இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் பிரச்னை
அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்வதில் எழுந்த பிரச்னையால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர் ஏ.அஜ்மீர் அலி, ஞாயிற்றுக்கிழமை மாலை இறந்துவிட்டார். இறப்புக்கு முன்பு அவரது உடலை அமைப்பின் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், அவரது உறவினர்கள் மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், அறந்தாங்கி தலைவரை அணுகி, அனுமதி கேட்டனர். அனுமதி மறுக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, திங்கள்கிழமை அவர்களுக்கான மயானத்தில் போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டது.
தொடர்ந்து, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் க.பஞ்சவர்ணம், இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமரசம் ஏற்படாததால், அந்த அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை காலை விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது. இதனால் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/feb/05/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-3089613.html
No comments:
Post a Comment