பண்டைத் தமிழர் வாழ்வினை நமக்கு எடுத்துக் காட்டுபவை சங்க இலக்கியங்கள். தனி மனித காதல்- குடும்ப வாழ்க்கையை அகம் எனவும், பல்வேறு சிறு குறு மன்னர்கள்/ தலைவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் ஆட்சி, போர் பற்றி புறம் எனவும் அமாஇந்து உள்ளது. இப்பாடல்கள் முழுவதிலும் தமிழர் இறை நம்பிக்கை, மெய்யியல் தன்மை ஆங்காங்கே வந்துள்ளது.
திருதராட்டிரனின் மூத்த மகன் துரியோதனன் என்பதைக் கூற ஒளிமிக்க ஞாயிற்று மண்டிலத்தில் பகன் (சமஸ்கிருதப் பெயர்) என்ற கண்ணற்றவன் போல முகத்தைக் கொண்ட திருதராட்டிரனின் மூத்த மகன்
கலித்தொகை - 25
வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
'ஐவர்' என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா,
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு,
களி திகழ் கடாஅத்த கடுங் களிறு அகத்தவா, 5
முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல்,
ஒளி உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல,
எழு உறழ் தடக் கையின் இனம் காக்கும் எழில் வேழம்,
அழுவம் சூழ், புகை அழல் அதர்பட மிதித்துத் தம் 10
ஒளிமிக்க ஞாயிற்று மண்டிலத்தின் சமஸ்கிருதப் பெயரான பகன் என்ற கண்ணற்றவனின் முகத்தைக் கொண்ட திருதராட்டிரனின் மூத்த மகன் துரியோதனன் சூழ்ச்சியால் உலகம் போற்றும் ஐவர் பஞ்ச பாண்டவ அரசர்கள் உள் இருக்க,
வேலைப்பாடு மிக்க அரக்கு மாளிகையைக் கட்டுக்கடங்காத நெருப்பு சூழ்ந்து கொண்டதைப் போல், உயர்ந்த மலைக் காட்டில் காய்ந்த மூங்கில்க சூழ வெடித்து பரவும் பெருந்தீயை, தீயினால் ஒளிவிடும் உருவத்தையுடைய அரக்கு மாளிகையை வாயு தேவன் மகனான பீமன் உடைத்துத் தன் நெருங்கிய உடன்பிறப்புகளோடு பிழைத்து வெளியேறியது போல அழகியஆண் யானை கணைமரத்தைப் போன்ற பருத்த துதிக்கையினால் தன் இனத்தைக் காக்கும்
ஐயனே! இவள் நிலைமையைக் கேட்டருள்க.
தமிழர் அனைவரும் இதிகாச, புராணங்களை அறிந்துள்ளமையினால் தான் இப்படி மகாபாரதக் கதை உவமையை புலவர் எடுத்துக் காட்டி உள்ளார்

No comments:
Post a Comment