆக, பக்தி இலக்கியத்தைச் சரியாகப் படிக்க வேண்டும் எனில் அவ்விலக்கியங்களை முன்னும் பின்னுமாக நோக்குதல் பொருத்தம் ஆகும்.

இப்பாடத்தில் வைணவ சமயப் பக்தி இயக்கத்திற்கு முன் தோன்றிய பழந்தமிழ் இலக்கியப் பதிவுகளைக் காண்போம்.

  • 1.1 தொல்காப்பியம்


    நமக்குக்  கிடைக்கின்ற பழந்தமிழ் நூல்களுள் தொல்காப்பியமே முதன்மையானது. இது இலக்கண நூல். எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமன்றி இலக்கியத்திற்கும் இலக்கணம் வகுத்ததைக் காட்டும் நூல். இந்த இலக்கண நூலின் பொருளதிகாரம் மக்களின் அகவாழ்க்கை, புறவாழ்க்கை பற்றிய செய்திகளை அறிய உதவுகிறது. இலக்கணத்தில் ஒரு கருத்து நிலைபெற வேண்டுமாயின் அதற்கு முன் இலக்கியங்கள் பல சிறப்போடு விளங்கியிருக்க வேண்டுமல்லவா?

    தொல்காப்பியத்தில் ஆங்காங்கே திருமாலைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்றைப் பார்க்கலாமா?

    சங்ககால மக்கள் சிவனையும் வழிபட்டனர்; திருமாலையும் வழிபட்டனர்; சிவன் மைந்தனான முருகனையும் வழிபட்டனர்.

    மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    (தொல்காப்பியம் - பொருளதிகாரம் நூ. 5)

    (மாயோன் = திருமால், சேயோன் = முருகன்)

    இதன் மூலம் திருமால் முல்லை நில மக்களின் திணைக் கடவுளாக இருந்தமையை அறியலாம்.

    ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய கருப்பொருள்கள் பதினான்கில் தெய்வமும் ஒன்று என்று குறிப்பிடும் தொல்காப்பியம், முல்லை நிலத்திற்குரிய தெய்வம் திருமால் எனவும் குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் சேயோன் (முருகன்) எனவும் சுட்டுகிறது.

    1.2 சங்க இலக்கியம் - எட்டுத் தொகை

     

    எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று பரிபாடல். அதில் திருமாலின் புகழ் பேசப்படுகிறது.

    1.2.1 திருமால்

    ஆதிசேடன் என்னும் பாம்பினை உடையவன்; திருமகளை மார்பில் உடையவன்; ஒரு குழையை உடைய பலதேவனாகவும் இருப்பவன்; அந்தணரின் அருமறைப் பொருளானவன் எனப் போற்றுகிறது பரிபாடல் (பரி. 1:1-14). மற்றும் ஐம்பெரும் பூதங்களாகவும் இருப்பவன் (பரி.13:15-25) என அவன் புகழைச் சொல்லி வழிபடுகின்றனர் மக்கள்.

    எல்லாப் பொருளும், பொருளின் தன்மையும் திருமால் என்பதை,

    தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ
    கல்லினுள் மணியும் நீ ; சொல்லினுள் வாய்மை நீ;
    அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
    வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
    வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
    அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ


    (பரி. 3:63-68)

    எனப் போற்றுகின்றார் புலவர் கடுவன் இளவெயினனார்.

    (தெறல் = வெம்மை, நாற்றம் = மணம், மணி = நீலமணி, மறம் = வீரம், வாய்மை = உண்மை, மைந்து = வலிமை, பூதம் = நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகிய ஐம்பூதங்கள், வெஞ்சுடர் = சூரியன், திங்கள் = நிலவு, அளி - குளிர்ச்சி)

    மேலும் இறைவனின் பெருமையை இயற்கைப் பொருளைக் கொண்டு உணர்த்துகின்றார்.

    நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;
    நின், தண்மையும் சாயலும் திங்கள் உள;
    நின், சுரத்தலும் வண்மையும் மாரி உள
    நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
    நின், நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
    நின், தோற்றமும் அகலமும் நீரின் உள;
    நின், உருவமும் ஒளியும் ஆகாயத்து உள;
    நின், வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள:


    (பரி. 4:25-32)

    (வெம்மை = பகைவரை அழிக்கும் ஆற்றல், தண்மை = அளித்தல்அருளல், சுரத்தல் = விருப்பம் நிகழ்தல், வண்மை = கொடை, புரத்தல் = தாங்குதல், நாற்றம் = மணம், வண்மை = ஒளி, பூவை = காயாமலர், ஒலி = சொல்வருதல் = அவதரித்தல், ஒடுக்கம் = மறைதல், மருத்து = காற்று)

    இப்படி உருவப் பொருளிலும் அருவப் பொருளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனாகத் திருமாலைக் காட்டுகின்றது பரிபாடல்ஐம்பெரும்பூதங்களாகவும், கோள்களாகவும் இறைவனைக் கண்ட புலவர்கள் சொல்லினுள் வாய்மை நீ எனச் சுட்டி எண்ணம், பேச்சு, செயல் ஆகிய மூன்றிலும் நெருடல் இல்லாத தன்மையைக் காட்டுகின்றனர்.

    1.2.2 அவதாரங்கள்

    திருமால் அவதாரங்கள் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, இராம, பலராம, கிருஷ்ண, கல்கி எனப் பத்தாகும்.

    • கூர்ம அவதாரம்

    தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர், இந்திரன் இழந்த செல்வத்தை எடுப்பதற்காக. அப்பொழுது மத்தாக இருந்த மேருமலை கடலில் அழுந்தத் தொடங்கியது.

    தேவர்களுக்கு உதவ எண்ணிய திருமால் ஆமையாக உருக்கொண்டு மேருமலையைத் தாங்கி நின்றார் என்பது புராணம். இச்செய்தியைப் பரிபாடல் திரட்டின் முதல் பாடல் பின்வருமாறு கூறுகின்றது.


    திகழ் ஒளி முந்நீர் கடைந்தக்கால், வெற்புத்
    திகழ்பு எழ வாங்கித் தம்சீர்ச் சிரத்து ஏற்றி
    மகர மறிகடல் வைத்து நிறுத்துப்
    புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
    அமுது கடைய இருவயின் நாண்ஆகி
    மிகாஅ இருவடம் ஆழியான் வாங்க
    உகாஅ வலியின் ஒருதோழம் காலம்
    அறாஅது அணிந்தாரும் தாம்


    (64-71)

    (முந்நீர் = திருப்பாற்கடல், வெற்பு = மந்தரமலை, சிரத்து ஏற்றி = உச்சியில் ஏற்றி (ஆமை முதுகில் ஏற்றி), இருதிறத்தோர் = தேவர், அசுரர், அமுது = அமிழ்தம், நாணாகி = கயிறாகி, ஆழியான் = திருமால், அணிந்தார் = மத்தின் கயிறானார்)

    • வராக அவதாரம்


    இரணியனுடன் பிறந்த அசுரன் நிலத்தைச் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலுக்குள் மறைந்து கொண்டான். இச்செய்தியைக் காப்புக் கடவுள் திருமாலிடம் கூறித் தமக்கு உதவுமாறு வேண்டினர் தேவர்கள். திருமால் வராக வடிவில் கடலுக்குள் சென்று தன் கொம்பின் உதவியால் நிலமகளை அசுரனிடம் இருந்து மீட்டான் என்பது கதை.


    கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
    ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
    ஊழி யாவரும் உணரா;

    (பரி. 2:16-18)

    (கேழல் = பன்றி, ஒருவினை = திருவிளையாடல்)

    (கடலில் மூழ்கிய நிலத்தைப் பன்றி உருவில் தன் கொம்பால் மேலே கொண்டு வந்தவன்)

    • நரசிம்ம அவதாரம்


    இரணியன், பிரகலாதன் ஆகியோர் பற்றிய கதை நரசிம்ம அவதாரத்தில் இடம்பெறும். இரணியன் தன்னை விலங்கு, மனிதர், தேவர் யாரும் கொல்லக் கூடாது; பகல், இரவு, வீட்டுக்குள், வெளியில் யாரும் எந்த நேரத்திலும் தன்னைக் கொல்லக்கூடாது. ஆயுதங்களாலும், தனக்கு அழிவுவரக்கூடாது எனப் படைப்புக் கடவுள் பிரம்மாவிடம் வரம் பெற்றிருந்தான். எனவே எல்லோரும் தன்னை வணங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினான்.

    தந்தை இரணியனை, திருமால் அடியவன் ஆன மகன் பிரகலாதன் வணங்க மறுத்தான். இருவருக்கும் நடந்த வாக்குவாதம் முற்ற இறைவனைக் காட்டு எனத் தந்தை கேட்க, மகன் ‘தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்’ என விடை சொன்னான். இறைவன் நரசிம்ம வடிவங்கொண்டு தூணைப்பிளந்து கொண்டு வந்து இரணியனை இழுத்துத் தன் மடியில் கிடத்தித் தன் நகத்தால் கிழித்துக் கொன்றான் என்பது நரசிம்ம அவதாரமாகும்.

    இரணியன்-பிரகலாதன் கதையைப் பாடியுள்ளார் கடுவன் இளவெயினனார் (பரி. 4:10-21).

    • வாமன அவதாரம்


    குள்ள வடிவு கொண்ட அந்தணன் தோற்றத்தில் மகாபலிச் சக்கரவர்த்தியின் செருக்கை அடக்கியது வாமன அவதாரம் ஆகும். அரசனிடம் மூன்று அடி மண் கேட்டு, பின் ஓரடியால் மண்ணையும், ஓரடியால் விண்ணையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் இல்லாமல் போக, மூன்றாவது அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து அவனைப் பாதாளத்திற்குள் தள்ளியது வாமன அவதாரக் கதை.

    பெரும்பாணாற்றுப்படை (29-31) என்னும் ஆற்றுப்படை நூல் தொண்டைமான் இளந்திரையன் முன்னோருடன் திருமாலை ஒப்பிட்டுக் காட்டுகின்றது. அந்த இடத்தில் வாமன அவதாரத்தை எடுத்துரைக்கின்றது. கலித்தொகையில் நல்லந்துவனார் பாடிய நெய்தற்கலியிலும் இக்குறிப்பு உள்ளது.

    • பரசுராமன் அவதாரம்


    திருமாலின் கூறாகிய பரசுராமன், முன்பு விடாமல் முயன்று முடித்த வேள்விக்களத்தில், கயிற்றில் சுற்றிக் கட்டப்பட்ட அழகிய தூண்போல என உவமை கூறுவதின் வழி,

    மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
    முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி
    கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்
    அருங் கடி நெடுந்தூண் போல


    (அகநானூறு : 220-5-9)

    (மன் மருங்கு = அரசர் குலம், வனப்பு = அழகு, மழுவாள் நெடியோன் = மழுவாகிய வாள்படை உடைய பரசுராமன்)

    மதுரை இளநாகனார் பரசுராம அவதாரத்தை சுட்டுகின்றார் (காவலை உடைய தூண் போலத் தலைவியின் ஆகம் காணற்கரியது). ஆக, அகப்பாடலிலும் உவமை கூறும்போது திருமால் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளதை நெய்தல் திணையில் அமைந்த அகநானூற்றுப் பாடல் வழி அறிகின்றோம்.

    • இராமன் அவதாரம்


    இராமன் அரக்கரை வெல்ல, போர் பற்றிய அரிய மறை (இரகசியச்) செய்தியை வானர வீரர்களோடு ஆராய்ந்த பொழுது பறவைகள் ஒலி எழுப்புகின்றன. அவ்வொலி பேச்சுக்கு இடையூறாக இருக்கின்றது. எனவே இராமன் பறவைகளின் ஒலியை, கேட்காமல் செய்தான். பல விழுதுகளை உடைய ஆலமரத்தில் இருந்த பறவைகள் ஒலி எழுப்பவில்லை. எனவே, ஆலமரம் ஒலியின்றி அமைதியாக இருந்தது என்பதை,

     


    வென்வேற் கவுரியர் தொல் முதுகோடி
    முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை
    வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
    பல் வீழ் ஆலம் போல
    லி அவிந்தன்று இவ்வழுங்கல் ஊரே

    (அகம்,70:13-17)

    (வென்வேல் = வெற்றிவேல், கவுரியர் = பாண்டியர், முதுகோடி = கோடிக்கரை, இரும் = பெரிய, பௌவம் = கடல், இரங்கும் = ஒலிக்கும், துறை = கடற்கரை)

    எனச் சுட்டுகிறார் மதுரை தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார். தலைவன் வரைவு (திருமணம்) உடன்பட்டதும் வதுவை (திருமணம்) கூடும். எனவே அலர் (பழிச்சொல்) பேசுகின்ற இந்த ஊரும் அது போல அலர் அவிந்து கிடக்கும். இப்படிப் பொருத்தமான உவமையாகப் புராணக் குறிப்புகளை அகப்பாடல் பாடிய புலவர்கள் எடுத்தாண்டுள்ளனர். இப்பாடலும் முற்காட்டிய பரசுராம அவதாரத்தைச் சுட்டிய பாடலைப் போன்று நெய்தல் திணையில் அமைந்த அகநானூற்றுப் பாடல்.

    • கிருஷ்ண அவதாரம்

    நீராடும் போது கண்ணனால் ஆடை கவரப்பட்ட ஆயமகளிர் அணிந்து கொள்ள, குருந்த மரக்கிளை நீருக்குள்ளே வளைந்து செல்லும்படி தம் திருவடியால் மிதித்த திருமால் போல என்னும் உவமை,

    வண் புனல் தொழுநை வார் மணல் அகன்துறை
    அண்டர் மகளிர் தண் கழை உடீஇயர்
    மரம் செல மிதித்த மாஅல் போல

    (அகநானூறு : 59 : 3-6)

    (தொழுநை = யமுனை, மரம் செல = குருந்த மரம் வளைந்திட, அண்டர் மகளிர் = ஆயமகளிர், ஆயர் = ஆயர் குலத்தை சேர்ந்தவர்; ஆடு, மாடு மேய்க்கும் தொழிலைச் செய்பவர்)

    நீர்வளம் பொருந்திய யமுனை ஆற்றில் மணலை உடைய அகன்ற துறையில் நீராடிய ஆயர் மகளிர் குளிர்ந்த தழையை உடுத்திக் கொள்ளக் குருந்த மரம் வளையும்படி மிதித்துத் தந்தான் கண்ணன் என்று கிருஷ்ண அவதாரச் செயலைக் குறிப்பிடுகின்றது.

    கம்சன் அனுப்பிய குதிரை வடிவமாக வந்த அசுரனைக் கண்ணன் கொன்றான் என்பது முல்லைக் கலியில் உள்ளது. ஏறு தழுவிய ஆயர்களைத் தோழி தலைவிக்குத் தனித்தனியே காட்டுகின்றாள். ‘காயாம்பூங் கண்ணியைச் சூடிய பொதுவன் ஏறு தழுவிய பிறகு நிற்கும் காட்சி,

    மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை
    வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்கொல்
    மாயோன் என்று; உட்கிற்று என்நெஞ்சு

    (103: 53-55)

    (மேவார் = பகைவர், விடுத்தந்த = அனுப்பிய, வாய்பகுத்து = வாய் கிழித்து, புடைத்த = அடித்த, ஞான்று வேளை, உட்கிற்று = நினைத்து)

    என்று கூறுவது அரக்கனை அழித்த கண்ணன் போன்று இருந்தது என உவமையாக இடம் பெற்றுள்ளது.

    மறம்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக்
    குறங்கு அறுத்திடுவான் போல்

    (52:2-3)

    (நூற்றுவர் தலைவன் = துரியோதனன், குறங்கு = தொடை)


    மல்லரை மறம் சாய்த்த மால்போல்

    (52:5)

    எனத் தலைவனுக்கு உவமைகள் வந்து உள்ளன. இதன் வழி நூற்றுவர்களுக்குத் தலைவன் ஆன துரியோதனனை வீமன் அழித்தான் என்றும், மல்லர்களைக் கண்ணன் அழித்தான் என்றும் அறிகின்றோம்.

    ‘மறம்’ வீழ்த்தப்படுவது அவதாரப் பெருமை என்பதும் புலன் ஆகின்றது.

    பாண்டவர்கள் அரக்கினால் செய்த வீட்டில் இருக்கும்பொழுது, இரவில் துரியோதனன் நெருப்பை வைத்துக் கொளுத்தி விடுகின்றான். வீமன்  அரக்குவீட்டை உடைத்து உள்ளே இருந்தவரைக் காப்பாற்றுகின்றான் (25: 1-8).

    தலைவன் வெஞ்சுரம் செல்ல இருக்கின்றான் என்கிறாள் தோழி. அகப்பாடல்களில்

    •  

    ஏறு தழுவும் போது தலைவனின் தோற்றத்தை உவமிக்கும் போதும்,

    •  

    தலைவனைப் பிரிவுணர்த்திய பின் செலவைத் தள்ளிப்போடும் போதும் / தவிர்க்கும் போதும்,

    கிருஷ்ண அவதாரக் குறிப்பு உள்ளது.

    • பலராமன்

    பலராமன் பற்றிய குறிப்பு சங்க நூல்களில் உள்ளது. நற்றிணையில்,


    மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
    வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி

    (நற்றிணை - 32)

    (மாயோன் = கண்ணன், அன்ன = போல / ஒத்த, மால்வரைக்கவான = மலைப்பக்கம், வாலியோன் = வெண்மை நிறமுடைய பலதேவன்)

    எனத் திருமாலும் பலராமனும் அடுத்தடுத்து இடம் பெறுகின்றனர். பலராமன் நீலநிற ஆடையை அணிந்திருந்ததை நெய்தற்கலி (7) காட்டுகின்றது.

    முல்லைக்கலி (5) காளைகளுக்கு உவமையாக கிருஷ்ண - பலதேவர் ஆகிய இருவரைக் கூறும்.

    புறநானூறு சிவன்-முருகன் ஆகியோருக்கு இணையாக கிருஷ்ண - பலராமன் ஆகிய இருவரை,

    கடல்வளர் புரிவளை புரையும் மேனி
    அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடியோனும்
    மண்ணுறு திருமணி புரையும் மேனி
    விண் உயர் புட்கொடி விறல் வெய்யோனும


    (புறம். 56: 3-6)

    (வளை = சங்கு, புட்கொடி = கருடக் கொடி, நாஞ்சில் = கலப்பை, மேனி = உடம்பு, விறல் = வெற்றி)

    என மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார் பாடியுள்ளார். மேலும் அவர்களை வலிமை உடையவர்களாகவும் காட்டுகிறார்.

    சோழன் திருமாவளவனும் பாண்டியன் பெருவழுதியும் சேர்ந்திருக்கக் கண்ட காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்,

    பால்நிற உருவின் பனைக் கொடியோனும்
    நீல்நிற உருவின் நேமியோனும் என்று
    இருபெருந் தெய்வமும் உடன் நின்றா அங்கு

    (புறம், 58:14-16)

    என்று கிருஷ்ணன் பலதேவர்களுக்கு உவமிக்கின்றார்.

    ஆக, சங்க இலக்கியங்கள்

    • கிருஷ்ணனும் பலராமனும் வழிபடுதெய்வமாக இருந்ததைக் குறிப்பிடுகின்றன.

    • சிவன் - முருகன் வழிபாடு போலவே மக்கள் கிருஷ்ண -பலராமர் வழிபாட்டையும் செய்தனர்.

    • பலராமனை வலிமைக்கு உதாரணமாகக் காட்டுகின்றனர் புலவர்கள்.

    1.2.3 வழிபடு கடவுள்

    பாரதம் பாடிய என்ற சிறப்பையும் பெயரோடு பெற்றிருக்கின்ற புலவர் பெருந்தேவனார்.

    மா நிலம் சேவடி ஆக, தூ நீர்
    வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
    விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
    பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
    இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
    வேத முதல்வன், என்ப
    தீது அற விளங்கிய திகிரியோனே

    என நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்துப்பாடி, திருமாலை முழுமுதற் கடவுளாகக் காட்டுகின்றார். திருமால், ஐம்பெரும் பூதம், மதியம், சூரியன், திசை, இப்படி எல்லாம் அவன், அவனே உலகத்து உயிர், உயிர்கள் அனுபவிக்கும் பொருள், வேதத்தின் பொருள் எனவே அவனை வணங்குவோம் என்பர்.

    எனவே நிலத்தை அவன் திருவடியாகவும் கடலை அவன் ஆடையாகவும், திசையை அவன் கை ஆகவும், சந்திரன் சூரியன் ஆகியவற்றை அவன் இரு கண்களாகவும் கண்டு உருவகப்படுத்தி உள்ளார். இறைவனையும் இயற்கையையும் பிரித்தறிய முடியாது என்பது பொருள்.

    வழிபடு கடவுள் என்றால் கோவிலும் இருக்கத்தானே செய்யும். எனவே வழிபாட்டையும் அதற்கான வழிமுறைகளையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

    1.2.4 வழிபாடு

    பதிற்றுப்பத்து நான்காம் பத்தில் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் பற்றிப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார் அந்நாட்டு மக்கள் படித்துறையில் நீராடி, துளசி மாலையை மார்பில் அணிந்துள்ள ஆழிப்படையை உடைய செல்வனாகிய திருமாலை வழிபட்டுச் சென்றனர்.


    ‘செல்வன் சேவடி பரவி’

    (பதிற்றுப்பத்து 4:1:9)

    (பரவி = வணங்கி)

    எனப் பாடியுள்ளார். திருமாலை வழிபட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர் என்பதால் திருமாலுக்குரிய உருவ வழிபாடும் இடமும் (கோவில்) சங்க காலத்தில் இருந்தன என்பதையும் அறிகின்றோம்.

    திருமாலிருஞ்சோலை (அழகர்கோயில்), இருந்தையூர் ஆகிய இடங்களைத் திருமால் இடமாகக் காட்டுகின்றன பரிபாடலும் பரிபாடல் திரட்டும். திருமுருகாற்றுப்படையும் அறுபடை வீடு பற்றிப் பேசும்போது திருமாலைக் குறிப்பிடுவதால் திருமாலுக்குரிய வழிபாட்டு இடம் உண்டென்பது பெறப்படுகின்றது.


    • வழிபடுதல்

    மக்கள் திருமாலை வழிபட்டதை,

    நலம் புரீஇ அம்சீர் நாம வாய்மொழி
    இது என உரைத்தலின் எம்உள் அமர்ந்து இசைத்து இறை
    இருக்குன்றத்து அடிஉறை இயைக! எனப்
    பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே

     (பரி. 15:63-66)

    (நலம் புரீஇ = நன்மை செய்யும், நாம வாய்மொழி = வேதம், இருங்குன்றம் = திருமாலிருஞ்சோலை, பெரும் பெயர் இருவர் = நம்பி மூத்தபிரானும் வசுதேவனும்)

    என்று பரிபாடல் காட்டுகின்றது. சுற்றத்தாரோடு சென்று


    , . . . . . . . . மரபினோய் நின்அடி
    தலை உற வணங்கினேம், பல்மாண் யாமும்
    கலிஇல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்
    கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்
    ‘கொடும்பாடு அறியற்க, எம் அறிவு:

    (பரி. 2: 72-76)

    (கடும்பு = சுற்றம், கலி இல் = துளக்கமற்ற (அசைவற்ற), ஏத்தி = உயர்த்தி, வாழ்த்தி = போற்றி, பரவுதும் = வணங்குகிறோம், கொடும்பாடு = கொடிய துன்பம்)

    . . . . . . . .நின் அடி தொழுதனெம்
    பல்மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்
    முன்னும் முன்னும் யாம்செய்தவப் பயத்தால்
    இன்னும் இன்னும்எம் காமம் இதுவே.


    (பரி. 13:61-64)

    (பல்மாண் = பலமுறை, அடுக்க = அடுத்தடுத்து, காமம் = விருப்பம்)

    எனத் தொடர்ந்து திருமால் திருவடியை வணங்கும் அருள் வேண்டும் எனப் பாடுகின்றார் நல்வழுதியார்.

     திருவடி

    திருமாலுடைய திருவடி பிறவிப் பெருங்கடலைக் கடக்கத் துணை செய்வது: பிறப்பறுக்கும் திருவடி.

    மா அயோயே மா அயோயே!
    மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி
    மணிதிகழ் உருபின் மாஅயோயே!

    (பரி. 3:1-3)

    (மறு பிறப்பு அறுக்கும் = பிறவித்துன்பம் ஒழிக்கும், மாசுஇல் = தூய்மையான, மணி திகழ் உருபின் = நீல மணி போன்ற நிறம் உடையவன்)

    எனப் புகழ்ந்து,

    முதல் முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
    பிறவாப் பிறப்பு இல்லை, பிறப்பித்தோர் இலையே

    (பரி:3:71-72)

    திருமால் உலகில் முதல், இடை, இறுதியில் படைப்பு, அளிப்பு (காத்தல்), அழிப்பு போன்றவை செய்தலால் அவன் பிறவா பிறப்பு இல்லை எனச் சிறப்பிக்கின்றது.

    1.2.5 இராமகாதைக் குறிப்பு

    இளஞ்சேட்சென்னி என்ற மன்னனைப் பாணர்கள் பாடிப் பரிசில் பெறுகின்றனர். அவற்றுள் அணிகலன்களும் செல்வமும் அடங்கும். தாங்கள் பெற்ற அணிகளுள் விரலுக்குரிய மோதிரத்தைக் காதுக்கும், காதுக்குரியதை விரலுக்கும், இடையில் அணிவதைக் கழுத்துக்கும், கழுத்துக்குரியதை இடைக்குமாக இப்படி மாறி மாறி அணிந்து கொள்வது வேடிக்கை ஆகவும், நகைப்புக்கு இடமாகவும் உள்ளது. எப்படி?


    கடுந்தெற ல்இராம னுடன்புணர் சீதையை
    வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
    நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கன்
    செம்முகப் பெருங்கிளை யுழைப்பொலிந் தாஅங்கு
    அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே

    புறநா: ( 378: 18-22)

    (மதரணி = ஒளிரும் அணிகலன், அரக்கன் = இராவணன், வௌவிய = கவர்ந்த, பெருங்கிளை = குரங்குக் கூட்டம், இழை = அணிகலன்)

    இராமனுடன் வாழ்ந்த சீதையை அரக்கன் கவர்ந்து கொண்டு வந்தான். அப்பொழுது சீதை தான் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாகக் கீழே போட்டாள். அவை குரங்குக் கூட்டங்களின் கையில் கிடைத்தன. அக்குரங்குகளுக்கு நகைகளை எப்படி எங்கு அணிவது எனத் தெரியவில்லை. எனவே அவை மாறி மாறி அணிந்து கொண்டன. அதுபோலச் ‘சோழன் கோயிலில்’ பரிசில் பெற்ற பாணர்கள் கூட்டமும் செய்தது எனப் புறநானூறு இராமாயணத்தில் வரும் நிகழ்வுக் குறிப்புகளை உவமையாகக் காட்டுகின்றது.

    1.2.6 பாரதப் போர்க்களம்

    மகாபாரதத்தின் கிருஷ்ண அவதாரச் சிறப்பும், இராமாயணத்தின் ராம அவதாரப் பொலிவும் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.

    கலித்தொகையில் இசைக் கருவிகள் ஒலிக்க மாட்டின் கொம்புகளுக்கு இடையில் விழுந்து ஆயர்கள் ஏறு தழுவிய இடம் ஆகிய தொழுவம் (தொழுஉ) பாரதப் போர்க்களம் போல் உள்ளதாம்.

    புரிபு மேல்சென்ற நூற்றுவர் மடங்க
    வரி புனைவல்வில் ஐவர் அட்ட
    பொரு களம் போலும் தொழூஉ

    கலி (104 : 57-59)

    (நூற்றுவர் = கௌரவர், ஐவர் = பாண்டவர், பொருகளம் = போர்க்களம், தொழுஉ = மாடுகள் கட்டும் இடம்)

    1.2.7 பாரதக் கதைக்குறிப்பு

    ஏறு தழுவும் பொதுவனை (முல்லை நிலப்பெயர்) ஏறு குத்தி அதன் கொம்பினால் புண் உண்டாகின்றது. அதிலிருந்து இரத்தம் வழிகின்றது; அவன் அஞ்சவில்லை. அக்காட்சி பாரதப் போரில் பாஞ்சாலி கூந்தலைப் பற்றியவனைக் கொன்று சபதம் நிறைவேற்றிய வீமனை நினைவு படுத்துகிறது. பாடல்:

    அம் சீர் அசைஇயல் கூந்தற் கைநீட்டியான்
    நெஞ்சம் பிளந்துஇட்டு நேரார் நடுவண், தன்
    வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்

    (101:18-20)

    துச்சாதனனைக் கொன்று வஞ்சினம் நிறைவேற்றிய வீமனைப் போல் காட்சி தருகின்றான் பொதுவன் என உவமை வழி, பாரதப்போரில் பாண்டவரின் வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளதைக கலித்தொகையில் முல்லைக்கலியின் முதல் பாடல் வழி அறிகின்றோம்.

    முல்லைக் கலிப் பாடல்களில்,

    •  

    வீமனின் வீரம் பொதுவனின் தோற்றத்திற்கு உவமிக்கப் படுகின்றது
    •  

    துச்சாதனன் பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றிய செய்தி

    •  

    பாரதப் போர்க்களம்

    •  

    அவதாரச் சிறப்பு

    போன்ற பல செய்திகள் முல்லைத்திணையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    ஆயர்களின் கடவுளாக, ஆயர்களின் வாழ்வோடு ஒன்றிய பெருமாளை, அந்நில மக்கள் வாழ்வை, நிலமும் பொழுதுமாக வைத்துப் பாடிய புலவர்கள் பதிவு செய்திருப்பது இலக்கியப் பாரம்பரியத்திற்கு வளம் சேர்த்திருப்பதோடு, ஆழ்வார் பாசுரங்களுக்கும் வித்திட்டிருக்கின்றது.

    1.2.8 ஐம்படைத்தாலி

    புறநானூற்றில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடிய இடைக்குன்றூர் கிழார் வாகைத்திணையில் அரச வாகைத் துறையில் ‘ஐம்படைத்தாலி களைந்தன்றும் இலனே’ (புறநானூறு : 77:7) எனப் பாடுகின்றார்.

    ஐம்படைத்தாலி என்னும் இத்தொடருக்கு உரையாசிரியர்கள் சங்கு, சக்கரம், கதாயுதம், வாள், வில் ஆகிய ஆயுதங்களின் வடிவமாக அமைக்கப்படும் ஓர் ஆபரணம். பஞ்சாயுதமென்றும் பிறந்த ஐந்தாம் நாளில் பிள்ளைகளுக்கு அணிவித்தல் மரபென்றும் கூறுவர். இந்த உரையும் திருமால் காத்தல் கடவுள் எனக் கருதிய மக்களின் நிலையைக் காட்டுகின்றது.

    • 1.3 சங்க இலக்கியம் - பத்துப்பாட்டு

       

      பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்களிலும் முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி ஆகிய நூல்களிலும் திருமாலைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றைப் பார்க்கலாமா?

      1.3.1 திருமுருகாற்றுப்படை

      திரு ஆவினன்குடி பற்றிச் சொல்லும்போது புலவர் நக்கீரர் திருமாலைப் ‘புள் அணி நீள் கொடிச் செல்வன்’ (அடி.151) என்றும்; காத்தற் கடவுள் என்றும் சுட்டுகின்றார்.

      1.3.2 சிறுபாணாற்றுப்படை

      சிறிய யாழை வைத்திருக்கும் பாணனை ஆற்றுப்படுத்தும் சிறுபாணாற்றுப்படையில்,

      கா எரியூட்டிய கவர்கணைத் தூணிப்
      பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்
      பணி வரை மார்பன், பயந்த நுண்பொருட்
      பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்


      (239 -242)

      பற்றிப் பேசும்போது வீமன் மடை (சமையல்) நூலில் குறிப்பிட்டபடியே ஒய்மாநாட்டு நல்லியக்கோடன் அரண்மனையில் பல்வேறு வகை உணவுகள் சமைத்தனன் என்ற குறிப்பு உள்ளது.

      அர்ச்சுனன் காண்டவ வனத்தைத் தீயிட்டுக் கொளுத்திய செய்தியும் கூறப்படுகின்றது.

      1.3.3 பெரும்பாணாற்றுப்படை

      பெரும்பாணாற்றுப்படையில் திருமாலைப் பற்றி ஆங்காங்குச் செய்திகள் உள்ளன.

      இரு நிலம் கடந்த திருமறு மார்பின்
      முந்நீர் வண்ணன் பிறங்கடை

      ( 29-30)

      (திருமறு மார்பு = திருமகள் பொருந்திய மார்பு, முந்நீர் = கடல்)

      என ஈரடியால் மூவுலகும் அளந்த திருமாலைக் காட்டுகின்றார்.

      . . . . . . . . . . . .நீடு குலைக்
      காந்தள் அம்சிலம்பில் களிறு படிந்தாங்கு
      பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்

      (அடி.371-373)

      (காந்தள் = மலர், சிலம்பு = மலை)

      மலையில் படிந்த யானைபோல, பாம்பணையில் பள்ளி கொண்ட திருமால் என விளக்கி, திருவெஃகாவில் திருமால் வழிபாடு இருந்ததைக் காட்டுகின்றார்.

      கலித்தொகையில் பொதுவனின் ஏறு தழுவிய வீரத்தையும் வெற்றியையும் காட்டப் பாரதப் போர்க்களம் உவமையாக வந்துள்ளது. புறநானூற்றில் மன்னனின் வெற்றியையும் கொடைச் சிறப்பையும் காட்டும் பொழுது கௌரவர் பற்றிய குறிப்பும், போர்க்களம் பற்றிய குறிப்பும் உள்ளது.

      பெரும்பாணாற்றுப்படையில்,

      ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய
      பேர் அமர்கடந்த கொடுஞ்சி நெடுந்தேர்
      ஆராச் செருவின் ஐவர் போல

      (415 - 417)

      (ஈர்ஐம்பதின்மர் = நூற்றுவர், களம் = போர்க்களம்)

      எனப் பாரதப்போர் நிகழ்வும், வெற்றியும் பற்றிப் பாடுகின்றார் உருத்திரங் கண்ணனார். எனவே சேரநாட்டிலும் தொண்டை நாட்டிலும் தோன்றிய இலக்கியங்கள் பாரதப்போர் பற்றிய குறிப்பை மன்னன் பெற்ற வெற்றியைப் பாடும்போது பதிவு செய்துள்ளன.

      நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
      நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்
      தாமரைப் பொகுட்டின் காண் வரத்தோன்றி

      (403-404)

      (நெடியோன் = திருமால், நான்முகன் = பிரமன், பொகுடு = (தாமரை) மலர்)

      என்னும் அடிகள் திருமாலின் கொப்பூழ் - அதில் இருந்து தோன்றிய தாமரை மலரில் பிரமன் தோன்றினான் என்று சுட்டுகிறது.

      1.3.4 முல்லைப்பாட்டு

      முல்லைப்பாட்டின் தொடக்கத்தில் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகன் நப்பூதனார், திருமால் சக்கரப்படையும் சங்கும் கைகளில் உடையவன் என்பதை,

      நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
      வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
      நீர் செல நிமிர்ந்த மாஅல் போல

      (1-3)

      (நேமி = சக்கரம், வலம்புரி = சங்கு, மாதாங்கு = திருமகளைத் தாங்கியிருக்கிற, மாஅல் = திருமால்)

      என்றும், மாவலியிடம் மூன்றடி மண்கேட்டுப் பின் நெடியோனாய் உலகம் அளந்தவன் என்றும் திருமால் பற்றிய செய்திகளை மூன்று அடிகளில் பெய்து வைத்துள்ளார். ஆக, திருமால் தோற்றப் பொலிவு வெளிப்படையாகவும், அவதாரச் சிறப்புக் குறிப்பாகவும் பெறப்படுகின்றது.

      1.3.5 மதுரைக்காஞ்சி

      தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிய புலவர் மாங்குடி மருதனார், மறவர்கள் திருமாலுக்குரிய ஓண நாளில் தேறல்(கள்) உண்டு மகிழ்ந்து திரிந்தனர். இதை,

      கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
      மாயோன் மேய ஓண நல்நாள்

      (590-591)

      (மாயோன் = கண்ணன், ஓண நல்நாள் = கண்ணன் பிறந்த நாள்)

      எனப் பாடியுள்ளார்.

      ஆக, திருமாலுக்குரிய திருவோண நாளை மதுரை மாநகரில் சங்ககாலத்தில் சிறப்பாக மக்கள் கொண்டாடினர் என்பதை அறிகின்றோம்.

      சங்க இலக்கியத்தில்,

      அவதாரம் பற்றிய செய்திகள் குறிப்பாக மட்டும் உள்ளன.

      இராமன், வராகம் (கேழல்) ஆகிய அவதாங்கள் மட்டும் பெயரோடு உள்ளன.

      திருமால் பற்றிய செய்திகள் பரிபாடலிலும் கலித்தொகையிலும் அதிகமாக உள்ளன.

      • 1.4. அறநூல்கள்

        பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் அறநூல்களாகக் கருதப்படுகின்றன. அவை நீதிக்கருத்துகளை வெளியிடுகின்றன. அதன்மூலம் மக்கள் வாழ்வை வளப்படுத்தும் சீரிய தொண்டினைச் செய்கின்றன.

        1.4.1 திருக்குறள்

        அற நூல்களுள் ஒன்றான திருக்குறள் காமத்துப் பாலில் வரும்,

        தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
        தாமரைக் கண்ணான் உலகு

        (குறள் : 1103)

        என்னும் குறளில் உள்ள இரண்டாம் அடிக்கு, ‘செங்கண்மால் உலகம்’ என்பார் உரையாசிரியர் பரிமேலழகர்.

        1.4.2 திரிகடுகம்

        மாவலி அரசனிடம், குள்ள வடிவம் உடையவனாக மூன்றடி மண் கேட்டதையும், கண்ணனாய்க் குருந்த மரத்தைச் சாய்த்ததையும், வண்டி வடிவில் வந்த அசுரனைக் கொன்றதையும் திரிகடுகம் கடவுள் வாழ்த்துச் செய்யுள் பின்வருமாறு சுட்டுகிறது.

        கண் அகல் ஞாலம் அளந்த தூஉம், காமரு சீர்த்
        தண் நறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய
        மாயச் சகடம் உதைத்த தூஉம் - இம்மூன்றும்
        பூவைப் பூவண்ணன் அடி

        (சகடம் = வண்டி)

        இப்பாடல் வழி திருமாலின் திரு அவதாரச் சிறப்பையும், திருவடியின் பெருமையையும் அறிய முடிகிறது.

        • 1.5 காப்பியங்கள்

           

          தனிப் பாடல்களைக் கொண்டு அமைந்த சங்க இலக்கியப் போக்கை மாற்றி, ஒரு கதையின் அடிப்படையின் காப்பியத்தை அமைத்தவர் இளங்கோவடிகள். இவரைத் தொடர்ந்து, பிற ஆசிரியர்களும் காப்பிய அமைப்பில் ஈடுபட்டனர்.

          1.5.சிலப்பதிகாரம்

          கி.பி. 2-ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில், புகார்க் காண்டத்தில் இந்திரவிழவூரெடுத்த காதையிலும், மதுரைக் காண்டத்தில் அரங்கேற்று காதை, காடுகாண் காதை, ஊர்காண் காதை, ஆய்ச்சியர் குரவை, கனாத்திறம் உரைத்த காதை ஆகியவற்றிலும் திருமால் பற்றிய குறிப்பு, கோயில், வழிபாடு, விழா என்பன போன்ற பல செய்திகள் உள்ளன.

          • கோட்டம் (கோயில்)

          திருமாலின் கிடந்த கோலத்தையும் நின்ற கோலத்தையும் காடுகாண் காதை காட்டுகின்றது. கோவலனிடம் மாமறையாளன், தன் கண்கள் திருமாலின் கோலத்தைக் காட்டு எனத் தன் உள்ளத்தைக் கலக்குவதால் அரவணையில் பள்ளிகொண்டவனைக் காணவந்தேன் எனக் கூறுகிறான். இதை,

          திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
          வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
          ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை

          (11:40-42)

          செங்க ணெடியோ னின்ற வண்ணமும்
          என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற
          வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்

          (11:51-53)

          என உரையாடுவதாகக் காட்டுவர் இளங்கோவடிகள்.

          திருவரங்கத்தையும், திருவேங்கடத்தையும் தரிசிக்க மாமுதுமறையோன் குடமலையில் உள்ள மாங்காடு என்னும் ஊரில் இருந்து வந்துள்ளார். தாம் வாழுகின்ற ஊரில் மட்டுமல்லாமல், பிற ஊர்களில் உள்ள தாம் வழிபடும் தெய்வங்களைப் பயணம் செய்து வழிபட்டனர் மக்கள் என்பதற்கு மேற்காட்டிய பாடலடிகள் சான்றாகும்.

          சிலம்பில் உள்ள இந்திரவிழா ஊர் எடுத்த காதை, கோவில்கள் பற்றி விரித்துரைக்கின்றது.


          வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
          நீலமேனி நெடியோன் கோயிலும்

          (5:169-173)

          என்று பலதேவன், திருமால் போன்றோரின் கோயில்கள் ஒரே ஊரில் வழிபாட்டுக்கு உரியனவாக இருந்தன. மேலும் வேறுவேறு கடவுளர்களுக்கு விழா எடுத்தனர் என்ற செய்தியையும் (178) குறிப்பிடுகின்றது.

          அரசனும் இறைவனும் வீற்றிருக்கின்ற இடம் கோயில் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அரசனைப் பாடிய மக்கள் அந்த இடத்தில் இறைவனை வைத்துக் கோயிலில் சென்று பாடினர். நாளடைவில் அரசன் இருந்த இடம் கோயில் என்று அழைக்கும் வழக்கம் இல்லாமல் போயிற்று. இதற்குப் பாலமாக அமைந்திருப்பது மேற்காட்டிய சிலப்பதிகார அடிகளாகும். ஊர்காண் காதையிலும் (14:7-12)

          நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்
          உவணச் சேவ லுயர்த்தோ னியமும்
          மேழி வலனுயர்த்த வெள்ளை நகரமும்
          கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்

          (நுதல்விழி நாட்டத்து இறையோன் = சிவன், உவணச் சேவல் = கருடச் சேவல், மேழி வலனுயர்த்த வெள்ளை = பலதேவர், நியமம் / நகரம் / கோட்டம் = கோயில், கோழிச்சேவல் கொடியோன் = முருகன்)

          என்று பல தெய்வங்கள் முன்சொன்ன இந்திரவிழா ஊர் எடுத்த காதையில் தொகுக்கப்பட்டுள்ளன. கோயில் என்ற சொல் தரும் பொருளை நியமம், நகரம், கோட்டம் போன்ற சொற்களும் குறிப்பதை அறிகின்றோம்.

          கண்ணகி இடைச்சேரியில் இருந்தபொழுது பல தீ நிமித்தங்கள் தோன்றுகின்றன. அதுகண்ட மாதரி ‘ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவன் தன் தமையனோடு ஆடிய குரவைக் கூத்து ஆடுதும் யாம்’ என்றாள்.

          ஆய்ச்சியர் குரவையில் பெண்கள் ஆடும் விளையாட்டு இசைக் களஞ்சியம் ஆகும்.

          கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
          இன்றுஆனுள் வருமே லவன்வாயிற்
          கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ

          (பாடல் -19)

          (குணில் = குறுந்தடி, ஆனுள் = பசுக்கூட்டத்தில், கனி = விளாம்பழம், கன்று = ஆவின் கன்று)

          வஞ்சத்தால் வந்து நின்ற ஆவின் கன்றினைக் குறுந்தடியாகக் கொண்டு அங்கே நின்ற விளவின் கனியை உதிர்த்த கண்ணன் இன்று நம் வழிபாட்டால் நம் பசுக்கூட்டத்தில் வருவானாயின் அவன் வாயின் மூலம் கொன்றைக் குழலின் இனிய ஓசையைக் கேட்போம் தோழீ என்று பாடும் போது திருமாலின் கண்ணன் (கிருஷ்ண) அவதாரம் பேசப்படுகிறது.

          'பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாதவன், கொல்லையம்சாரல் குருந்தொசித்த மாதவன்’ எனத் திருமாலின் சிறப்பைப் பாடி ஆடுகின்றனர் ஆய்ப்பாடிப் பெண்கள். ‘வடவரையை மத்தாக்கி வாசுகிப் பாம்பைக் கயிறாக மாற்றி, திருப்பாற்கடலைக் கடைந்தவன்; மூவுலகும் இரண்டடியால் அளந்தவன், பாண்டவர்களுக்காகக் கௌரவரிடம் தூது சென்றவன்’ எனப் பெருமாளின் செயல்பாடுகள் பற்றிப் பாடுகின்றனர். பரிபாடல், கலித்தொகை ஆகிய தொகை நூல்களுக்கும் நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கும் இடையே பாலமாக அமைவது சிலப்பதிகாரம் என்பதை நூல்வழி அறியும் செய்திகள் காட்டுகின்றன.

          . . . . . தொல் இலங்கை கட்டழித்த
          திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே

          (35)

          கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
          கண்ணிமைத்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்ணே

          (36)

          . . . . . .பஞ்சவர்க்குத் தூது
          நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே
          நாராய ணாவென்னா நாவென்ன நாவே

          (37)


          என ஆயமகளிர் கைகோத்து ஆடிய குரவையுள் ஏத்தி வழிபடும் தெய்வமாகத் திருமால் உள்ளார். மேலும் செவி, கண், நா ஆகியவற்றை இகழ்வது போல, பிறவிப் பயன்பெறத் திருமாலை வழிபடாத ஐம்புலன்களை உடைய மனிதர்களை இகழ்கின்றது.

          • பொய்கை / குளம்

          அழகர்மலையில் மயக்கத்தைக் கெடுக்கும் மூன்று பொய்கைகள் உள்ளன. அவை புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்பன. அவற்றுள் நீராடினால் முறையே இந்திரன் இயற்றிய ‘ஐந்திரம்’ என்னும் இலக்கண நூலும், பழம்பிறப்பும், நினைத்தவை எல்லாம் நடக்கும் ஆற்றலும் பெறுவீர் என்னும் குறிப்பு உள்ளது. சான்று:


          திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்
          பெருமால் கெடுக்கும் பிலமுண்டு

          (11:19-92)

          (குன்றம் = அழகர் மலை, பெருமால் = மயக்கம்)

          இச்சான்றுடன் ‘திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்க’ குலசேகர ஆழ்வார் வேண்டுவதும் செய்வதும், ஒப்புநோக்கி மகிழ்தற்குரியது. இறைவன் எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் உள்ள பொய்கைகளும் இறைவனைப் போலவே சிறப்பிற்குரியனவாகப் பக்தர்கள் / மக்கள் எண்ணினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

          1.5.2 மணிமேகலை

          மணிமேகலையில் சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதையில், வாமன அவதாரம் குறிப்பிடப்படுகிறது.


          நெடியோன் குறளுரு வாகி நிமர்ந்துதன்
          அடியிற் படியை யடக்கிய வந்நாள்
          நீருடன் பூமியைக் கொடுக்க
          நீரிற் பெய்த மூரி வார்சிலை
          மாவலி மருமான் சீர்கெழு திருமகள்

          (19:51-54)

          என்றும்,

          மாமணி வண்ணனுந் தம்முனும் பிஞ்ஞையும்
          ஆடிய குரவையிஃதாமென நோக்கியும்

          (19:65-66)

          (குறளுரு = வாமன அவதாரம், மாமணி வண்ணன் = கண்ணன், தம்முனும் = முன்உள்ளோன் பலதேவன், பிஞ்ஞை = நப்பின்னை)

          எனவரும் செய்தி சிலம்பின் ஆய்ச்சியர் குரவையை நினைவுபடுத்து கின்றது.

          மேலும் ‘சமயக் கணக்கர் தந்திறங்கேட்ட காதை’யில் மணிமேகலை வஞ்சி மாநகர்ப்புறத்தில் வைதிக மார்க்கத்து வைணவ வாதியை அடைகின்றாள். ‘நின் சித்தாந்தம் பற்றிச் சொல்லு’ எனக் கேட்கின்றாள்.

          காதல் கொண்டு கடல்வணன் புராணம்
          ஓதின காப்பென்று உரைத்தனள்

          (27:98-99)

          திருமாலின் புராணத்தை வைணவ சமயத்தைச் சேர்ந்த ஒருவன் மணிமேகலையிடம் எடுத்துக் கூறினான் என்பது செய்தி.

          ஆக இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் திருமாலைப் பற்றிய குறிப்புகள் இருப்பதை மேற்காட்டிய சான்று வழி அறியலாம்.


          1.6 தொகுப்புரை


          தமிழ் மக்களின் வழிபடு கடவுளாகத் திருமால் தோற்றம் பெற்ற பாங்கையும், திருமால் அவதாரங்கள் பற்றிய செய்திகளையும் இலக்கியச் சான்று வழி அறிந்து கொண்டிருப்பீர்கள்.

          இராமாயண, பாரதக் கதைக் குறிப்புகள் பற்றியும் அந்தக் குறிப்புகளின் வழி, பக்தி இலக்கிய உலகுக்கு விதை தூவப்பட்டிருப்பதையும் உணர்ந்து தெளிந்திருப்பீர்கள். சிலப்பதிகாரம் பக்தி இயக்கத்துக்கு வித்திட்டிருப்பதையும் அறிந்திருப்பீர்கள்.

          தனித்தனிப்பாடல்களும், தொடர்நிலைச் செய்யுள்களாக அமைந்த காப்பியங்களும், மணிமேகலை போன்ற பௌத்த சமயக் காப்பியமும் திருமால் தொடர்பான செய்திகளைப் பதிவு செய்துள்ளதை அடையாளங் கண்டிருப்பீர்கள்.