Thursday, December 28, 2023

பகீரதன் தவம் -சங்க இலக்கியம் காட்டும் கங்கை

 புறநானூறு - 6

 


புறநானூறு - 6. தண்ணிலவும் வெங்கதிரும்!

புறநானூறு - 6. தண்ணிலவும் வெங்கதிரும்!

பாடியவர்:காரிகிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை: பாடாண். 
துறை :செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
சிறப்பு :பாண்டியனின் மறமாண்பு. 

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் 
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும் 
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் 
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் 
கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற்கட்டின் 

நீர்நிலை நிவப்பின் கீழு மேல 
தானிலை யுலகத் தானு மானா 
துருவும் புகழு மாகி விரிசீர்த் 
தெரிகோன் ஞமன்ன் போல வொருதிறம் 
பற்ற லிலியரோ நிற்றிறஞ்சிறக்க 

செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக் 
கடற்படை குளிப்ப மண்டி யடர்புகர்ச் 
சிறுகண் யானை செவ்விதி னேவிப் 
பாசவற் படப்பை யாரெயில் பலதந் 
தவ்வெயிற் கொண்ட செய்வுறுநன்கலம்  

பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப் 
பணியிய ரத்தைநின் குடையே முனிவர் 
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே 
இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த 
நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே 

வாடுக விறைவநின் கண்ணி யொன்னார் 
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே 
செலிய ரத்தைநின் வெகுளி வாலிழை 
மங்கையர் துனித்த வாண்முகத் தெதிரே 
ஆங்க, வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கிய

தண்டா வீகைத் தகைமாண் குடுமி 
தண்கதிர் மதியம் போலவுந் தெறுசுடர் 
ஒண்கதிர் ஞாயிறு போலவும் 
மன்னிய பெருமநீ நிலமிசை யானே.  


பொருளுரை: 

வடக்கில் பனி மிகுந்த உயரமான இமயமலைக்கு வடக்கும், தெற்கில் குமரி மலையினின்று ஊற்றெடுத்துப் பாயும் குமரி ஆற்றிற்குத் தெற்கும், கிழக்கில் கரையை மோதுகின்ற, சகரரால் (சகரனின் மகன்கள் அறுபதினாயிரம் பேர்) தோண்டப்பட்ட சமுத்திரத்திற்கு கிழக்கும், மேற்கில் மிகப் பழமையான ஆழமான கடலுக்கு மேற்கும், கீழே நிலம், ஆகாயம், சுவர்க்கம் என மூன்றும் இணைந்து அடுக்கிய அமைப்பின் முதற்கட்டாகிய நீர்நிலை நிறைந்த நிலத்தின் கீழும், மேலே அமைந்துள்ள கோ லோகத்திலும் மட்டுமல்லாது உனது படை, குடி முதலிய திறங்கள் பெற்று பேரும் புகழுடன் சிறக்கட்டும்! 

பரந்த சிறப்பான பொருட்களை ஆராயும் துலாக்கோலில் உள்ள சமமாகக் காட்டும் கருவி போல, ஒரு பக்கம் வளைந்து கொடுக்காமல் இருப்பாயாக! 

போர் செய்வதற்கு மாறுபட்ட தேசத்தின் மீது உனது கடல் போலும் படை உள்ளே மிகுதியாகச் சென்று அடர்ந்த நிறத்தையும் சிறிய கண்களையும் உடைய யானைகளைத் தடையின்றி ஏவி பசுமையான விளைநிலங்களுடைய அரிய மதிலரண் பலவற்றையும் தனதாக்கிக் கொண்டு அந்த அரணிலிருந்து பெறப்பட்ட அழகிய நல்ல அணிகலன்களை பரிசு பெற வருவோர்க்கு அவரவர் தகுதிக்கேற்ப வழங்கி உனது கொற்றக்குடை முனிவரால் போற்றப்படும் முக்கட் செல்வனாகிய சிவபெருமான் கோயிலை வலம் வருவதற்கு தாழ்க! 

உனது தலை, நான்கு வேதத்தினை அறிந்து சிறந்த அந்தணர் உன்னை நீடு வாழ்க என வாழ்த்தும் கையின் முன்னே வணங்குக பெருமானே! 

இறைவனே! நீ அணிந்திருக்கும் மாலை உன் பகைவரது நாட்டைச் சுடுவதால் ஏற்படும், இனிய மணமுடைய புகையால் வாடட்டும்! 

உனது சினம், சிறந்த ஆபரணங்கள் அணிந்த உன் தேவியரின் ஒளியுடைய முகத்தின் முன் செல்லாது தணிக! போரில் வென்று, வெற்றி முழுவதையும் உன் மனத்தினில் அடக்கி தணியாத வள்ளன்மையுடைய தகுதியால் மாட்சிமைப்பட்ட குடுமி! 

குளிர்ந்த கதிர்களையுடைய நிலவைப் போல குளிர்ச்சியுடனும், மிக்க ஒளி பொருந்திய சுடுகின்ற கிரணங்களையுடைய சூரியனை போல ஒளியுடனும் இந்த நிலமாகிய உலகத்தில் நீ நிலைபெறுவாயாக, பெருமானே! 


Description:

In the north there is snow covered high Himalaya. 
In the south there is frightening Kumari river. 
In the east there is the sea with waves dashing against the shore. 
In the west there is ancient sea. 

You are the king of the vast country. Your fame is spread to the world which is below the earth and which is rich in water. 
It is spread to the world which is above the Heaven. 

You are like the balancing point of the weighing balance and never support one side. Let your people and army be well. 

Your warriors will enter into the enemies' country like sea. They ride elephants with dots on their faces and having small eyes. 
They seize forts surrounded by green fields. You give the ornaments seized in the forts to those who come to get gifts. 

Let your umbrella be lowered only when it goes round the temple of Shiva who is worshiper by sage, who have learned four vedas. 
Oh lord! Let your crown dry by the smoke raised by burning your enemy's country. 

Let your anger go away before the shining faces of the ladies who have worn shining ornaments. 

Oh Mudhukudumip Peruvazhudhi! You have success which has conquered all successes. You have endless giving quality and many noble qualities. 

You live stable in this world like the moon which spreads cold rays and like the sun which gives shining rays. -Kaarikizhaar

முலம்:
http://eluthu.com/kavithai/121894.html
http://thamizhanna.blogspot.in/2010/05/purananooru-first-15-songs-english.html
 பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை/பெரு நீர் போகும் இரியல் மாக்கள் - பெரும் 431,432
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு - மது 696
கங்கை வாரியும் காவிரி பயனும் - பட் 190
கங்கை வங்கம் போகுவர்-கொல்லோ - நற் 189/5
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும் - நற் 369/9
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய - பரி 16/36
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை/நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ - அகம் 265/5,6
மன்பதை எல்லாம் சென்று உண கங்கை/கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றி ஆங்கு - புறம் 161/6,7

கலித்தொகை



Friday, August 18, 2023

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் -எதிர்ப்பவர்கள் பரப்பும் பொய்களும் - உண்மையும்



 காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் (Tamilnadu Maritime  Board)   https://tnmaritime.tn.gov.in/ta/ports/captive-port/kattupalli-port/details/
காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் வந்தால் பரப்பபடும் பொய்கள்
1. சென்னையே வெள்ளத்தில் மூழுகும் அபாயம்
2. பழவேற்காடு ஏரி பாதிக்கும்
3. மீனவர் வாழ்வாதாரம் மீன் குறையும்
4. அமெரிக்க ராணுவக் கப்பல் வந்தது.
தமிழக அரசு கடல்வளத் துறையின் இணையதளள காட்டுப்பள்ளி துறைமுகம் 
1.கடற்கரை ஓரம் துறைமுகம் கட்டுவதற்கும் வெள்ளத்திற்கும் தொடர்பே இல்லை. மழை நீர் வரும் பாதை மறித்தோ, அடைத்தோ இத்துறைமுகம் இல்லை
2.பழவேற்காடு ஏரி  என்பது 400 சதுர கீமி பரப்பளவு, அது இத்துறைமுக விரிவாக்கத்தின் எல்லையில் இருந்து வடக்கே 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, எவ்விததிலும் இத் துறைமுகத்திற்கும் பழவேற்காடு ஏரியின் ஓட்டத்திற்கோ, நீர் பாதைக்கோ தொடர்பு இல்லை. 
காட்டுப்பள்ளி துறைம்கம்- 6051 ஏக்கர் என்றால் மொத்தமே 24.6 சதுர கீலோமீட்டர் மட்டுமே.
3. மீன் வளர்ச்சி, வாழ்வாதரத்திற்கும் இந்தத் துறைமுகத்திற்கும் தொடர்ப்பே இல்லை. துறைமுகம் என்பது முகப்பில் இருந்து 2.5 கீமி நீளம் மட்டுமே, சற்று தள்ளீ ப்ரேக் வாட்டர் வால் எழுப்புவார்கள். இவை மீன் வளர்ச்சியை பாதிக்காது.
4. அமெரிக்க ராணுவக் கப்பல் வருகை என்பது ஏன்? எதற்கு? என்பது அரசு அறிந்தால் போதும். அவை சிறு ரிப்பேர், டீசல், உணவு எடுக்கவும் வரலாம்.
இந்திய அமெரிக்காவுடன் கூட்டு ராணுவ பயிற்சி ஒத்திகை - 140 கோடி இந்திய மக்கள் பாதுகாப்பிற்கு பெரிதும் நல்லதே
கடல் அரிப்பு, என சென்னை காசிமேடு பகுதியில் உள்ளே வந்துள்ளதையும் இதையும் தொடர்பு படுத்த இயலுமா? 
ஆர்டிக் பகுதி ஐஸ் பாறை உருகுவதால் கடல் மட்டும் ஆண்டிற்கு சில மில்லிமீட்டர் என உயர்ந்து வருகிறது, இதனால் இந்தியாவின் சென்னை உட்பட பல முக்கிய நகரங்களே மூழ்கலாம் என்கிறாது செய்தி, கடல் மட்டம் உயர, அரிப்பிற்கு ஒரு துறைமுகம் காரணம் ஆக முடியாது.
https://www.livemint.com/news/india/these-2-indian-cities-are-at-risk-due-to-sea-level-rise-11677996856707.html#:~:text=According%20to%20the%20analysis%20by,the%20rise%20in%20sea%20level.  






தமிழகத்தை மாபெரும் தொழில் வளர்ச்சி தந்து 2030ல் 1ட்ரில்லியன்$ ஜீடிபி பொருளாதார சந்தை கொண்டதாக மாற்றும் ஒரு லட்சியக் கனவை 2021ல் ஆட்சியைப் பிடித்த தமிழக முதல்வர் அறிவித்தார். அதற்கு காட்டுப்பள்ளி துறைமுகம் ஒரு மாபெரும் காரணியாக அமையும்