Sunday, May 31, 2015

செந்தமிழில் கல்வெட்டுகள் இல்லை - ஏன்?

E.Annamalai Image result for tamil brahmi inscriptions
சென்னை, மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் இரா. சீனிவாசன் எழுப்பிய கேள்விகள்:
கல்வெட்டுகளில் பயின்று வரும் மொழி, இலக்கிய மொழியிலிருந்து வேறுபட்டிருப்பதன் காரணம் என்ன?
பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:
சங்கக் கவிதைகளின் மொழியும் சமகால பிராமிக் கல்வெட்டுகளின் மொழியும் தனித்து நிற்கின்றன. கம்பராமாயணத்தின் மொழியும் சோழர் காலக் கல்வெட்டுகளின் மொழியும் வேறானவை. இதற்குக் காரண்ங்கள் பல. சில காரணங்கள் ஊகங்களே. ஒரு காரணம், எழுதப்பட்ட பொருள். கவிதையின் பொருள் கற்பனை கலந்தது. இந்தக் கற்பனைக்கு ஒரு மொழி சார்ந்த ஒரு மரபு இருந்தது. கல்வெட்டுகளின் பொருள், கொடை, போர் வெற்றி, கோயில் பராமரிப்பு முதலிய உலகியல் சார்ந்தது. இன்றும் அரசு ஆவணங்களின் மொழிக்கும் நவீன இலக்கிய மொழிக்கும் வேறுபாடு உண்டு.
இரண்டாவது காரணம், எழுத்தின் நோக்கம். இலக்கியம், மொழித் திறம் படைத்தவர்கள் படித்து இன்புற எழுதுவது. கல்வெட்டு, குறைந்த படிப்பறிவு உள்ளவர்களும் படித்து விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக எழுதப்பட்டது. இதனால் கல்வெட்டுத் தமிழில் பேச்சுத் தமிழின் கலப்பைப் பார்க்கலாம்.
மூன்றாவது காரணம் புரவலர்களின் மொழிக் கொள்கையும் நாட்டின் மொழி நிலையும். பிராமிக் கல்வெட்டுகளில் சுட்டப்படும் உறவிடங்களைத் தானமாகப் பெற்றவர்கள் பிராகிருதம் பேசிய சமணத் துறவிகள். இந்தக் கல்வெட்டுகள் தமிழும் பிரகிருதமும் கலந்து எழுதப்பட்டிருக்கின்றன. இதே சமணர்கள் தாங்கள் தமிழில் கவிதை எழுதும்போது தமிழ்க் கவிதை சார்ந்த மொழி மரபை – பிற மொழி கலக்காத, கலந்தாலும் தமிழாக்கப்பட்ட மொழியை – பின்பற்றுகிறார்கள். சோழ அரசர்கள் தங்கள் பேரரசுத் தகுதியை நிலைநாட்ட இந்தியாவிற்கு வெளியேயும் அரசவைகளில் கோலோச்சிய சமஸ்கிருதத்தைத் தழுவி அதைக் கல்வெட்டுகளில் தங்கள் பெருமையைப் பறைசாற்றப் பயன்படுத்தினார்கள். இதனால் கல்வெட்டுகளில் அரசனின் வம்சப் பெருமையையும் போர் வெற்றிகளையும் புகழும் மெய்க்கீர்த்தி சமஸ்கிருதத்தில் அல்லது சமஸ்கிருதம் கலந்த தமிழில் இருக்கும். ஆனால் இது போன்ற புகழ்ச்சியுரை இலக்கியத்தில் பாடாண்திணையாக வரும்போது நல்ல தமிழில் இருக்கும். மேலே சொன்ன காரணத்தால் கல்வெட்டுகளில் பிறமொழிச் சொற்கள் அதிகமாக இருக்கும். அரசு நிர்வாகத்தைச் சேர்ந்த பல கலைச் சொற்களும் பிராகிருதத்தில் இருக்கும்.
நான்காவது காரணம், மொழி வெளிப்பாட்டு வடிவம். இலக்கியம், கவிதை வடிவம் கொண்டது. கல்வெட்டு, உரைநடை வடிவம் கொண்டது. உரைநடையில் மொழியைப் பொறுத்தவரை அதிகச் சுதந்திரம் உண்டு. இறையனார் அகப்பொருள் உரை போன்ற இலக்கியம் தொடர்பான உரைநடை இலக்கிய மொழியின் தன்மைகளைக் கொண்டது. உலகியல் தொடர்பான உரைநடை, நாட்டு மொழிப் பயன்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
http://www.vallamai.com/?p=625
இ.அண்ணாமலை- பேராசிரியர் தெ.பொ.மீ.யிடமிருந்தும், மொழியியலைச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நோம் சாம்ஸ்கியின் மாணவரும், பின்னாளில் மாற்றுக் கொள்கை உருவாக்கியவருமான ஜிம் மெக்காலேயிடமிருந்தும் கற்றார். இவர் உலகின் பல நிறுவனங்களில் ஆய்வுப் பணி ஆற்றியுள்ளார். இவற்றில் அண்ணாமலை நகர், சிகாகோ, டோக்கியோ, லெய்டன், மெல்போர்ன், லெய்ப்சிக், நியு ஹேவன் முதலிய இடங்களில் உள்ள நிறுவனங்கள் சேரும். இவர் அதிக காலம் பணியாற்றியது, மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மைய நிறுவனம் ஆகும். ஓய்வு பெறும் போது இவர் இதன் இயக்குநர். இவருடைய அண்மைப் பணி, யேல் பல்கலைக்கழகத்தில்.

Saturday, May 30, 2015

சங்கத் தமிழரை கண்டித்த திருவள்ளுவர்

பழந்தமிழ் மக்களிடையே மது, கள் அருந்தும் பழக்கம் தனிச் சிறப்புடன் விளங்கியது. அரசன் முதல் புலவர்கள், சான்றோர்கள். குடிமக்கள் வரை ஆண், பெண் அனைவரும் களிப்புடன் கள்ளைப் பருகி மகிழ்ந்த செய்திகளைப் பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களில் காணலாம். போதைக்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் உடல் வெம்மைக்காகவும் பழந்தமிழர் பயன்படுத்திய ‘மது’, ‘கள்’ ஆகியன பற்றிய குறிப்புகளை இந்நூல்கள் விரிவாகக் குறிக்கின்றன. உள்நாட்டு மது வகைகளுடன் அயலக மது வகைகளும் பயன்படுத்தப்பட்டன. ‘யவன மது’வை மிக விருப்புடன் மகளிர் அருந்திய செய்தியைப் புறநானூறு குறிப்பிடுகின்றது. மட்டு, மது, நறவு, தேறல், கள் எனப் பல்வகைப் பெயர் பெற்று விளங்கும் குடிவகைகள் தேன், நெல்லரிசி, பழங்கள், பூவகைகள், தென்னை. பனை போன்ற மரங்களிலிருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டன.

கள் ‍ என்ற வார்த்தை களித்திருத்தல் (இன்பமாக இருத்தல்) என்ற சொல்லிருந்து வந்ததாகும். ‌கள் என்ற சொல் சங்க இலக்கியத்தில் வெறிநீர், பதநீர், மட்டு, தேன் ஆகிய நால்வகை பதங்களோடு குறிக்கப்படுகிறது. 
 
மதுவில் தென்னங்கள், பனைக்கள், அரிசிக்கள், தோப்பி, தேக்கள், பிழி ,மணங்கமழ் தேறல், பூக்கமழ் தேறல்,நறவு என பலவகைகள் உண்டு. நெல்லால் சமைத்த கள் நறவு எனவும்,  தேனால் சமைத்த கள் தேறல் எனவும்,  பூக்களால் தயாரிக்கப்பட்டு அத்துடன் குங்குமப் பூவையும் இட்டு தருகிற கள் தெளிவுக்கு பூக்கமழ் தேறல் எனவும் பெயர்.

கள் தயாரிக்கும் முறைகூட சில பாடல்களில் விளக்கப்படுகின்றன.

கூறு மிக்க அரிசி பனை மரத்தின் காய் இவற்றின் கூழ் 8 லிட்டர் ம‌ற்றும் 21.5 லி உளுந்தை ஊறவைத்த தண்ணீர் இவற்றின் கலவை மதுக்குழம்பு எனப்படும் (ஒரு தூணி உழுந்துக்கழுநீர், 1 கருடம் கூறு மிக்க அரிசி மற்றும் பெருங் குரும்பை)
 
ஒரு தூணி உழுந்துக்கழுநீர் - 21.5 லி உளுந்தை ஊறவைத்த தண்ணீர் 
பெருங் குரும்பை - பனை மரத்தில் காய்க்கும் பிஞ்சு காய் ‍நுங்குவின் முந்தைய நிலை 
1 கருடம் - 1 மரக்கால் -  8 படி - தோரயமாக 8 லிட்டர்
 
ஒர் ஆண்டு வரை ஊறல் வைக்கப்படும் மது வகைகள் தலையாயது என்றும், ஆறு மாதங்கள் வரை ஊறல் வைக்கப்படும் மது வகைகள் இடையாயது என்றும், ஒரு மாதம் ஊறல் வைக்கப்படும் மது வகைகள் கடையாயது என்றும் அழைக்கப்படும்.
 
தோப்பி 
ஒரு தூணி நீர்(21.5 லி) அரை மரக்கால்(4 ப‌டி) அரிசி மூன்று படி மதுக்குழம்பு இவற்றின் கலவை தோப்பி எனப்படும்.
 வீடுகளிலேயே தயாரிக்கப்பட்ட கள்ளிற்குத் ‘தோப்பிகள்’ என்று பெயர்.
இல்லடு கள்ளின் தோப்பி பருகி
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
தேறல் 
பன்னிரண்டு மரக்கால் மா ஐந்து படி மதுக்குழம்பு புத்திரகமரத்தின் பட்டை கனிகள் மணக்கூட்டு இவைகளின் கலவை தேறல் எனப்படும்.
தேனை மூங்கில் குழாய்களில் பெய்து அதனை முதிர்விப்பார்கள். நாட்பட நாட்பட இத்தேனின் சுவை அதிகமாகும். இவ்வாறு பதனப்படுத்திச் சுவையேற்றிய மதுவே தேக்கள் தேறல் எனப்படும். குறவர்கள் இத்தகு ‘தேக்கள் தேறலை’ப் பருகிக் குறிஞ்சிக் கடவுளான முருகனைப் பாடி ஆடுவார்களாம். தேனினை மூங்கில் குழாயில் ஊறல் முறைப்படி முற்ற வைக்கும் இத்’தேக்கள் தேறலை’ப் பற்றிய குறிப்புகள் திருமுருகாற்றுப் படை, மலைபடுகடாம், அகநானூறு ஆகிய நூல்களில் காணப் பெறுகின்றன.
 
பிழி 
ஒரு துலை விளம்பழம், ஐந்து துலை பாகு, ஒரு படி தேன் இவைகளுடைய கலவை பிழி எனப்படும். காற்கூறு மிக்கது தலையாயது. காற்கூறு குறைந்தது கடையாயது.
 
1 துலை - 1 துலாம் - 3.5 கி.கி.  
பாகு - செறிவாக் காய்ச்சிய சர்க்கரை
 
சாராயம் 
ஆடு திண்ணாப்பாளை திப்பிலி என்னும் இவற்றின் சாற்றைக் கொதிக்க வைத்து அதனோடு கருப்பஞ்சாறு வெல்லம் தேன்பாகு நாவற்பழச்சாறு பலாப்பழச்சாறு என்னும் இவற்றுள் ஒன்றைக் கலந்து ஒரு திங்கள் ஆறு திங்கள் அல்லது ஓர் யாண்டு வரை வைத்துப் பின் அதனோடு சிற்பிடம் வெள்ளரிப் பழம் கரும்பு மாம்பழம் நெல்லிக்கனி என்னுமிவற்றின் சாற்றிற் கலந்தேனும் கலவாமலேனும் அமைக்கப் படுவன சாராய வகைகளாம். 
 
நறும்பிழி
நெல்முளையைக் காயவைத்து  மாவாக்கி ,பிறகு அரிசியை கொதிக்க வைத்து அதனுடன் ஏற்கனவே அரைத்த மாவையும் கலந்து கூழாக்கி, அதை வாய் அகன்ற தாம்பளத்தில் இட்டு காய வைப்பார்கள். அதை குடத்தில் வைத்து இரு இரவும், இரு பகலும் தொடமல் வைக்க வேண்டும். இரு நாள் கழித்து எடுத்து உண்ணப்படும் கள்ளுக்கு நறும்பிழி எனப் பெயர். 
 தொண்டை நாட்டில் வாழ்ந்த ‘வலையர்’ என்பார் தயாரிக்கும் கள் ‘நறும்பிழி’ எனப்பட்டது. குற்றாத கொழியில் அரிசியைக் களி போல் துழாவிக் கூழாக்குவார்கள். பின் அதனை ஆறச் செய்ய, வாயகன்ற தாம்பாளம் போன்ற தட்டுப் பிழாவில் ஊற்றி ஆற்றுவர். நெல் முனையை இடித்து அக்கூழிற் கலப்பர்; கலந்த இக்கூழினை இரண்டு நாட்கள் சாடியில் ஊற்றி வைப்பர். நன்கு ஊறிய பின்பு விரலாலே அரிப்பர். இவ்வாறு அரிக்கப்படும் கள் மிகுந்த சுவையினை உடையதாக இருக்கும். நறும்பிழி எனப்படும் இக்கள்ளினை வலையர்கள் உண்டு மகிழ்ந்தனர் என்னும் செய்தியினைப் பெரும்பாணாற்றுப் படையில் காணலாம்.
தேக்கள்
மூங்கில் அரிசியுடன் தேனைக் கலந்து கூழாக்கி, அந்த தெளிவை மூங்கில் குழாய்களில் அடைத்து வைத்து சிறிது நாள் கழித்து எடுத்து பருக வேண்டும். இதற்கு தேக்கள் தேறல் எனப் பெயர்.
 
சங்க காலப் பெண்பாற் புலவர் ஒளவையாரும் தகடூர் அரசன் அதியமானும் சேர்ந்தே மது அருந்தியுள்ளனர் (புறநானூறு பா. 235). மன்னன் அதியமான் ஒளவையாரின் புலால் நாற்றம் அடிக்கின்ற கூந்தலை நரந்தம்புல்லின் மணம் வீசும் தன் கையால் தடவிக் கொடுப்பதாக ஒரு குறிப்புள்ளது. 
 
புணர்ச்சியின் போது நுகரப்படும் கள் காம பானம் எனப்பட்டது, போருக்குச் செல்லுமுன் மறவ்ர்கள் அருந்தும் கள் வீரபானம் எனப்பட்டது. பூக்கமழ் தேறல், மணங்கமழ் தேறல் என்று கூறப்படும் இருவகை மதுபானமும் காமபானமாக உட்கொள்ளப்பட்டதாக இலக்கியங்களில் காணப்ப‌டுகின்றன. பெண்கள் புணர்ச்சியினபோது கள் அருந்தியதாக பட்டிணப்பாலை பாடல் ஒன்று இவ்வாறு கூறுகிறது.
 
"பட்டு நீக்கித்துகிலுடுத்தும் 
 மட்டு நீக்கி மதுமகிழ்ந்தும்” 
 
பெண்கள் புணர்ச்சி நேரத்தில் பட்டு ஆடகளை நீக்கி, நூலாடை அணிந்தும், மயக்கம் தராத கள்ளை உண்டு மகிழ்ந்தனர் எனப் பொருள். இங்கு "மட்டு" என்பது இனிய சுவை உடையது, மயக்கத்தை தராதது எனப் பொருள்படும்.
பெண்ணைப் பிழி (பனங்கள்)
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த பரதவர்கள் பனங்கள்ளைப் பருகிய செய்தி பட்டினப்பாலையில் குறிக்கப்பட்டுள்ளது.
--------------------
நறவு
நன்னனது மலைநாட்டில் வாழும் மக்கள் நடத்தும் விருந்தில் தேக்கள் தேறலையும், நறவு எனப்படும் கள்ளினையும் பரிமாறி உண்டதாகத் தெரிகிறது. ‘நறவு’ என்பது நெல்லரிசி கொண்டு அமைக்கப்பட்ட ‘கள்’ ஆகும்.
------------------------
பூக்கமழ் தேறல்
செல்வந்தர்களின் மாளிகைகளிலும் அரண்மனைகளிலும் இவ்வகை மது பருகப்பட்டது. பொற்கலசங்களில், தேக்கள் தேறல் போன்றவற்றில் இஞ்சி, குங்குமப்பூ போன்ற மணங்கமழும் பூக்களை இட்டுத் தயாரிக்கப்படுவதே ‘பூக்கமழ் தேறல்’ ஆகும். அரசர்கள் இத்தகு தேறலை உண்டு வாழ்ந்த வரலாற்றை மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் குறிப்பிடுகிறார்.
-----------------
கட்சுவையும் – பழச்சுவையும்
படைவீரர்கள் கள்ளை விரும்பிக் குடிப்பதால் நாவில் ஏற்படும் புளிப்பு வேட்கைக்குக் களாப்பழமும், துடரிப்பழமும் உண்டனர். அப்படியும் நீர் வேட்கை தணியாமையால், கருநாவல் பழத்தைப் பறித்து உண்டனர். கள் உண்டதால் ஏற்பட்ட நீர் வேட்கையைக் களாப்பழமும், துடரிப்பழமும். கருநாவற் பழமும் தணிவித்ததுடன் உடலுக்கு உரமாகவும் இவை விளங்கின. படை வீரர்கட்கு அளப்பரிய வலிமையையும் இவை அளித்தன. களாப்பழம் உடம்பு வலியைப் போக்குவதுடன் மலையைப் போன்று உடலுக்கு வன்மையை அளிக்கும் குணம் உடையது. கருநாவற்பழம் கள் அருந்துதலால் ஏற்படும் உடல் வறட்சியைப் போக்கி உடலுக்கு உரமளிக்கும் தன்மையுடையது என்பதை மூலிகைக் குணபாடம் வழி அறியலாம். எனவே, கள்ளைப் பருகினாலும், அதன் தீமைகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும் வகையில் பழ வகைகளையும் அக்காலத்தில் உண்டனர். அதனால் கள் உடலுக்குத் தீமையை உண்டாக்கவில்லை.
--------------------
கண் சிவக்கும் கள்
வையை ஆற்றில் நீராடிய தலைவி உடலின் ஈரம் புலர வெப்பத்தைத் தரும் கள்ளைப் பருகினாள். கள் பருகுவதற்கு முன் நெய்தற் பூவைப் போன்ற கருமையாக இருந்த கண்கள் கள்ளைப் பருகியபின், நறவம் பூவைப் போல சிவந்தனவாம். அவ்வளவு வெப்பத்தினை அளிக்க வல்ல கள்ளைப் பருகி, நீராடிய களைப்பைப் போக்கி மகிழ்ந்தனர் அக்கால மகளிர் என்பதைப் பரிபாடல் உணர்த்தும்.
குளிரைப் போக்கும் கள்
தானைத் தலைவன் ஒருவன் போருக்குச் செல்லத் தயாராகின்றான். அப்போது நடுக்கத்தைத் தரும் குளிரிலிருந்து உடம்பைப் பாதுகாக்க நாறால் வடிக்கப்பட்ட ‘நறவு’ என்னும் கள்ளைப் பருகிச் செல்கின்றான். உண்டார்க்கு வெம்மையை அளிக்கும் குணம் நறவு கள்ளுக்குண்டு என்பதைப் புறுநானூற்றுப் பாடல் கருத்து குறிப்பிடுகிறது.
------------------
வழி நடை வலியைப் போக்கிய கள்
பரிசில் பெற வழிநடை சென்ற பாணர்களுக்கு ஏவல் மகளிர் பொன்னாற் செய்த வட்டில் நிறையக் கள்ளினை அளித்தனர். அக் கள்ளினைப் பாணர்கள் பருகி வழிநடையால் ஏற்பட்ட உடல் வலியைப் போக்கிக் கொண்டனர். போதைக்கு மட்டுமின்றி உடல் வலியைப் போக்குவதற்கும் அக்கால மக்கள் கள் பருகியமையை இச்செய்தி உணர்த்தும்.
இவ்வாறு பழந்தமிழர் பழக்கத்தில் நிலவிய பலவகை மதுவும், கள்ளும் போதைக்காகவும் உடல் நலத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டதை அறியலாம். இக்காலத்து, தென்னை, பனை, ஈந்து, அரிசி போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் மது, வயிறு, நுரையீரல் போன்ற உள் உறுப்புகளின் நோய்களுக்கு மருந்தாவதை நோக்கும்போது சங்க காலத்துத் தயாரிக்கப்பட்ட இவ்வகை மதுவும், கள்ளும், உடல்நலத்தைக் கெடுக்கவில்லை என்பதையும், மாறாக இவை குளிர்காலங்களில் உடலுக்கு வெம்மையைத் தந்து, வழிநடையின் பொது வலியைப் போக்கிக் களைப்பையும், நீர் வேட்கையையும் தணித்து உடலுக்கு உரம் அளித்த திறத்தினையும் அறியலாம்.
மதுவையும் கள்ளையும் பயன்படுத்திய பழந்தமிழர் இவற்றுடன் களா, துடரி, கருநாவல், இஞ்சி, குங்கும்பூ, இலுப்பைப்பூ போன்ற மருத்துவக் குணமுடைய துணைப் பொருட்களையும் கலந்து உண்ட தால் உடல் வலிமை பெற்றனரேயன்றித், தீமை ஏதும் பெறவில்லை என்பதை அறியலாம். பழந்தமிழர் மதுப்பழக்கம் இக்கால மதுவினின்று முற்றிலும் வேறுபட்டது. இயற்கைப் பொருட்களி லிருந்து அவை தயாரிக்கப்பட்டதால் உடலுக்கு நன்மை அளித்தன. அதனால் தான் ஔவை போன்ற பெண்பாற் சான்றோர்களும் அதனைப் பருகி மகிழ்ந்து போற்றினர். அவ்வகையில் பழந் தமிழரின் நலவாழ்வுக்கு உறுதுணையாகும் வகையில் அமைந்த நலம் தரும் பழக்கங்களில் தலைசிறந்த பழக்கமாக ‘மதுப் பழக்கம்’ இருந்தது. பிற்காலத்தில் சித்தர்கள் பட்டைச் சாராயம் என்னும் பெயரில் தயாரித்த மதுவுக்கும் சங்க கால ‘மது’, ‘கள்’ ஆகியவற்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. சங்க கால மதுவின் விரிவான வளர்ச்சியைச் சித்தர்களின் பட்டைச் சாராயத் தயாரிப்பில் காணலாம். 
சமீப காலமாய் அதியமான் ஔவை பற்றி இன்னொரு செய்தியும் பிரபலமாகி வருகிறது. மது தொடர்பானது தான் அதுவும். அரசனுக்கு ஒரு மடக்கு மது கிடைத்தால், அதை ஔவைக்கே வழங்கிடுவாராம். ஒரு கோப்பை கிடைத்தால் அரசன் பாதி ஔவை பாதி என்று பகிர்ந்து கொள்வாரம். 

திருக்குறளின் ‘கள்ளுண்ணாமை’ என்னும் அதிகாரத்தில் மது அருந்தும் பழக்கத்தைக் குற்றம் என்றும், அதனால் ஏற்படும் தீங்குகளையும் ஐயன் வள்ளுவர் கூறியிருக்கிறார். 

’எதையும் மன்னிப்பவள் தாய், அந்த தாய்க்கூட குடிக்கும் பழக்கத்தை மன்னிக்க மாட்டாள், மன்னிக்கக் கூடாது!’ என்கிறது ஒரு குறள். இதுதான் வள்ளுவர் வகுத்த சட்டம். குடிப்பழக்கத்தை மிகப்பெரும் குற்றமாக கருதுதல் வேண்டும். தமிழர்களின் மூலநூல் திருக்குறள் என்று மார்தட்டிக் கொண்டால் மட்டும் போதாது, திருக்குறளில் இருக்கும் குறள்வழியும் நாம் நடந்து கொள்ளவேண்டும்.
வள்ளுவர் கள்ளுண்பவரைச் செத்தவராகவே எண்ணுகின்றார்.

துஞ்சினார் செத்தாரின் வேறல்லார் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

இப்படி அறிவை கெடுத்துப் பிறரால் எள்ளப்படும் தன்மைக்கு ஆளாக்கும் குடி சமுதாயத்திற்குத் தேவையில்லை என்ற காரணத்திற்காக தான் வள்ளுவர் ஒரு அதிகாரத்தையே படைத்துள்ளார்.மது நஞ்சு என்று தெரிந்தும் கண்ணை திறந்து கொண்டே கிணற்றில் விழுவது போல அதில் விழுந்து உழன்று கொண்டிருப்பவர்கள் சிந்தித்தால் வள்ளுவர் கண்ட உயர்ந்த சமுதாயம் உருவாகக் முடியும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் 
திண்ணிய ராகப் பெறின்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

மதுவை மறப்போம்,மகிழ்வை பெறுவோம்.சமுதாயத்தில் நன்மக்கள் என்ற பெயரினை அடைவோம்என்ற எண்ணத்தில் தெளிவும் உறுதியும் கொண்டு செயல்படுவோம் என்ற உறுதியை ஒவ்வொரு இளைஞர்களும் கொண்டால் வள்ளுவர் கண்ட சமுதாயம் மலரும்.\

மதுவை உண்ணுவதால் ,பிறரால் மதிக்க கூடிய தன்மையை இழப்பதுடன்,தன் தோற்றப் பொலிவினையும் இழப்பர்.

உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்
களகாதல் கொண்டொழுகுவார்.

இதனையே அறநெறி சாரமும் ,

ஒளியும் ஒளிசான்ற செய்கையும் சான்றோர்
தெளிவுடையன் என்றுரைக்கும்தேசும் - களியென்னும்
கட்டுரையால் கோது படுமேல் இவையெல்லாம்
விட்டொழியும் வேறாய் விரைந்து (144)

வஞ்சமுங் களவும் பொய்யு மயக்கமு மரபில் கொட்புந்
தஞ்சமென் றாரை நீக்குந் தன்மையுங் களிப்புந் தாக்கும்

எனக் கம்பராமாயணமும் மது உண்பதால் ஏற்படும் விளைவுகளைக் கூறுகின்றன.
கள்ளுண்பவனைத் தாயே மதிக்கமாட்டாள் என்றால் பிறகு யார் தான் மதிப்பார்கள்.
யாவரும் இகழக்கடிய மதுவை உண்பவனிடத்து வெட்கம் கூட அவனை விட்டு சென்றுவிடும்.

’எவன் ஒருவன் குடிப்பழக்கத்தைப் பின்பற்றுகிறானோ, அவன் செத்துப் போனவர்களுள் வைக்கப்படுவான்’ என்கிறார் வள்ளுவர். ’என்று குடிக்கத் தொடங்குகிறானோ, அன்றே அவன் செத்தான்’ என்று குடிப்பழக்கத்தை முற்றிலும் புறக்கணிக்கார் நம் ஐயன் வள்ளுவர். இவ்வாறு மதுவை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்பதற்காக வள்ளுவர் குறள்களை இயற்றினார்.
 திருக்குறளில் வள்ளுவர் 1330 குறளில் தமிழ் என்ற சொல்லை பயன் படுத்தவே இல்லை.


தமிழரிடம் பரவலாய் இருந்த மது அருந்துதலை கண்டித்த திருவள்ளுவர்

Wednesday, May 27, 2015

திருவள்ளுவரை, திருக்குறளை இழிவு படுத்தும் கிறிஸ்துவமும் எட்டப்பர் தமிழறிஞர்களும்

G.U.Pope in English Translation Introduction.
“Thiruvalluvar worked hard to acquire knowledge by all means. Whenever a ship anchors in Mylapore coast, Valluvar’s ‘Captain’ friend would send him message about the arrival of new visitors including foreigners. Many foreigners could have travelled in his friend’s vessel and landed in Mylapore via Sri Lanka. Within me I see the picture of Thiruvalluvar talking with the Christians gathering information and knowledge. He has gathered a lot of Christian theories in general and the minute details of Alexandrian principles in particular and incorporated them in his Thirukkural. The philosophy of Christian theories from the Church situated near Valluvar’s place is present clearly in Thirukkural. Thiruvalluvar lived between 800 AD and 1000 AD. The Christian Biblical works were certainly an evidence for Valluvar’s Thirukkural. He was certainly inspired by the Bible.”


எப்போது போலியாய் ஆரியர் திராவிடர் எனும் பிளவை வளர்த்ததோ, எட்டப்பர்களும், திராவிடக் கட்சி இக்கால எட்டபர்களும் உள்ளபோது எதுவும் எழுத முடியும்.


திருவள்ளுவர் காலம் 9 - 10 ம் நூற்றாண்டு, அவர் துறைமுகமான மயிலாப்பூரில் தங்கியதால், கிறிஸ்துவ வியாபாரிகளிடம் பெற்ற பைபிள் அறிவால் தான் திருக்குறல் எழுதியிருக்க வேண்டும்- எனப் பிதற்றினார்.
இதில் தோமோ வருகை கிடையாது.)
இதைக் கொண்டு, கிறிஸ்துவ சாந்தோம் சர்ச் - பாவாணர், அவர் சீடர் தெய்வநாயகம் கொண்டு திருவள்ளுவர் கிறிச்துவரா என்ற நூலைக் கருணனிதி வாழ்த்துரையோடு, அன்பழகன் தலைமையில் வெளியிட, பின் அருளப்பா தோமா கட்டுகதையை மிகவும் வளர்த்தார்.
ந்தோம் சர்ச் பணத்தில் எழுதப்பட்ட நூலில் உள்ளது - 

கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியதுதோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧83
வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர்.பக்௧31

 
 திருக்குறளுக்கு உளறல் ரீதியில் கிறிஸ்துவ உரை தயாரித்தார், சாந்தோம் சர்ச் பெயரில் இல்லாமல் இவற்றை தெய்வநாயகம் என்பவர் பெயரில் சாந்தோம் சர்ச் செலவில் பல நூல்கள் வந்தன. மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் - 100% பணத்தில் தமிழ் கிறிஸ்துவத்துறை என அமைத்து- பல போலியான பி.எச்.டி. விற்கப்படுகிறது. ஆசார்யா பால் என்பவரை கொண்டு (கணேஷ் ஐயர்) போலியான போர்ஜரி ஓலை சுவடிகள் தயாரிப்பில்  அருளப்பா ஏற்பாடு செய்தார். ஆசார்யா பாலிற்கு பேராயர் வீட்டு முகவரி தந்து, பாஸ்போர்ட் பெற்று ஐரோப்பா சுற்றுலா அழைத்து சென்று, போப்பரசரை  சந்திக்கவும் செய்தார். வெளிநாடு பயணத்தில் பேராயர் இருந்தபோது சர்ச்சினர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசார்ய பால் மீது வழக்கு போட, கைதாகிட  ஆசார்ய பால் கணேஷ்- சாந்தோம் சர்ச் பேரயர் செய்தவைகளை வெளியிடுவேன் என்றிட நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு அமைதி ஒப்பந்தம் செய்து,  அவர் சொத்தாக மாற்றியவை தவிர பணமாக வைத்தவை மட்டுமே திருப்பித் தர  சர்ச் ஏற்றுக் கொண்டது.
சா

இந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டது கல்வி அமைச்சர் அன்பழகன், ஆர்சி, சி.எஸ்.ஐ. இரண்டு பேராயர்களும். நூலிற்கு வாழ்த்துரை வழங்கியது கருணாநிதி.
 தெய்வநாயகம் ஆராய்சி தவறானது என அவரை சென்னை கிறிஸ்துவக் கல்லுரித் தமிழ்த்துறை வெளியேற்றியது. பன்னாட்டு தமிழ் மையம் அவருடைய கட்டுரை தவறானது, என சுற்றரிக்கை வெளியிட்டது. பல கத்தோலிக்க அறிஞர்களும் அருளப்பா - தெய்வநாயகம் உளறள்களை நிராகரித்திட அருளப்பா ஓய்வில் அனுப்பப் பட்டார் சின்னப்பா  100 கோடியில் தோமா சினிமா என விழா எடுக்க அடுத்த பதிவில். http://ishwarsharan.wordpress.com/parts-2-to-9/madras-mylapore-archdiocese-plans-blockbuster-movie-on-st-thomas-ishwar-sharan/



 மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் - 100% பணத்தில் தமிழ் கிறிஸ்துவத்துறை என அமைத்து- பல போலியான பி.எச்.டி. விற்கப்படுகிறது. 
`விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது.//
Sir- It is 100% church  funded ARCHDIOCESAN CHRISTIAN STUDIES at Christian Tamil Studies of Madras University gave that P.Hd.  to Deivanaygam and not just that  Many more Such P.hd. were issued by Madras Arch Bishop
Viviliam, Thirukkural Saiva Siddhantam Oppaivu-(Tamil) Comparative Study of the Bible, Thirukkural and Saiva Siddhanta)-Ph. D. Thesis by Dr.M.Deivanayagam-University of Madras-1985
Tamil Bhakti Iyakkathin Thotramum Valarchiyum – Vivilia Oliyil (Tamil) (The Origin and Development of Tamil Bhakti Movement (in the Light of the Bible) by Dr.D.Devakala – Ph.D. Thesis –University of Madras – 1993
Ilakkiyangalil Moovorumai Kotpadu(Tamil) (Trinity Concept In Tamil Literature) –Ph.D. Thesis  by Dr. A. Johnson Thankiah – University of Madras-2003
Siddhar Padalkalum Viviliyamum (Tamil)(Songs of Tamil Siddhars and the Bible) Ph.D. Thesis by Dr. Moses Michael Farradey – University of Madras.-1999
Aru Vagai Darisanangalum Tamilar Samayamum – Viviliya Oliyil (Tamil)- (Six Darshanas and the Religion of Tamils – in the Light of the Bible) by Dr .J. D. Baskara Doss- Ph.D. Thesis – University of Madras -1998.
Former Archbishop Arulappa has written many books  on this falsehood
 File?id=dcnjmj8m_46gstkxxtp_bDr. R. Arulappa: Late archbishop of the Madras-Mylapore Archdiocese.


மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் பலருள்ளும் டாக்டர் ஜி,யூ,போப் அவர்களின் மீது தமிழர்களுக்கு, அதிலும் தமிழ்ச் சைவர்களுக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. அதற்குக் காரணமும் உண்டு. மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் தங்களுடைய மதத்தினைப் பரப்பவே தமிழைப் பயின்றனர். டாக்டர் ஜி.யூ.போப்பும் அவர்களைப் போலவே தம்முடைய மதத்தைப் பரப்பவே தமிழ் கற்றாலும், சைவத் தமிழை, குறிப்பாகத் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலைநாட்டவர்க்கு அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் உண்மைச் சமயம் சிவநெறியே என்பதைத் திடம்பட எடுத்து மொழிந்தார் – “caivism is the real religion of the South India and North Ceylon; and the caiva Siddhanta philosophy has and deserves to have, far more influence than any other”.
pope


போப்பின் திருவாசகக் காதல் குறித்துக் கதை ஒன்றும் திருவாசகப் பேச்சாளர்களால் மேடைதோறும் கூறப்படுகின்றது. போப் தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதுவாரென்றும், அப்படி யாருக்கோ எழுதிய ஒரு திருவாசகப்பாடலை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகிக் கடிதத்தின் மீது விழுந்து எழுத்தை அழித்துவிட்டதென்றும் அது திருவாசகத்தால் வந்த புண்ணியக் கண்ணீர் ஆதலால், அப்புனிதக் கண்ணீர் பட்டு அழிந்த எழுத்தின் மீது மீண்டும் எழுதாமலேயே அக்கடிதத்தை அனுப்பியதாகவும் கூறுவர்.
324px-Statue_of_G_U_Pope
இது ஒருமுகம். இந்த முகத்தைக் கண்ட தமிழ்ச் சைவர்கள் போப்பின் இன்னொரு முகத்தையும் கட்டாயம் காணவேண்டும். அந்த முகம் போப்பைப் பற்றிய புகழ்மொழிகளால் மறைக்கப்பட்டுவிட்டது.
”கடிதம் எழுதும் போது கண்ணீர் வரும்” என்ற புனைவோடு சேர்த்து, இன்னொரு உணர்ச்சியூட்டும் புனைவையும் பரப்பி வருகிறார்கள்.
போப் தனது கல்லறையில் “இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதச் சொன்னதாகவும், அது இன்னும் அப்படியே இருக்கிறது என்றும்!
759184087_a128242574
759220861_113674a8b6
சில ஆர்வக் கோளாறு கொண்ட தமிழறிஞர்கள் தங்கள் லண்டன் விஜயத்தின் போது ஜி.யு போப்பின் கல்லறையை சல்லடை போட்டுத் தேடி, எப்படியோ கண்டுபிடித்துப் போய் அப்படி ஒன்றும் இல்லை, அந்த சாதாரணமான கல்லறையில் வழக்கமான பாதிரி கல்லறைகள் போல சிலுவையும், பைபிள் வாசகமும் மட்டுமே இருந்தது என்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தார்களாம் – மதிப்பிற்குரிய ஒரு தமிழறிஞர் வாயிலாக நான் நேரடியாகக் கேட்டறிந்த விஷயம் இது.
ஏதோ இந்த கிறிஸ்தவப் பாதிரிகள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக அர்ப்பணித்தார்கள் என்ற ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்தை இங்கு பலகாலம் திட்டமிட்டுப் பரப்பி வந்திருக்கிறார்கள், அந்தப் பொய்மூட்டைகள் ஒவ்வொன்றையும் கட்டவிழ்க்க வேண்டிய காலமிது.