இந்தியர்களின் இன்றைய தாழ்வுமனப்பான்மை மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிற ஒன்று. இதை நடத்துவதில் முக்கியமானவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகள். இந்தியக் கிறிஸ்தவ மிஷனரி வெள்ளைக்காரனின் கால்களை நக்கிப் பிழைக்கும் ஒரு அடிமை. நாயினும் கீழான வேசிமகன்களான அவர்களின் கைகளில் இந்தியர்கள் தங்களின் கல்வியை ஒப்படைத்து இன்றைக்கு அவமானப்பட்டு நிற்கிறார்கள். இதற்கு அடித்தளமிட்டவன் மெக்காலே என்கிற பிரிட்டிஷ்காரன். இந்தியர்களுக்கு அவன் அறிமுகப்படுத்திய அவனது கல்விமுறையே இன்றைக்கு இந்தியன் தன்னைப் பிறரை விட, குறிப்பாக ஐரோப்பிய வெள்ளையனை விடத் தாழ்ந்தவன் என்கிற மனப்பான்மையுடன் வாழ வைத்திருக்கிறது. மேற்கத்திய உலகம் "கண்டுபிடித்ததாக" சொல்லப்படும் அத்தனையும் இந்தியாவிலிருந்து திருடப்பட்டது என்கிற எண்ணம் எந்த இந்தியனிடமும் இன்று இல்லை. தான் சொந்தமாகக் கண்டுபிடிக்கும் ஒன்றைக் கூட மேற்கத்திய உலகம் அங்கீகரிக்க வேண்டும் என நினைக்கிற இந்தியர்களே இன்றைக்கு அதிகம்.
இந்தியாவின் உண்மையான வரலாறுகளை அவன் உதாசீனப்படுத்தக் காரணம் இதுதான். மேற்குலகில் எழுதப்பட்டிருக்கும் போலி வரலாறுகளை மட்டுமே நம்புவனாக இன்றைய இந்தியன் தரம் தாழ்ந்து கிடக்கிறான் என்பது வேதனைதான். எத்தனையோ இந்திய அறிஞர்கள் இந்திய வரலாற்றினைக் குறித்து எழுதியிருந்தாலும் அது யாரும் சீந்தாமல் இன்றைக்குக் கிடக்கிறது. கணிதமாகட்டும், மருத்துவமாகட்டும், வான சாஸ்திரமாகட்டும், இலக்கிய இலக்கணங்களாகட்டும், வாழ்க்கைமுறையாகட்டும், தத்துவ நெறிகளாகட்டும், இசை, கலைகளாகட்டும்....இந்தியாவிற்கு இணையாக இன்னொரு நாட்டினை இந்த உலகின் எந்த மூலையிலும் காண்பது அரிதிலும் அரிதுதான். ஆனால் அந்தோ! போலிகளை அறிஞர்கள் என எண்ணித் தன் கலாச்சாரத்தைத் துறக்கத் தயாராக இருக்கும் இன்றைய இந்தியனை, தமிழனை நான் பரிதாபமாகவே நோக்குகிறேன். அடுத்தவன் தன்னை அங்கீகரிக்க வேண்டும் என எண்ணும் அவனின் தாழ்வுமனப்பான்மையை எண்ணியெண்ணி எனக்குள் கூனிக்குறுகுகிறேன்.
உதாரணமாக இந்திய அறுவைச் சிகிச்சை முறைகள். இன்றைக்கு மேற்கத்திய உலக மருத்துவமனைகளில் நிகழும் அறுவைச் சிகிச்சைகளுக்கு அடிப்படை இந்தியாதான். சுஸ்ருதர் செய்த அறுவைச் சிகிச்சை முறைதான் இன்றைக்கும், சிறிதும் மாறாமல் மேற்கத்திய மருத்துவமனைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. எனவே சுஸ்ருதர் குறித்துச் சிறிது காணலாம்.
சுஸ்ருதர் பொதுயுகம் நான்காம் நூற்றாண்டில் வாரணாசியில் வாழ்ந்தவர். அறுவைச் சிகிச்சையின் தந்தை அவர்தான். அவர் எழுதிய "சுஸ்ருத சம்ஹிதா" என்னும் நூலே உலகின் மிகப் பழமையான அறுவைச் சிகிச்சை நூல் (சாஸ்திர கர்மா).
அந்த நூலில் அறுவைச் சிகிச்சையைக் கீழ்க்கண்ட எட்டு பகுதிகளாகப் பிரிக்கிறார் சுஸ்ருதர்.
Chhedya (Excision - அப்புறப்படுத்துதல்)
Eshya (Exploration - முற்றாய்வு)
Aharya (Extraction - பிரித்தெடுத்தல்)
Lekhya (Scarification - மேலீடான அறுவை)
Vedhya (Puncturing - துவாரமிடுதல், ஓட்டை செய்தல்)
Bhedya (Piercing - துளையிடுதல்)
Vishravya (Evacuvation - வெளியேற்றுதல்)
Sivya (Suturing - தைத்தல்)
ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (rhinoplasty) மற்றும் கண்புரை நீக்கம் (extraction of cataract/ophtalmology) செய்வதில் சுஸ்ருதர் மிகவும் திறமை வாய்ந்தவர். இந்தக் கண்புரை நீக்கம் குறித்து மிகத் துல்லியமான தகவல்களை சுஸ்ருதர் அவரது சுஸ்ருத சம்ஹிதையில் எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். அந்தத் தகவல்களைப் படிக்கிற எவரும் அந்த அறுவைச் சிகிச்சை 2500 வருடங்களுக்கு முன் செய்யப்பட்ட ஒன்று என்கிற எண்ணம் வருவதில்லை. மாறாக அது இன்றைக்கோ அல்லது நேற்றைக்கோ நடந்த ஒன்றினைப் போன்ற எண்ணம் வருவதனைத் தவிர்க்க இயல்வதில்லை.
சுஸ்ருதரின் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுவது அவரது rhinoplasty (இன்றைய plastic surgery) எனப்படும் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைதான். சிதைந்து போன ஒருவனுடைய மூக்கை ப்ளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரி செய்த முதல் மருத்துவர் அவர். இந்த அறுவை சிகிச்சையைக் குறித்தான மிகத் துல்லியமான தகவல்கள் அவரது சுஸ்ருத சம்ஹிதா நூலில் எழுதப்பட்டிருக்கிறது. இதுபோன்ற மருத்துவ சிகிச்சையின் பலனாக அவரது புகழ் இந்தியாவெங்கிலும் பரவியிருந்தது. இந்தியா மட்டுமல்லாது பல வெளி நாட்டினரும் அவரை நாடி வந்தார்கள்.
குற்றவாளியின் மூக்கை அறுப்பது என்பது அன்றைய காலகட்ட இந்திய அரசர்களிடையே இருந்ததொரு வழக்கம். இந்த வழக்கத்தைக் கண்டு மனம் வருந்திய சுஸ்ருதர், பாதிக்கப்பட்டவர்களின் மூக்கினை சரிப்படுத்தி அவர்களுக்குப் புத்துயிரளித்தார். பொதுயுகம் நான்காம் நூற்றாண்டில் செய்யப்பட்ட இந்த மருத்துவமுறையே இன்றைக்கு நவீன மருத்துவ உலகிலும் பின்பற்றப்படுகிறது என்பது பேராச்சரியமானதொரு விஷயம்தான்.
தொடர்ச்சியான அன்னிய ஆக்கிரமுப்புகளின் காரணமாக இந்த மருத்துவமுறை நீண்ட காலமாக வெளியில் அறியப்படாதிருந்து 18-ஆம் நூற்றாண்டில் திடீரெனே வெளித் தெரிய ஆரம்பித்தது. 1792-ஆம் வருடம் பிரிட்டிஷ்காரர்களுக்கும், திப்புவிக்கும் நடந்த போரில், பிரிட்டிஷ்காரர்களிடம் பணிபுரிந்த மராத்தா வண்டியோட்டி ஒருவன் திப்புவினால் சிறைப்பிடிக்கப்பட்டான். அவனது மூக்கு வெட்டப்பட்டது. இது நடந்து ஒருவருடம் கழித்து பூனா நகரைச் சேர்ந்ததொரு கும்ஹார் வைத்தியன் (பானைகள் செய்பவன்) ஒருவன் இரண்டு பிரிட்டிஷ்கார மருத்துவர்களின் முன்னிலையில் அறுபட்ட அந்த மனிதனின் மூக்கை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் சரிசெய்து காட்டினான்.
அன்றைய பாம்பே பிரஸிடென்ஸியைச் சேர்ந்த Thomas Cruso மற்றும் James Trindlay என்கிற அந்த இரண்டு பிரிட்டிஷ் மருத்துவர்களும் இந்த அறுவைச் சிகிச்சையைக் குறித்து Madras Gazette என்கிற பத்திரிகையில் ஒரு கட்டுரையை எழுதினார்கள். இதுமாதிரியான அறுவைச் சிகிச்சைகள் இந்தியாவெங்கும் காலம்காலமாக மேற்கொள்ளப்படுகின்றன (It is not uncommon in India and has been practsed for time immemorial) என்கிற அர்த்தத்துடன் எழுதப்பட்ட அந்தக் கட்டுரை அக்டோபர், 1794-ஆம் வரும் மீண்டும் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சை முறையை அருகிருந்து நன்கு கற்றுத்தேர்ந்த இந்த மருத்துவர்கள் அதனை மேற்கத்திய மருத்துவமுறையுடன் இணைத்தார்கள் (K.K. Somani, Indian Economic and Social Traditions).
சுஸ்ருத சம்ஹிதா ஏறக்குறைய 300 பல்வேறுவிதமான அறுவைச் சிகிச்சை முறைகளையும், 120 விதமான அறுவைச் சிகிச்சைக் கருவிகளையும் விளக்குகிறது (இந்தக் கருவிகளின் படங்களை நான் முன்பு வெளியிட்டிருக்கிறேன்). இன்றைய நவீன மருத்துவம் அதே கருவிகளை இன்றைக்கும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் இந்திய மருத்துவ உபகரணங்கள் என்கிற தகவலை வெளியில் சொல்லாமல்.
"இந்த உபகரணங்களையும், அறுவைச் சிகிச்சை முறைகளையும் கற்றறிந்த மேற்கத்திய மருத்துவர்கள் அதனை வேறொரு உச்சத்திற்குக் கொண்டு சென்றார்கள்" என ஜெர்மனியின் புகழ்பெற்ற அறுவைச் சிகிச்சை மருத்துவர்களில் ஒருவரான Dr. Hirschberg.
உடலின் ஒரு பகுதியை அறுத்து அதனைக் கொண்டு அதே உடலின் இன்னொரு பகுதியைச் சரி செய்வது என்பது முற்றிலும் இந்தியக் கண்டுபிடிப்பு. அரேபியர்களும், எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்த மருத்துவமுறையை இந்திய ஹிந்துக்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். சுஸ்ருதரின் கண்புரை நீக்க அறுவைச்சிகிச்சை முறை அரேபியாவிலும், எகிப்திலும், கிரேக்கத்திலும் அதற்கு முன்னர் இருந்திருக்கவில்லை. சுஸ்ருதரின் மருத்த முறைகளைப் பின்பற்றி குணப்படுத்த இயலாமல் நோயால் பாதிக்கப்பட்ட கை,கால்கள் அறுவை செய்து நீக்கப்பட்டன. உடைந்த கைகால்கள் சரியாக்கப்பட்டன, ஹெர்னியா போன்ற வயிற்று அறுவைச் சிகிச்சைகளும் இன்னபிற சிகிச்சைகளும் செய்யப்பட்டன.
இன்றைய நவீன உலகிலும் சுஸ்ருதர் சொல்லும் மருத்துவமுறைகளே வெற்றிகரமாகப் பின்பற்றப்பட்டு வருகிற விஷயம் சாதாரண இந்தியனுக்குத் தெரியாது. தெரிந்தாலும் என்ன செய்துவிடப் போகிறான் அவன்?
படத்தில் : பிரிட்டிஷ் மருத்துவர்கள் முன்னிலையில் சரிசெய்யப்பட்ட மூக்கு
பகுதி 1
தமிழகத்திலிருந்து ஐரோப்பாவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிவியல் அறிவு - (15-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரையில்)
(From The Transmission of Scientific Knowledge from Tamizhagam to Europe - 15th to 20th Century by K.V. Ramakrishna Rao, with Thanks)
அறிமுகம்:
தென்னிந்தியாவின் கேரளத்து வழியாக மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கணித மற்றும் வான சாஸ்திர அறிவியல் புத்தகங்களைக் குறித்து ஏராளமானவர்கள் எழுதியும், பதிப்பித்தும் இருக்கிறார்கள். குறிப்பாக C.K. Raju, George Ghevergheese Joseph, Denis F. Almeida மற்றும் Aryabhata Group of Univerisry Exeter போன்றவர்கள் இதனைக் குறித்து எழுதிய பல முக்கியமான கட்டுரைகள், புத்தகங்கள் இணையத்தில் ஏராளம் உண்டு. திருடப்பட்ட இந்திய மருத்துவ அறிவியலைக் குறித்து புரொஃபஸர் D.S.V. Subba Reddy எழுதியிருந்தாலும், இந்திய மருத்துவத்தில் ஆர்வம் காட்டிய அந்த மேற்கத்தியர்களைக் குறித்துப் பாராட்டு தெரிவிப்பதுடன் நிருத்துக் கொண்டிருக்கிறார்.
எப்படியிருந்தாலும், தமிழகத்திலிருந்து திருடிச் செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான நூல்களைக் குறித்தும், ஓலைச் சுவடிகளைக் குறித்தும் எந்தவிதமான விரிவான ஆராய்ச்சியும் இன்றுவரை நடத்தப்படவில்லை என்பது ஆச்சரியம்தான். ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த பல கிறிஸ்தவப் பாதிரிகள் 1600-ஆம் வருடம் துவங்கி 1850 வருடம் வரையில் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கும் குறிப்புகள் இந்தத் திருட்டை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டுகின்றன. மதுரை, தரங்கம்பாடி மற்றும் பாண்டிச்சேரிப் பகுதிகளில் வசித்த பாதிரிகள் எழுதிய குறிப்புகள் இதனைக் குறித்து ஏராளமான தகவல்களைத் தருகின்றன.
பல சமயங்களில் இந்தப் பாதிரி வேஷமிட்ட பல அறிவுத் திருடர்களின் முகத்திரையை விலக்கி அவர்களின் உண்மையான குறிக்கோளான அறிவுத் திருட்டைக் கண்டறிய வேண்டியிருக்கிறது. இன்றைய கார்ப்பரேட் அறிவுத் திருடர்களைப் போல. இந்தக் கட்டுரையாசிரியர் ஏற்கனவே Saltpetre, பாதிரி ராபர் நொபிலியின் அறிவியல் சார்ந்த அறிவுத் திருட்டுக்கள் மற்றும் Le De Gentil போன்ற ஐரோப்பிய அறிவியலாளர்களைக் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறார்.
தமிழகத்திய ஆண்ட பிரிட்டிஷ்காரரகள் மிக மறைமுகமான முறையில் தமிழக சித்த மருத்துவ முறைகளைக் குறித்துப் படித்தார்கள் என்பது ஆச்சரியமளிக்கும் விஷயம்தான். மேற்கத்திய மருத்துவ முறைகளுடன் தமிழக சித்த மருத்துவ முறைகளை ஒப்பிட்டு நோக்குகையில் ஆச்சரியமூட்டும் வகையில் அவை இரண்டிற்கும் உள்ள தொடர்புகள் வெளிவருகின்றன. பல தமிழக சித்தர்களின் புத்தகங்கள், குறிப்பாக புகழ்பெற்ற "பெரிய ஞானக் கோவை" போன்ற சித்த மருத்துவ நூலும், வேறுபல தனிப்பட்ட சித்தர்களின் புத்தகங்களும் பிரிட்டிஷ்காரர்களால் உபயோகப்படுத்தப்பட்டன.
18-ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழகம்:
அறிவியலுக்கு முன்னிடம் அளித்து வளர்த்த பல்லவ அரசர்களின் காரணமாக பத்தாம் நூற்றாண்டு முதல் தமிழகம் அறிவியலிலும், (அன்றைய) தொழில் நுட்ப அறிவிலும் மிகச் சிறந்து விளங்கியது. இந்தியக் கடல் வாணிபமும், வான சாஸ்திரமும், பல்வேறு ரசாயனங்கள் குறித்த அறிவும், உடைகள் தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல், கட்டிடக்கலை எனப் பல்வேறு துறையிலும் மிகச் சிறந்து விளங்கிய காலகட்டம் அது. அதில் தமிழகத்தின் பங்கு மிக அதிகம். இந்த அறிவியல் அறிவின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு தொழில்களும், வியாபாரங்களும் செழித்தன. உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற இந்தியர்கள் அங்கெல்லாம் வியாபாரத்தில் வெற்றிக் கொடி நாட்டினார்கள். அவர்கள் செல்லாத தேசமே அனேகமாக இல்லை எனுமளவிற்கு எல்லா நாடுகளிலும் கால்பதித்தனர்.
பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டு வரையில் சோழர்கள் பெரும் வலிமையுடனிருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த விஜய நகரப் பேரரசின் காலத்திலும், அதன் பின் வந்த நாயக்கர்களின் காலத்திலும் தமிழகம் எல்லா விதத்திலும் மிக உச்சத்தில் இருந்தது.
அந்த காலகட்டத்தில் தமிழகத்திற்கு வந்த பல கிறிஸ்தவப் பாதிரிகள் தமிழகத்தில் காணப்பட்ட பல அடுக்குமாடி வீடுகளையும், தோட்டங்களையும், அணைக்கட்டுகளையும், நீர்த் தேக்கங்களையும், மிக மும்முரமாக நடந்து கொண்டிருந்த கப்பல் வணிகத்தையும், உலோகத் தொழில் நுட்ப அறிவினையும் அதற்கும் மேலாக இந்தச் செயல்பாடுகளில் மிக உற்சாகமாகக் கலந்து கொண்ட தமிழர்களையும் கண்டு மிகவும் வியந்து போனார்கள்.
இப்படியானதொரு சூழ்நிலையை அந்த ஐரோப்பிய பாதிரிகளால் கற்பனையும் செய்து பார்க்க இயலவில்லை மட்டுமல்லாமல் அதனைப் புரிந்துகொள்ளவும் அவர்களால் இயலவில்லை. ஏனென்றால் அவர்களின் நாடுகள் அறிவியலிலும், தொழி நுட்பத்திலும் இந்தியர்களை விடவும் மிகவும் பின்தங்கியிருந்தன. ஐரோப்பியர்களால் ஒரு துல்லியமான நாட்காட்டியைக் கூட உருவாக்க இயலாத நிலை அன்று. அவர்களின் கணித அறிவு சாதாரண இந்தியனின் கணித அறிவினைவிடவும் மிகவும் பின் தங்கியிருந்தது. கடலில் கப்பல் பயணம் செய்யத் தேவையான திசைகாட்டிகள் அவர்களிடம் இருக்கவில்லை. அவர்களின் கப்பல்கள் கரையோரமாக மட்டுமே சென்று வந்து கொண்டிருக்கையில் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் ஆழ்கடலில் நெடுந்தூரம் பயணம் செய்தார்கள். அதற்கும் மேலாக பெரும் கப்பல்படையும் அவர்களிடம் இருந்தது என்பதினைக் கண்டு கிறிஸ்தவப் பாதிரிகள் வாய் பிளந்தார்கள்.
எனவே பதினைந்தாம் நூற்றாண்டு துவங்கி ஐரோப்பியப் பாதிரிகளும், அவர்களின் நண்பர்களும் இந்தியாவை நோக்கி வர ஆரம்பித்தார்கள்.
இந்திய வணிக, உற்பத்திப் பொருட்கள் காலத்தில் ஐரோப்பா :
தமிழகம் வாணிபத்திலும், பொருள் உற்பத்தியிலும் உச்சகட்ட காலத்தில் இருக்கையில் ஐரோப்பிய நாடுகள் மிகவும் சிரம திசையில் இருந்தன. தொடர்ச்சியான போர்களும், பஞ்சங்களும், நோய்களும் அதற்கும் மேலாக அவர்களிடையே இருந்த கிறிஸ்தவ மதத் தீவிரவாதமும் ஒவ்வொரு ஐரோப்பியனின் வாழ்வையும் நரகமாக்கி வைத்திருந்தது. இந்த காலகட்டத்தில் பல்வேறுவிதமான பொருட்களை ஐரோப்பா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்தது. ஒவ்வொரு வருடம் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் அளவு கூடிக் கொண்டே போனது,
வருடம் சதவீதம்
1588 14%
1621 48%
1669 70%
ஐரோப்பிய நாடுகளில் துவங்கிய புரட்சிகள் ஐரோப்பாவின் முகத்தை மாற்றியமைக்கத் துவங்கின. அமெரிக்கப் புரட்சியும் (1776-1783), பிரெஞ்சுப் புரட்சியும் (1789-1791) அதனைத் தொடர்ந்து வந்த தொழிற் புரட்சியும் (1750-1850) ஐரோப்பாவைப் புரட்டிப் போட்டன என்பதில் சந்தேகமில்லை. ஆச்சரியமூட்டும் வகையில் ஒரு நூற்றாண்டிற்குள் ஐரோப்பாவில் புதிது புதிதான கண்டுபிடிப்புகள் வெளிவரத் துவங்கின. அதே காலகட்டத்தில் கொள்ளை நோய்களாலும், மதவெறியர்களாலும், பொருளாதரச் சிக்கல்களாலும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதினை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
நிச்சயமாக ஐரோப்பிய நிறுவனங்கள் கிறிஸ்தவ பாதிரிகளால் இந்தியாவிலிருந்து திருடிச் சென்ற அறிவியல் அறிவினை உபயோகித்து முன்னேற்றம் காண ஆரம்பித்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. அடிமைப்படுத்தப்பட்ட இந்தியாவிலிருந்து கப்பல், கப்பலாகக் கொள்ளைப் பொருட்கள் ஐரோப்பாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் இந்தியாவின் துறைமுகங்கள் மிகவும் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன. அந்தத் துறைமுகங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடத் துவங்கின. இதே காலகட்டத்தில் மத ரீதியான நம்பிக்கைகளின் காரணமாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த ஐரோப்பிய அறிவியலார்கள் இந்தியாவிலிருந்து திருடிக் கொண்டுவரப்பட்ட புத்தகங்களின் மூலமாக ஞானம் பெறத் துவங்கினர்.
புரொட்டஸ்டண்ட் இங்கிலாந்தும், ஜெர்மனியும் கத்தோலிக்க போர்த்துக்கீசியர்கள் மற்றும் ஃப்ரான்ஸ் தேசங்களுக்கு எதிராக அணி திரண்டன. அதேசமயம் இந்தியச் செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காக இந்த நான்கு தேசங்களும் ஒன்று சேர்ந்தன. அதில் அவர்களுக்குள் எந்த மோதலும் இருக்கவில்லை.
ஐரோப்பியர்களின் அறிவுத் திருட்டு ஆரம்பம்:
இந்தியாவிற்கு வந்த கப்பல்களில் குவிந்த பல ஐரோப்பிய அறிவியலார்கள் தமிழக சித்த மருத்துவத்தைப் படிக்கத் துவங்கினார்கள். பல ஆயிரக்கணக்கான சித்த மருத்துவ ஓலைச் சுவடிகள் கப்பல்களில் ஏற்றப்பட்டு ஐரோப்பாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அவ்வாறு வந்து இந்திய மருத்துவ நூல்களைத் திருடிச் சென்ற சில ஐரொப்பிய மருத்துவர்களின் ஒரு சிறிய பட்டியல் இது,
Portuguese Physician Garcia d’Orta (1501-1568),
Finnish Botanist L’Ecluse, Christovas da Casta,
Dutch scholar Henrick Adrian Van Reede (1637-1691), Johann Ernest Grundler (1677-1720), Charles Clusius, Linchoten (16th century), Poludanus (explaining the writing of Linchoten)
இவர்களெல்லாம் இந்திய மருத்துவ முறைகளைத் திருடித் தாங்கள் கண்டுபிடித்ததாகத் தங்கள் பெயரில் வெளியிட்டுக் கொண்டார்கள். பட்டியல் இன்னும் நீளமானது.
Rheede என்பவன் இந்தியாவின் கேரளத்தில் வந்திறங்கியபோது அங்கிருந்ததொரு மிகப்பெரும் பூங்காவினைக் கண்டு ஆச்சரியமடைந்தான். அவனது ஐரோப்பாவில் அப்படியானதொரு பூங்காவினை அவன் கண்டதில்லை. அன்றைய இந்தியாவிலிருந்த ஒவ்வொரு ஆலயத்தின் அருகிலும் மிக அற்புதமாகப் பராமரிக்கப்பட்ட நந்தவனமும், மருத்துவமனைக்குத் தேவையான மூலிகைப் பண்ணையும் இருந்தது. அதுபோன்றதொரு அமைப்பையெல்லாம் அவன் இதற்குமுன்னர் கண்டிருக்கவில்லை.
இந்திய மருத்துவர்களைச் சந்திக்கும் Rheede அவர்களிடமிருந்து மருத்துவத் தகவல்களையும், புத்தகங்களையும், மருந்துக்களின் மாதிரிகளையும் அவற்றை எப்படித் தயாரிப்பது என்பதனைப் பற்றியும் அந்த மருத்துவர்களிடமிருந்து எழுதி வாங்கிக் கொண்டான். அவ்வாறு எழுதப்பட்ட தகவல்களில் ஒரு சிறிய உதாரணம் இங்கே,
"சாலிவாஹன சகம் 1597-ஆம் வருடம், சைத்ர மாசம், தேய்பிறையின் பத்தாம் நாள், கொச்சிக்கு அருகிலுள்ளதொரு தங்குமிடத்தில், நானும், ரங்கபட்டனும், வினாயக பண்டிட்டும், அப்பு பட்டனும் (கண் மருத்துவன்) கீழ்க்கண்ட, உண்மையான தகவல்களை எழுதுகிறோம். எனவே இதனை ஒருபோது பொய்யான தகவலாக எண்ணக் கூடாது.
கொச்சியின் படைத்தலைவனான Adrikin Fondre அளித்த உத்தரவின் பெயரில் நாங்கள் மருத்துவத்திற்குத் தேவையான மூலிகைகளையும், பூக்களையும், பழங்களையும் சேகரித்தோம். இவற்றைக் கொண்டு செய்யப்படும் மருந்துகள் இந்த மலபார் தேசம் முழுவது உபயோகத்தில் இருக்கின்றன. இந்த மூலிகைகளில் அறிவு பெற்ற ஒருவர் மூலமாக பல்வேறு மூலிகைச் செடிகள் குறித்தான தகவல்களையும் சேகரித்தோம். இந்த மருந்துகள் பல்வேறு சீதோஷ்ண நிலைகளில் வளர்பவை. பின்னர் அந்த மூலிகைகள், பூக்கள், பழங்களை ஓவியமாக வரைந்து கொண்டோம். பின்னர் அந்த ஓவியங்களையும், அந்த மூலிகைகள் குறித்தான தகவல்களையும் நாங்கள் எங்களுடன் கொண்டுவந்திருந்த Materia Medicaவுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டோம். பின்னர் அந்த மருந்துகளை சோதித்துப் பார்த்துக் கொண்டோம். கடந்த இரண்டு வருடங்களாகக் காலை, மாலை இரண்டுவேளைகளிலும் இதனைச் செய்து கொண்டிருக்கிறோம். எனவே, இங்கு என்னென்ன எழுதப்பட்டிருக்கிறதோ அவை அனைத்தும் உண்மை எனவே கருதப்பட வேண்டும். ஒருபோதும் பொய்யெனக் கருதப்படக் கூடாது எனக் கூறி எங்களைது கையொப்பங்களையும் இங்கு இட்டிருக்கிறோம்.
(கையொப்பமிட்டவர்கள்)
ரங்கபட்டன்
வினாயக பண்டிட்
அப்பு தேவ்
இந்தக் கடிதம் மராத்தியில் எழுதப்பட்டு கையொப்பம் இடப்பட்டிருக்கிறது"
"படைத்தலைவர் Hendrik Van Rheede உத்தரவின்பேரில், மலபார் மருத்துவனும், ஈழவ சாதியைச் சேர்ந்தவனும், காரபுரம் கிராமம், கடற்கபள்ளியில் இருக்கும் கொல்லத்துவீடுவாசியான நான், கொச்சி கோட்டைக்கு வந்து, ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி மரங்கள், புதர்கள், கொடிகள் மற்றும் புற்களின் வரைபடங்களை அளித்து, எங்களின் பரம்பரை அனுபவங்கள் மற்றும் முக்கியமான ஓலைச் சுவடிகள் விளக்கும் வியாதிகளுக்கு அளிக்கவேண்டிய மூலிகை மருத்துவமுறைகளையும் கம்பெனியின் மொழிபெயர்ப்பாளரான திருவாளர் Manuel Carner அவர்களிடம் அளித்தேன். அவர் நான் அளித்த தகவல்களைச் சரிபார்த்து தனது புத்தகத்தில் பதிந்து கொள்வதுடன் அவருக்கு இருக்கும் சந்தேகங்களையும் என்னிடம் கேட்டு விளங்கிக் கொண்டார். இந்தத் தகவல்களில் கேரள நாட்டில் இருக்கும் மருத்துவம் எந்த கல்விமானும் தவறு கண்டுபிடிக்க இயலாது என கொச்சி கோட்டையில் வைத்து ஏப்ரல் 20, 1675 அன்று எழுதப்படுகிறது
கொல்லத்து வைத்தியன்
(கையொப்பம்)
கொல்லத்து வைத்தியனால் மலையாளத்தில் எழுதப்பட்டு கையொப்பமிடப்பட்ட ஒரு கடிதம்."
"கொல்லத்துப் படைத்தலைவர் Henrika Van Rheede அவர்களின் உத்தரவுப்படி, Manuel Carner-ஆகிய நான், திருமணமாகி, கொச்சிக் கோட்டையில் இருக்கும் கம்பெனியின் அதிகாரபூர்வ மொழிபெயர்ப்புப் பணியில், மேற்கண்ட தகவல்களை மலையாளத்திலும், போர்த்துக்கீசிய மொழியிலும், எல்லாத் தகவல்களையும் விரிவாகவும், சொல்லப்பட்ட, கேரளத்தில் இருக்கும் மரம், செடி, கொடி, புல், புதர்களின் மருத்துவ குணங்களையும், அதனுடன் பூக்கள், பழங்கள், விதைகள், வேர்கள், அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட சாறுகள் போன்றவற்றையும், மலபாரில் மருத்துவனாக இருக்கும், ஈழவ சாதியைச் சேர்ந்தவனும், கரபுரம் கிராமத்தில் வசிப்பவனுமான கொல்லாடனுடன் முன்பு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி எழுதிக் கொண்டேன். இதன்படி, எனக்கிருந்த எல்லா சந்தேகங்களும், தவறுகளும் நிவர்த்தியாகி இருக்கிறபடியால் நான் எனது கையொப்பத்தை கொச்சி கோட்டையில் வைத்து ஏப்ரல் 19, 1675 அன்று இடுகிறேன்
Manuel Carner
இந்தக் கடிதம் மலையாளத்து கிரந்த லிபியில் எழுதப்பட்டு கையொப்பமிடப்பட்டிருக்கிறது.
இந்தக் கடிதங்கள் நாம் சொல்கின்ற தகவல்கள் எத்தனை உண்மையானவை என்பதினையும், ஐரோப்பிய மருத்துவர்கள் எவ்வாறு இந்திய மருத்துவ ரகசியங்களை நேரடியாகப் பெற்றுச் சென்றிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாகவும் திகழ்கிறது. இதேபோன்ற தகவல் திருட்டுக்கள் பிற தொழில் புரிபவர்களாலும் செய்யப்பட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவையெல்லாம் இந்தியாவிற்கு வந்த கிறிஸ்தவ பாதிரிகளின் காரணமாகவே நிகழ்ந்தன என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் எழுதிய கடிதங்கள் பலவும் இதனை உறுதிப்படுத்துவதாக இருப்பதனைக் காணலாம்.
அதற்கான உதாரணங்களை இனிக் காணலாம்