Thursday, December 19, 2024

சங்க இலக்கிய தமிழர் திருமணமும் வைதீக சடங்குகளும்

 தமிழர் திருமணம் என்பது வைதீக முறையில் நிகழ்ந்தது என்பதை சிலப்பதிகாரம் கூறுவது
சாலி ஒரு மீன் தகையாளை கோவலன்
மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை        55
  
 
சாலி ஒரு மீன் தகையாளை கோவலன் மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை 55 
  
சாலி ஒரு மீன் தகையாளை கோவலன்
மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை        55


குறுந்தொகை 106, கபிலர்குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்,
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
வந்தன்று, வாழி தோழி, நாமும்
‘நெய் பெய் தீயின் எதிர்கொண்டு  5
தான் மணந்தனையம்’ என, விடுகம் தூதே.

பாடல் பின்னணி:  குறிஞ்சியுள் மருதம்.  பரத்தையிற் பிரிந்த தலைவனின் தூது கண்டு தலைவி தோழியிடம் கூறியது.

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  புல்லிய விழுதுகளை உடைய இற்றி மரத்தின் பாறைகளில் படர்கின்ற வெள்ளை வேர், மலையிலிருந்து வீழும் அருவியைப்போல் தோன்றும் நாட்டையுடைய தலைவன் தன் குற்றமற்ற நெஞ்சத்திலிருந்து கூறிய சொற்கள் நம்மிடத்து வந்துள்ளது.  நாமும் நெய்யைப் பெய்த தீயைப் போல, அவன் என்னை மணந்தபொழுது எவ்வாறு இருந்தோமோ அவ்வாறே உள்ளோம் என்று தூது விடுவோம்.

குறிப்பு:  இரா. இராகவையங்கார் உரை – பேராசிரியர் இதனைக் கற்பாகக் கொள்ளல் காண்க (தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 23), இளம்பூரணர் இதனைக் களவாகக் கொள்ளல் காண்க (தொல்காப்பியம் களவியல் 2).  புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் (1) – இரா. இராகவையங்கார் உரை – ‘புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்’ என்றதனால் இற்றிமரம் கல்லினின்று வெளியே வளர்ந்து கோடுகள் புறப்பட நீடினும் தனக்கு இடனாகிய கல்லினை விடாது வீழினால் பற்றிக் கோடற்கு இவர்தல் போலத் தலைவன் இல்லினின்று வெளியே சென்று ஒழுகினும் தனக்கு இடனாகிய மனையை விடாது தூது மொழியினால் பற்றிக் கொள்கின்றான் எனக் குறித்தாளாம்.  நாமும் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – உம்மை இறந்தது தழீஇயது.  தலைவன் மணந்த காலத்தில் நிறைந்த அன்போடு இருந்தவாறே இப்பொழுதும் குறைவின்றி இருப்பேம் என்றமையின் அவனை ஏற்றுக்கோடற் குறிப்புப் பெற்றது.  இற்றி மர விழுது:  குறுந்தொகை 106 – புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் வரை இழி அருவியின் தோன்றும்,   நற்றிணை 162 – வேனில் இற்றித் தோயா நெடு வீழ் வழிநார் ஊசலின் கோடை தூக்குதொறும் துஞ்சு பிடி வருடும் அத்தம் அகநானூறு 345 – ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் கல் கண் சீக்கும் அத்தம்.

சொற்பொருள்:  புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் – புல்லிய விழுதுகளை உடைய இற்றி மரத்தின் பாறைகளில் படர்கின்ற வெள்ளை வேர், வரை இழி அருவியின் தோன்றும் – மலையிலிருந்து வீழும் அருவியைப்போல் தோன்றும் (அருவியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), நாடன் – நாட்டையுடைய தலைவன், தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின் வந்தன்று – குற்றமற்ற நெஞ்சத்திலிருந்து வந்த சொற்கள் நம்மிடத்து வந்துள்ளது, வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, நாமும் – நாமும் நெய் பெய் தீயின் எதிர்கொண்டு – நெய்யைப் பெய்த தீயைப் போல (தீயின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), தான் மணந்த அனையம் – அவன் மணந்தபொழுது எவ்வாறு இருந்தோமோ அவ்வாறே உள்ளோம், என – என்று, விடுகம் தூதே – நாம் தூது விடுவோம்

 போது அவிழ் பனிப் பொய்கைப் புதுவது தளைவிட்ட
தாது சூழ் தாமரைத் தனி மலர் புறம் சேர்பு
காதல்கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக
ஓது உடை அந்தணன் எரி வலம்செய்வான் போல் 5
ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு
மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர
தெள் அரிச் சிலம்பு ஆர்ப்பத் தெருவின்-கண் தாக்கி நின்
உள்ளம் கொண்டு ஒழித்தாளைக் குறைகூறிக் கொள நின்றாய்
துணிந்தது பிறிது ஆகத் துணிவிலள் இவள் என 10
மலரும் தருவாயிலிருக்கும் மொட்டுக்கள் கட்டவிழும் குளிர்ச்சியான பொய்கையில் புதிதாக முறுக்கவிழ்ந்த 
பூந்தாதுக்கள் சூழ்ந்த தாமரையின் தனித்த மலரைப் புறத்தே சேர்ந்து,
விருப்பங்கொள்ளும் மண நாளில் மண ஆடைக்குள் முகத்தை மறைத்துக்கொண்ட,
காதல் கொண்ட மானைப் போன்ற பார்வையினையுடைய பெண் தன்னுடன் கூடவர,
வேதம் ஓதுதலையுடைய அந்தணன் தீயினை வலம் வருவதைப் போல,
அழகிய இறகுகளைக் கொண்ட அன்னம், தன் அழகிய நடையுள்ள பெடையோடு
பெருமிதம் தோன்றச் சுற்றிவரும் மிகுந்த நீர்வளம் கொண்ட நல்ல ஊரினனே!
தெளிந்த பரல்களையுடைய சிலம்பு ஒலிக்க, தெருவில் பார்வையால் உன்னைத் தாக்கி, உன்
உள்ளத்தைக் கவர்ந்துகொண்டு பின் கைவிட்டவளை, உன் வருத்தத்தைச் சொல்லி அழைத்துக்கொள்ளக் கருதி நின்றாய்!
இவ்வாறு நினைத்து வந்தது வேறொன்றாய் இருக்க, இவள் திடங்கொண்ட மனத்தினள் அல்லள் என்று
Kalithokai 69
Maruthan Ilanākanār, Marutham, What the heroine said to the unfaithful hero
O man from the fine town with abundant water,
where a gander with delicate feathers swims with
pride with his female of beautiful walk, around an
isolated newly-opened pollen-filled lotus blossom in
a cold pond with flowers,
like a Vedic Brahmin who circumambulates the fire
on the day of their marriage filled with love, with his
pretty woman with deer-like looks, shy, hiding in her clothes!




 

Wednesday, December 4, 2024

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் 

Tuesday, December 3, 2024

சங்க இலக்கியத்தில் & திருக்குறளில் காமன் எனும் மன்மதனும் - தொல்லியல் ஆதாரஙக்ளும்

உத்தரமேரூரில் உள்ள சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள மன்மதனின் மூர்த்தியில் கணைகள் ஐந்தும் பூக்களாகவே காட்டியிருப்பது சிறப்பானது. தாமரை, அசோகு, மா, மல்லிகை, குவளை ஆகிய மலர்கள் மலர்களாகவே காட்டப்பெற்றுள்ளன.





சங்க இலக்கியங்கள் போற்றும் தமிழர் சமயம் - பண்பாட்டு இந்தியா எல்லைகள் -பகீரதன் தபசு

புறநானூறு பாடலில் தமிழர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பண்பாட்டு இந்திய எல்லைகளை புலவர் காரிகிழார் பாடுகையில்

வடாஅது பனி படு நெடு வரை வடக்கும்
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் -புறம் 6: 1 - 4
வடக்கில் பனி படர்ந்த இமயமலை, தெற்கிலிருக்கும் அச்சந்தரும் குமரி ஆறு-கடல், கிழக்கிலிருக்கும் கரையை மோதுகின்ற சகர ராஜா மகன்கள் முக்திக்கு என கங்கை வர தோண்டப்பட்ட கடல் , மேற்கில்  முதிர்ந்த பெருங்கடல் என்கிறது
கிழக்கு எல்லையில் தோண்டிய கடல் - ராமபிரான் முன்னோரான அரசன் பகீரதன் தவம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்து - இன்றைய மேற்கு வங்கம் ஒட்டி இருந்த கபிலர் முனிவரால் சபிக்கப்பட்டு கல்லாகி இருந்த தன் மூனோர்களுக்கு மோட்சம் பெற தோண்டியதைக் குறிக்கிறது. இன்றும் கங்காசாகர் என்ற அந்தத் தீவின் மகர சங்கராந்தி அன்று 30 லட்சம் மக்கள் அதைக் கொண்டாடுகின்றனர்.

பகீரதன் தபசு என்ற பெரிய புடைப்புச் சிற்பத் தொகுதி மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோயிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. வானுலக தேவர், மனிதர், விலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கை அம்சங்கள் எனப் பலரைச் சித்தரிக்கின்றது.



குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும் 


பகீரத தபசு சிற்பத்தின் கருப்பொருளைக் குறிக்கும் பகுதி. ஒற்றைக்காலில் தவம் செய்யும் மனிதனையும், அருகே பூத கணங்கள் சூழ வரமளிக்கும் இறைவனையும் காண்க.
இமயத்து (5)
வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்த - சிறு 48
பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி - நற் 356/3
நிவந்து ஓங்கு இமயத்து நீல பைம் சுனை - பரி 5/48
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து
  முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து - அகம் 127/4,5
மாறி பிறவார் ஆயினும் இமயத்து
  கோடு உயர்ந்து அன்ன தம் இசை நட்டு - புறம் 214/11,12

    இமயம் (4)
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
  தென்னம் குமரியொடு ஆயிடை - பதி 11/23,24
வடதிசை எல்லை இமயம் ஆக - பதி 43/7
வடதிசையதுவே வான் தோய் இமயம்
  தென்திசை ஆஅய் குடி இன்று ஆயின் - புறம் 132/7,8
கழை வளர் இமயம் போல - புறம் 166/33
 
    இமயமும் (3)
இமயமும் துளக்கும் பண்பினை - குறு 158/5
நிலனும் நீடிய இமயமும் நீ - பரி 1/51
பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே - புறம் 2/24
கங்கை (8)
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
  பெரு நீர் போகும் இரியல் மாக்கள் - பெரும் 431,432
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு - மது 696
கங்கை வாரியும் காவிரி பயனும் - பட் 190
கங்கை வங்கம் போகுவர்-கொல்லோ - நற் 189/5
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும் - நற் 369/9
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய - பரி 16/36
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை
  நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ - அகம் 265/5,6
மன்பதை எல்லாம் சென்று உண கங்கை
  கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றி ஆங்கு - புறம் 161/6,7

Wednesday, November 27, 2024

சேரன் செங்குட்டுவன் காலம் - மு.ராகவையங்கார்

 
 







 

சனாதன தர்மம் - திருக்குறள் போற்றும் தமிழர் மெய்யியல் மரபு

 மனிதப் பிற்ப்பின் சிறப்பே -அறிவு சார் சிந்தனை, மெய்யியல் தேடல் ஆகும். 

ஆதிபகவன் முதற்றே உலகு என முதல் குறளிலே - இந்த உலகம் பரம்பொருள்  எனும் இறைவனால் படைக்கப் பட்டது,  என்று தொடங்கியவர் அடுத்த குறளில் கல்வி கற்பதன் முழுமையான பயன் என்பது இறைவன் திருவடிகளைத் தொழுவதற்கே என்றார். 

மனித வாழ்க்கை என்பது பல ஆயிரம் ஆண்டுகளாய் ஆராய்ந்து இறைவெளிப்பாட்டை உணர்ந்த துறவிகள் தந்த மெய்ஞானமே மனித வாழ்விற்கு வழிகாட்டி என்பதை வலியுறுத்த திருவள்ளுவர் நீத்தார் பெருமை என அதிகாரம் வைத்தார். அதில் இம்மண்ணில்  எழுந்த நிலத்து மறைமொழி எனும் எழுதாக் கற்பு எனும் வேதங்களை போற்றுகிறார். 

மனித வாழ்க்கை என்பது பல ஆயிரம் ஆண்டுகளாய் ஆராய்ந்து இறைவெளிப்பாட்டை உணர்ந்த துறவிகள் 

நன்கு கல்வி கற்றவர் ஏழையாக உள்ளது; கல்வி அதிகம் இல்லாதோர் பணம் அதிகம் ஈட்டுவது; சிலர்பிறப்பிலேயே  குறைகள், தான் வாழும்போதே தன்னிலும் முதியவர் மட்டும் இன்றி சிறியோரும் தீடீர் மரணம், 


பிறப்பிலேயே சிலர் குறைபாடுகளோடே, நன்கு கல்வி கற்றவர் ஏழையாக உள்ளது

தான் வாழும்போதே தன்னிலும் முதியவர் மட்டும் இன்றி சிறியோரும் தீடீர் மரணம், கல்வி அதிகம் இல்லாதோர் பணம் அதிகம் ஈட்டுவது,  - ஏன் மனிதன் வாழ்வில் எதிர்பாராத வகையில் துன்பம் - இன்பம் வாழ்க்கையில் தான் காணும் மாற்றங்களை

இறைவன் திருக்கோவில் தமிழ் பக்தர்கள் பணத்தில் இயங்கும் கல்லூரிகளீல் அன்னிய மதத்தினர் வேலை கேட்பது சட்ட விரோதம்

 

கோவில்கள் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் இந்துக்களை மட்டுமே ஊழியர்களாக நியமிக்க முடியும் - ஐகோர்ட் உத்தரவு  author-imageWebDesk 

https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-order-only-hindus-can-be-appointed-as-staff-in-colleges-schools-run-by-temples-7609693

சென்னை அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த முஸ்லிம் விண்ணப்பதாரர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்து சமய அறநிலையத்துறையால் (HR&CE) கோயில் நிதியில் நிறுவப்பட்ட சுயநிதி கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்களுக்கு இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும், அப்படி நியமிக்கப்படுபவர்கள் இந்து மதத்தை ஏற்றுக்கொள்வதை நிறுத்திய தருணத்தில் பதவியை துறந்ததாகக் கருதப்படுவார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னையில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பதவிக்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர் ஏ. சுஹைல் 2021-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நிதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங் தள்ளுபடி செய்தார். எந்த அரசு உதவியும் பெறாத சுயநிதி நிறுவனம், பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பை வழங்குவதற்காக, 'அரசு' என்ற சொல்லின் வரையறைக்குள் வராது என்று நீதிபதி விவேக் குமார் கூறினார்.

கோயில் நிதியில் நிறுவப்பட்ட சுயநிதிக் கல்லூரி, மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் தொடர்ச்சியான செலவுகளைச் சமாளிப்பது, மதத்தின் அடிப்படையில் பொது வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டுவதைத் தடுக்கும் அரசியலமைப்பின் 16(1) மற்றும் (2) பிரிவுகளின் கீழ் வராது, அதற்கு பதிலாக, குறிப்பிட்ட சில மத நிறுவனங்களில் மதத்தின் அடிப்படையில் நியமனம் செய்ய அனுமதிக்கும் பிரிவு 16(5)ன் கீழ் வரும் என்று நீதிபதி விவேக் குமார் கூறினார். 

மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விவேக் குமார், இந்து சமய அறநிலையத்துறை HR&CE) சட்டத்தின் 10-வது பிரிவு, இந்த சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற நியமிக்கப்படும் எந்த அதிகாரியும் அல்லது ஊழியரும் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. கோவில் நிதியில் நிறுவப்பட்டாலும், அது ஒரு கல்வி நிறுவனமாக மட்டுமே கருதப்படும் என்றும், மத நிறுவனமாக கருத முடியாது என்றும், அதனால் 16(1) மற்றும் (2) பிரிவுகள் பொருந்தும் என்ற மனுதாரர் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை நீதிபதி விவேக் குமார் நிராகரித்தார். 

சென்னை அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த முஸ்லிம் விண்ணப்பதாரர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


பரிபாடலில் வைதீக நெறி




















சங்க இலக்கியத்தில் சமய அமைப்பு